அண்மைய பதிவுகள்

ரெய்கி

அறிமுகம்

ரெய்கி வகுப்பு

ஆற்றல்

ஆரோக்கியம்

தியானம்

தீட்சை

கர்மா

மனம்

Recent Posts

 • Ebook - ஹோலிஸ்டிக் ரெய்கி

  By Raja Mohamed Kassim →

  ISBN: 9780463406991
  Title: ஹோலிஸ்டிக் ரெய்கி
  Holistic Reiki Tamil
  Author: Raja Mohamed Kassim
  Publisher: Smashwords, Inc.

  Goolge playbooks: http://bit.ly/2UR28KS
  Amazon Kindle: https://amzn.to/2UKPn4A
  Also availabe at other ebook stores

  Download

  வணக்கம்,
  ரெய்கி எனும் அற்புத கலையை அறிந்துக் கொள்ள ஆர்வம் கொண்ட அனைவருக்கும் இந்த புத்தகம் பயனுள்ளதாக அமையும். இந்த புத்தகத்தை பயன்படுத்தி முழுமையாகவும் ஆழமாகவும் ரெய்கியை புரிந்துக் கொள்ளலாம். இந்த புத்தகத்தை ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், ஆரோக்கியம் குறைவாக உள்ளவர்களுக்கு மீண்டும் ஆரோக்கியம் திரும்பவும், மன நிம்மதியை பாதுகாக்கவும், ஆராவிலும் (Aura), உடலின் சக்ராக்களிலும் (Chakra) படிந்திருக்கும் கெட்ட சக்திகளை தூய்மைபடுத்தவும் அவற்றுக்கு சக்தியளிக்கவும் உதவும். குடும்ப உறவுகள், சமுதாயம் மற்றும் பொருளாதார நிலைகளை, மேம்படுத்தவும் உறுதுணையாக இருக்கும்.


 • உண்மையான நோய்களும், நோய்க்கான காரணங்களும்

  By Raja Mohamed Kassim →
  உடலில் ஏதாவது தொந்தரவுகள் தோன்றினால். அந்த தொந்தரவை மட்டுமே பார்த்து பயந்து கொண்டிருப்பார்கள் பலர். அந்த தொந்தரவு ஏன் உருவானது என்று சிந்திக்காமல், எப்படி சரி செய்வது என்பதில் மட்டுமே சிந்தனை இருக்கும். ஒரு நோய் உருவாக காரணமாக இருப்பனவற்றை சரி செய்யாமல் நோயை எவ்வாறு குணப்படுத்துவது?.

  1. கண் நோய்கள், பார்வைக் கோளாறுகள், கண் கட்டிகளுக்கும், கண்கள் காரணம் இல்லை.

  2. சலி, மூக்கடைப்பு, சைனஸ், இளைப்புக்கும் மூக்கு காரணம் இல்லை.

  3. காது வலி, காது அடைப்பு, காதுகளில் அரிப்பு, கேட்கும் திறன் குறைவுக்கும் காது காரணம் இல்லை.

  4. வாய், நாக்கு, உதடு புண்ணுக்கும், வாய் துர்நாற்றத்துக்கும், காரணம் வாயோ, நாக்கோ அல்ல.

  5. தோல் நோய், புண், வெண் குஷ்டம், அலர்ஜி, அரிப்புகளுக்கு, முடி கொட்டுதல், மற்றும் பொடுகுக்கு காரணம் தோல் அல்ல.

  தொந்தரவுகள் தோன்றும் இடத்தில் தான் உண்மையான நோய் இருக்கவேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது. இதனால் தான் என்ன வைத்தியம் செய்தாலும், இந்த நோய்கள் குணமாவதில்லை. இந்த நோய்களுக்கான உண்மைக் காரணத்தை அறிந்து மருத்துவம் செய்தால் தவிர, இவை தீராது. நோயின் மூலக் காரணங்கள் கூட அறியாதவர்கள், இவற்றை சரிசெய்ய நிச்சயமாக முடியாது.

  நோய்கள் பலவாக இருந்தாலும், அவற்றை குணப்படுத்த, சில எளிய வழிமுறைகள் உள்ளன. அவைதான். தனித்திரு, விழித்திரு, பசித்திரு.

  தனித்திரு - கவலை, துக்கம், கர்வம், பயம், எரிச்சல், போன்ற எந்த கெட்ட குணங்களும் மனதை அண்டாமல். நீங்கள் தனி உயிர் எந்த சூழ்நிலைக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை, என்பதை உணர்ந்து தனித்திருங்கள்.

  விழித்திரு - உடலில் என்ன நடக்கிறது? ஏன், எதனால், நடக்கிறது என்று விழிப்பாக பாருங்கள், புரிந்துகொள்ளுங்கள்.

  பசித்திரு - பசி எனும் உணர்வை உணருங்கள். நன்றாக பசி உருவாகும் வரையில் காத்திருங்கள். பசி இல்லாமல் அமிர்தமாக இருந்தாலும் உண்ணாதீர்கள். பசி அடங்கியவுடன்,  உடனே உண்பதை நிறுத்துங்கள்.

  இவை மூன்றையும் பின்பற்றினால். உலகில் உள்ள அனைத்து நோய்களும் சுயமாக குணமாகும்.


 • மனம் ஒரு அற்புத ஆற்றல்

  By Raja Mohamed Kassim →
  மனம் என்பது என்ன?
  மனம் என்பது உடலில் உள்ள ஒரு உறுப்பல்ல மாறாக, மனம் என்பது ஒரு உணர்வு. மனமானது சூட்சம நிலைகளில் செயல்படுகிறது. மனதை உணர முடியுமே ஒழிய வெளிப்படையாக யாராலும் பார்க்கவோ, அதனுடன் தொடர்பு கொள்ளவோ முடியாது.

  பார்த்தல், கேட்டல், சுவைத்தல், நுகர்தல், உணர்தல் எனும் ஐந்து அறிவுகளுக்கு அடுத்ததாக, மனம் என்பது ஆறாவது அறிவாகும். முதல் ஐந்து அறிவுகளும், மற்ற உயிரினங்களுக்கு ஒன்று முதல் ஐந்து வரையில், சில விகிதாச்சாரங்களில் வழங்கப் பட்டிருக்கின்றன. அவை ஒவ்வொரு உயிரினத்திற்கும் மாறுபடும்.

  மனிதர்களுக்கு மட்டுமே ஆறாவது அறிவான மனம் வழங்கப்பட்டிருக்கிறது. சில விலங்குகளுக்கும் மனம் இருந்தாலும் அவற்றின் மனம் மனிதர்களை போன்று முழு ஆற்றலுடன் செயல்படுவது கிடையாது. அதே நேரத்தில் மனிதர்களை போன்று அனைத்து விஷயங்களையும் பதிவு செய்வதும் கிடையாது. மனிதர்களுக்கு மட்டுமே மனம் முழுமையாக செயல்படுகிறது.

  மனம் எவ்வாறு செயல் புரிகிறது? 
  மனமானது மனிதன் பார்க்கும், கேட்கும், நுகரும், சுவைக்கும், உணரும் அனைத்து விஷயங்களையும் பதிவு செய்கிறது. மனிதன் உறக்கத்தில் இருந்தாலும், உணர்ச்சிகளற்று இருந்தாலும், அவ்வளவு ஏன் கோமா நிலையில் இருந்தாலும் கூட மனம் வேலை செய்யும். மனம் பதிவுகள் செய்வது மட்டுமின்றி, பதிவு செய்தவை தொடர்பான மற்ற விஷயங்களையும் ஆராயும். அதே நேரத்தில் மனதின் பதிவுகள் தொடர்புடைய மனிதர்களையும், நிகழ்வுகளையும், விஷயங்களையும், தொடர்பு படுத்தவும் செய்யும்.

  இன்றும் நாம் பெரியவர்களான பிறகும் கூட, சில விஷயங்களை அல்லது சில பொருட்களை பார்க்கும் போதும். சிறு வயதில் இதற்காக ஆசைப்பட்டேன் கிடைக்கவில்லை என்று கூறுவதுண்டு. சில விஷயங்களை செவிமடுக்கும் போது எங்கேயோ கேட்ட ஞாபகம் என்று கூறுவதுண்டு. சில மனிதர்களை பார்க்கும் போதும், சில இடங்களுக்கு செல்லும் போதும், எப்போது சந்தித்த உணர்வுகள் வருவதுண்டு. இவை அனைத்து நம் மனதில் பதிந்த உணர்வுகள் தான்.

  மனதின் திறன் 
  மனதின் திறனை விளக்க பல கட்டுரைகள் எழுத வேண்டும். அவற்றை பின் நாட்களில் எழுத முயற்சிக்கிறேன். இப்போது நீங்கள் புரிந்துக் கொள்வதற்காக ஒரு உதாரணத்தை சொல்கிறேன்.

  சில வருடங்களுக்கு முன்பாக ஒரு பொருளுக்கு ஆசைப்பட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அந்த பொருள் எங்கே தேடியும் கிடைக்கவில்லை, கால போக்கில் மறந்து போனீர்கள். பல வருடங்கள் கழித்து அந்த பொருள் பரிசாகவோ, இனாமாகவோ, கீழே கிடந்தோ, நண்பர்கள், உறவினர்கள் மூலமாக உங்களுக்கு கிடைக்கலாம். அல்லது எதாவது ஒரு கடையிலோ, இடத்திலோ அந்த பொருளை நீங்கள் பார்க்கலாம். இப்போது அந்த பொருளை அடையும் வாய்ப்பும், வசதியும் உங்களிடம் இருக்கலாம்.

  பல வருடங்களுக்கு முன்பாக நீங்கள் ஆசைப்பட்டு, கிடைக்காமல் நீங்களே மறந்துப் போன ஒரு விஷயத்தை கூட உங்கள் மனமானது நினைவில் வைத்திருக்கும். அந்த பொருளை தேடிக்கொண்டிருக்கும். வாய்ப்புகள் அமையும் போது உங்களுக்கும் அந்த பொருளுக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தும். இதைப் போன்ற அனுபவங்கள் பலருக்கு பல சந்தர்ப்பங்களில் வெவ்வேறு விதமாக நடந்திருக்கலாம்.

  பொருட்கள் மட்டுமின்றி, போக விரும்பும் இடங்கள், சந்திக்க விரும்பும் மனிதர்கள், அடைய துடிக்கும் வெற்றிகள், என அனைத்து விசயங்களையும் மனம் பதிவு செய்து, அதற்கான முயற்சியில் தொடர்ந்து செயல் புரிந்துக் கொண்டே இருக்கும். மனிதர்கள் விழிப்பு நிலையில் இருக்கும் போது, மனதுடன் தொடர்பு கொள்ள முடியாது. அதனால் மனதில் இருக்கும் பதிவுகளும், எண்ணங்களும், சிந்தனைகளும், மனிதர்களுக்கு விளங்குவதில்லை.

  மனிதர்களின் மனம் 
  மனதை வெறும் பதிவு செய்யும் இயந்திரமாக கடந்து செல்ல முடியாது. அதையும் தண்டி மனம் பல ஆற்றல்களை கொண்டது. மனம் என்பது இறைவன் நமக்களித்த ஒரு அற்புதமான ஆற்றலாகும். மனமானது எல்லா வல்லமைகளையும் பெற்றது. மனதின் உதவியுடன் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். அமைதியான மனம், நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிப்பதுப் போல் அமைதியற்ற மனமானது நிம்மதியை அளித்து மகிழ்ச்சியை சீரழிக்க கூடியது.

  மனமானது உடல் ஆரோக்கியம் முதல், உடலின் பலம், கல்வி, அறிவு, ஒழுக்கம், செல்வம், நிம்மதி, மகிழ்ச்சி வரையில் அனைத்தையும் நிர்னைக்கக் கூடியது. சீர் கெட்ட மனம் ஒரு யானையையும் பூனையாகிவிடும். ஆரோக்கியமான மனம் ஒரு பூனையைக் கூட யானை பலம் கொண்டதாக மாற்றிவிடும். ஒரு மனிதனுக்கு கல்வி, அறிவு, செல்வம், பெயர், புகழ், மக்கள் என அனைத்தும் இருந்தாலும், அவன் மனம் மட்டும் சீர்கெட்டுவிட்டால், அவனை செல்லாக் காசாக்கிவிடும். இவை அனைத்தும் இல்லாதவனாக இருந்தால் கூட மனம் மட்டும் செம்மையானால், இவை அனைத்தையும் தக்க நேரத்தில் அவனுக்கு கிடைக்க செய்துவிடும்.

  மனதை தீய எண்ணங்களின்றி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கை அழகானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் இருக்கும்.

 • (immune system) இம்மியுன் சிஸ்டம் எனும் பாதுகாப்பு சக்தி

  By Raja Mohamed Kassim →
  (immune system) இம்மியுன் சிஸ்டம் என்றால் நோயெதிர்ப்பு சக்தி என்றுதான் நாம் பொருள் கொள்கிறோம். இம்மியுன் சிஸ்டம் என்றால் உண்மையில் பாதுகாப்பு சக்தி என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். மனித உடலின் முழுமையான செயல்பாட்டுக்கும் ஆரோக்கியத்துக்கும் இந்த இம்மியுன் சிஸ்டமே துணைபுரிகிறது. இந்த பாதுகாப்பு சக்தி (இம்மியுன் சிஸ்டம்) பலகீனமாக இருக்கும் வேளைகளில்தான் மனிதன் நோய்வாய்ப்படுகிறான்.

  பாதுகாப்பு சக்தி (இம்மியுன் சிஸ்டம்) என்றால் என்ன?
  இம்மியுன் சிஸ்டம் என்று தனியாக உடலில் எதுவும் கிடையாது. மனித உடலின் இயற்கை தன்மையான, இயக்க வேலைகளில் ஒன்றுதான் இந்த இம்மியுன் சிஸ்டம். மனித உடல் தன்னை தானே பாதுகாக்கும் வேலையைத்தான் இம்மியுன் சிஸ்டம் என்று அழைக்கிறார்கள். மனித உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லுக்கும் பிரத்தியேகமான அறிவு இருக்கிறது, ஒவ்வொரு செல்லுக்கும் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் ஆற்றலும்  இருக்கிறது.

  என்னைப் பொறுத்தவரையில் இம்மியுன் சிஸ்டம் என்பது நோய் உண்டான பிறகு உடலை குணப்படுத்துவது அல்ல, அல்லது நோய்கள் உருவாகாமல் தடுப்பது மட்டுமல்ல, மாறாக உடலின் முழுமையான பாதுகாப்புக்கு உறுதுணையாக இருக்கும் சக்திதான் இம்மியுன் சிஸ்டம். உடலின் பாதுகாப்பு சக்திக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்.

  ஒருவர் தன்னையே அறியாமல் கெட்டுப்போன உணவை உண்ண முயற்சி செய்தால், கை முதலில் காட்டிவிடும். உணவு கையில் பட்டதும் தோலின் பிசுபிசுப்பு காட்டிவிடும். அடுத்தது மூக்கு கெட்டுப்போன உணவைக் காட்டும். உணவின் கெட்ட வாடையைக் கண்டுபிடித்து அறிவிக்கும். அதைக் கவனிக்காமல் வாயில் போட்டால், வாய் குமட்டல் உணர்வைக் கொடுக்கும். அதையும் கண்டுகொள்ளாமல், உடலையும் மீறி மென்று விழுங்கினால். உடல் வாந்தியின் மூலமாக கெட்டுப்போன உணவுகளை வெளியேற்றிவிடும். அந்த வாந்தியைத் தடுத்தால் வயிற்றுப்போக்கு உண்டாகும். அந்த வயிற்றுப் போக்கையும் தடுக்கும் போது, அந்த கெட்டுப்போன உணவுகள் உடலின் உள்ளேயே தங்கி பல கேடுகளை உடலுக்கு உண்டாக்குகிறது.

  இப்படி தோல், மூக்கு, நாக்கு, வயிறு, குடல் என உடலின் பல பாகங்களும் உடலுக்குள் கெட்ட பொருள் சென்றுவிடாமல் தடுக்கின்றன. உடலின் அறிகுறிகளை எல்லாம், மீறிச் செய்பவர்கள் தான், தனக்குத்தானே சூனியம் வைத்துக்கொள்பவர்கள். உடலுக்கு ஒவ்வாத உணவுகள் உடலின் உள்ளே செல்லும்போது தானே உடலில் பல உபாதைகள் உருவாகின்றன? உடலின் செயல்பாடுகளை கவனித்தால், உடல் கெட்டுப்போன உணவுகள் உடலுக்குள் செல்லாமலேயே பாதுகாக்கிறது. அந்த அளவுக்கு மிக பாதுகாப்பாக இந்த உடலை இறைவன் வடிவமைத்திருக்கிறார்.

  நோயெதிர்ப்பு சக்தியை (இம்மியுன் சிஸ்டம்) பலப்படுத்த
  மனித உடல் முழுமையாக தானியங்கியாக (Automatic) செயல்படும் முறையில்தான் இறைவன் வடிவமைத்திருக்கிறார். அதனால் பாதுகாப்பு சக்தியை (இம்மியுன் சிஸ்டம்), அதிகரிக்க என்று சிறப்பாக நாம் எதையும் செய்ய முடியாது, பாதுகாப்பு சக்தியை (இம்மியுன் சிஸ்டம்) பலப்படுத்த எதையாவது செய்யவோ, சாப்பிடவோ தேவையும் கிடையாது.

  மனித உடலின் அமைப்பு
  மனித உடல் மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. மனிதன் உட்கொள்ளும் ஒவ்வொரு வேலை உணவும், அந்த உணவிலிருந்து உருவாகும் சக்தியும் மூன்றாகப் பிரிக்கப்பட்டு உடலுக்கு பயன்படுகிறது.

  உடலில் உற்பத்தியாகும் சக்தியில் 32% உடல் செயல்பாட்டுக்கும், 32% உடல் செரிமானத்துக்கும், 32% உடலின் பாதுகாப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த செயல்களுக்கு பின்பு மீதமிருக்கும் சக்திகள், சேமிப்பு சக்தியாகவும், அவசரக்கால சக்தியாகவும், உடலில் சேமிக்கப்படுகிறது.

  மீதமிருக்கும் சேமிப்பு சக்திகள்தான் மனிதனின் அவசரகாலத்தில் பயன்படுத்தப்படுகிறது, உதாரணத்துக்கு நாய் துரத்தினாளோ, விபத்து நடந்தாலோ,  உயிருக்கோ, உடைமைக்கோ அச்சுறுத்தல் உண்டானாலோ, தன்னைப் பாதுகாத்துக்கொள்ள உடல் பாதுகாப்பு சக்தியை பயன்படுத்துகிறது. இரசாயன மருந்துகளை நெடுநாட்களுக்கு உட்கொள்பவர்களுக்கு சேமிப்பு சக்தி என்று எதுவுமே இருக்காது. அதனால் தான் நெடுநாட்களாக ஆங்கில மருந்துகள் உட்கொள்பவர்கள், கொடிய உயிர்கொல்லி நோய்களுக்கு ஆளாகிறார்கள். அல்லது ஏதாவது நோய்கள் உண்டானால் முழுவதுமாக உடலாலும், மனதாலும் உடைந்து, சோர்ந்துவிடுகிறார்கள்.

  பாதுகாப்பு சக்தியை (இம்மியுன் சிஸ்டம்) பலப்படுத்தும் வழிமுறைகள்
  மனித உடலில் உருவாகும் எல்லா சக்திகளும் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு செயல்படுகின்றன என்று மேலே பார்த்தோம். அதனால் தேவையற்ற உடல் உழைப்புகளை குறைத்து, ஓய்வெடுத்தால் உடல் செயல்பாட்டுக்கும் ஒதுக்கப்பட்ட 32% சக்தி மிச்சப்படும், உடலுக்கு ஒத்துக்கொள்ளக் கூடிய எளிமையான உணவுகளை மட்டுமே உட்கொண்டால் செரிமானத்துக்கு ஒதுக்கப்பட்ட 32% சக்தியும் மிச்சமாகும். இப்படி உழைப்பிலும், உணவிலும் செலவழிக்க கூடிய சக்திகளை சேமித்தல். சேமித்த சக்திகள் அனைத்தும் முழுமையாக பாதுகாப்பு இயக்க சக்திக்கு வழங்கப்படும். உடலின் பாதுகாப்பு சக்தி (இம்மியுன் சிஸ்டம்), பலப்படும்.

  இதை விட்டுவிட்டு, எந்த மருந்து மாத்திரைகள் உட்கொண்டாலும் பாதுகாப்பு சக்தியை (இம்மியுன் சிஸ்டம்) பலப்படுத்த முடியாது. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் மனித உடல் முழுமையாகத் தானியங்கியாக (Automatic) செயல்படும் முறையில் தான் இறைவன் வடிவமைத்திருக்கிறார். யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. எல்லாம் உடலின் செயல்.

  தடுப்பூசிகள் தேவையில்லை
  மனித உடலுக்கு இயற்கையாகவே பாதுகாப்பு சக்தியும், நோய் எதிர்ப்பு சக்தியும் இருப்பதனால். தடுப்பூசிகள் என்று எதுவுமே மனித உடலுக்கு தேவையில்லை. தடுப்பூசி என்பது வெறும் வணிக நோக்கத்தை கொண்டதே ஒழிய, அதில் எந்த உண்மையும் கிடையாது.


 • எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது எப்படி?

  By Raja Mohamed Kassim →

 • நோயாளிகளின் தீய ஆற்றல்கள் ஹீலர்களை பாதிக்குமா?

  By Raja Mohamed Kassim →
 • ரெய்கியை பயன்படுத்தி கணவன் மனைவி உறவை சரி செய்வது எப்படி?

  By Raja Mohamed Kassim →