அண்மைய பதிவுகள்

ரெய்கி

அறிமுகம்

ரெய்கி வகுப்பு

ஆற்றல்

ஆரோக்கியம்

தியானம்

தீட்சை

கர்மா

மனம்

Recent Posts

 • மனதை அடக்குவது எப்படி?

  By Raja Mohamed Kassim →
  மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கு காரணம்
  தவறு என்று தெரிந்தும் சிலர் தவறுகள் செய்வார்கள். தவறு என்று தெரியாமல் சிலர் தவறுகள் செய்வார்கள். தவறு செய்வதும், பின்பு அதை நினைத்து வருந்துவதும். மீண்டும் தவறு செய்யக் கூடாது என்று நினைப்பதும், மறுபடியும் அதே தவற்றை செய்வதும், பலருக்கு தொடர்கதையாகவே இருக்கிறது. தவறு செய்யாத மனிதர்களே கிடையாது என்று சொல்லும் அளவுக்கு, ஒவ்வொரு மனிதரும் ஏதாவது ஒரு வகையான தவற்றை தெரிந்தோ தெரியாமலோ செய்துகொண்டிருப்பார்கள்.

  சிலர் தீய பழக்கம் என்று தெரிந்தும் அந்தப் பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்று ஆசைப்பட்டும், அதை விட முடியாமல் அவதிப்படுவார்கள். சிலர் இன்றோடு இந்தப் பழக்கத்தை விட்டுவிட வேண்டும், மறந்துவிட வேண்டும் என்று பலமுறை முயன்றும் தோற்றுப்போயிருப்பார்கள்.


  • இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் என்ன காரணம்?
  • மனிதர்கள் ஏன் தவறுகள் செய்கிறார்கள்?
  • அதுவும் தவறு என்று தெரிந்தும் ஏன் மீண்டும் மீண்டும் செய்கிறார்கள்?
  • தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது என்று முடிவு செய்தும் அவர்களை மீறி தவறுகளை செய்வது ஏன்?
  • மனிதர்களை தன்னையும் மீறி தவறுகள் செய்ய தூண்டுவது எது?
  மேலே உள்ள அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரே பதில்தான்! மனம். மனிதன் செய்யும் அனைத்து தவறுகளுக்கும் அவனது மனம்தான் காரணமாக இருக்கிறது. மனிதன் தனது ஐம்பொறிகளான காண்பது, கேட்பது, சுவைப்பது, நுகர்வது, மற்றும் உணர்வதன் மூலமாக அவனது மனதில் உண்டாகும்  பதிவுகளே, அவனை தவறுகள் செய்ய தூண்டுகின்றன.

  மனதுக்கு சரி தவறு என்ற பேதங்கள் தெரியாது. அவனது ஐம்பொறிகள் அனுபவிக்கும் அனைத்தையும் மனதில் பதிவு செய்துகொள்கிறது. அந்த பதிவுகளினால் தோன்றும் எண்ணங்களுக்கும், ஆசைகளுக்கும் ஏற்ப மனம் வேலை செய்கிறது. இந்த பதிவுகள் அதற்கான சந்தர்ப்பமும் சூழ்நிலையும் ஏற்படும் வேளைகளில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்றன.

  மனதின் தன்மை
  இன்று ஒரு மனிதன் செய்யும் தவறுகளுக்கு இன்றோ நேற்றோதான் மன பதிவுகள் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று இல்லை. என்றோ சிறுவயதில் அவன் மனதில் பதிந்த பதிவுகள் கூட அவன் 40 வயதில் தவறுகள் செய்யக் காரணமாக இருக்கலாம்.

  மனதைக் கட்டுப்படுத்த முடியாதா? மனதை அடக்க முடியாத? இந்த கேள்வி அனைவராலும் பல காலங்களாக கேட்கப்பட்டு வருகிறது. மனதை அடக்கவும் அதைக் கட்டுப்படுத்தவும் பலர் பயிற்சிகளும் கொடுக்கிறார்கள். உண்மை என்னவென்றால், மனதை அடக்கவோ கட்டுப்படுத்தவோ யாராலும் முடியாது.

  நாம் பல இதிகாசங்களிலும் புராணங்களிலும் படித்திருப்போம், பெரிய முனிவர்கள் கூட மன இச்சைக்குக் கட்டுப்பட்டு தவறுகள் செய்ததை. இன்றும் நாளிதழ்களிலும் இணையத்திலும் பார்க்கிறோம். உயர்ந்த இடத்தில் இருக்கும் பலர் தங்களின் தகுதிக்கு சம்பந்தமில்லாத ஈன செயல்களை செய்வதை. இவை அனைத்துக்கும் காரணம் அவர்களின் ஐம்பொறிகளின் உதவியுடன் அவர்கள் மனதில் உருவான பதிவுகள் தான்.

  மனதை கட்டுக்குள் வைக்கும் ஒரே வழிமுறை
  அப்படியானால் மனதை கட்டுப்படுத்த வழியே இல்லையா என்று கேட்டால்? ஒரேயொரு வழி இருக்கிறது. அதுதான் மனதினுள் பதிவுகள் உருவாகாமல் பார்த்துக்கொள்வது. மனதில் உருவாகும் பதிவுகள்தான் மனிதர்கள் தவறுகள் செய்யக் காரணமாக இருக்கின்றன. தவறுகளை செய்ய தூண்டக்கூடிய பதிவுகள் உண்டாகாமல் பார்த்துக்கொண்டாலே போதும் மனதினுள் தீய எண்ணங்கள் உண்டாகாது.

  உதாரணத்துக்கு விருப்பமான உணவு எது என்று யாரையாவது கேட்டால் அவர் மனபதிவில் எந்த உணவின் அனுபவம் இருக்கிறதோ, அவற்றில் எது மிகவும் அவரை கவர்ந்ததோ அதை கூறுவார். ஒருவர்கூட, அவர் சுவைத்து கண்டிராத உணவை கூறமாட்டார்கள். அதைப்போல் ஒருவரிடம் உலகிலேயே உனக்கு பிடித்த நபர் யார் என்று கேட்டால், அந்த நபரின் வாழ்கையில் குறுக்கிட்ட அவர் அனுபவத்தில் இருக்கும் யாராவது ஒரு நபரைக் கூறுவார். யாருமே தனக்கு சம்பந்தமில்லாத தான் அறிந்தில்லாத ஒரு நபரைப் பற்றி கூறமாட்டார்கள்.

  ஒரு மனிதனின் விருப்பு வெறுப்புகளுக்குக் காரணம் அவர் மனதில் இருக்கும் பதிவுகள் மட்டுமே. மன பதிவுகளே அனைத்துக்கும் காரணமாக இருப்பதால், நிரந்தரமான விருப்பு வெறுப்பு என்று யாருக்கும் இருக்காது. மன பதிவுகள் மாற மாற அவர்களின் உணர்வுகளும், ஆசைகளும் மாறிக்கொண்டே இருக்கும். அவர்களின் உணர்வுகளுக்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கை முறையும் இருக்கும்.

  தற்போது இருக்கும் தவறான பதிவுகள்
  இதுவரையில் சேர்ந்த மனப் பதிவுகளை அழிக்கவோ மாற்றவோ எவராலும் முடியாது. ஆனால் அந்த தேவையற்ற பதிவுகளை தவிர்க்க முடியும். சிறுவயது முதல் சேர்த்த மனப்பதிவுகள் அனைத்தும் மனதினுள் அப்படியேதான் இருக்கும். தற்போது அந்த தவறான பதிவுகள் சம்பந்தமாக புதிய பதிவுகள் எதுவும் உருவாகவில்லை என்றால், பழைய பதிவுகள் மெல்ல மெல்ல செயல் இழந்துவிடும்.

  உதாரணத்துக்கு, வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்றவர்கள் சில வருடங்கள் கழித்து மீண்டும் தாய்நாடு திரும்பியதும், பழைய நபர்களின், உறவுகளின் பெயர்களை நினைவுகூர சிரமப்படுவார்கள். தான் பிறந்து வளர்ந்த ஊருக்குள்ளேயே  பாதை தடுமாறுவார்கள். பணத்தைக்கூட தான் பணிப்புரிந்த நாட்டின் நாணயத்தின் பெயரால் அழைப்பார்கள். இந்த தடுமாற்றங்களுக்கு காரணம் அந்த நபரின் பழைய பதிவுகள், பல வருடங்கள் பயன்படுத்தாததால் செயல் இழந்துவிட்டன.

  அதைப்போல் நாம் இனிமேல் பதியும் புதிய பதிவுகளை முறையானதாகவும், சரியானதாகவும் வைத்துக்கொண்டால், மனதின் நிலையும், பழக்க வழக்கங்களும் முறையானதாக மாறிவிடும். இதுவரையில் இருந்த தவறான பழக்க வழக்கங்கள் மெல்ல மெல்ல நம்மை விட்டு நீங்கிவிடும்.


 • விலங்குகளின் திரிகால ஞானம்

  By Raja Mohamed Kassim →
  திரிகால ஞானம் அனைத்து உயிரினங்களுக்கும் பிறவியிலேயே இருக்கும். உதாரணத்திற்கு சில வருடங்களுக்கு முன்பு சுனாமி வந்தபோது, கடலில் இருந்து மீன்கள் எதுவும் கரைக்கு வரவில்லை. பல கோடி லிட்டர் கடல்நீர் நிலத்துக்கு வந்த போதும், கடல்வாழ் உயிரினங்கள் எதுவுமே நிலத்துக்கு வரவில்லையே ஏன்? சுனாமி வருவதற்கு முன்பு சில நாட்களாக மீனவர்களுக்கு வலைகளில் மீன்கள் குறைவாகவே கிடைத்தன.

  அலைகள் உயரமாக எழுந்து கரைக்கு செல்லப்போகிறது. நாம் கரையோரம் இருந்தால் நாமும் கரைக்கு சென்றுவிடுவோம் என்பது கரையோரத்தில் வாழ்ந்து கொண்டிருந்த உயிரினங்களுக்கு தெரிந்து அவை ஆழ்கடலுக்குள் சென்றுவிட்டன. கடல்வாழ் உயிரினங்களுக்கு பூமியில் நடக்கவிருக்கும் விஷயங்கள் முன்கூட்டியே தெரிகின்றன என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு அத்தாட்சி.

  அதைப்போல் சுனாமி வந்த பொழுது காடுகளில் வாழ்ந்த விலங்குகளும் செத்ததாக ஒரு செய்திக் கூட நமக்கு எட்டவில்லை. மனிதர்கள் அடைத்து அல்லது கட்டி வைத்து வளர்த்த விலங்குகள் மட்டுமே இறந்தன. மற்றபடி காடுகளில் இயற்கையோடு வாழ்ந்த எந்த விலங்குகளும் மரணிக்கவில்லை. அனைத்து விலங்குகளும் சுனாமி வருவதை முன்கூட்டியே அறிந்து கடலிலிருந்து வெகு தொலைவுக்குச் சென்றுவிட்டன.

  காடுகளில் வாழும் விலங்குகளுக்கு வறட்சி காலம் வரப்போவது முன்கூட்டியே தெரிகிறது. மழை பெய்யப்போவது முன்கூட்டியே தெரிகிறது. கால பருவ மாற்றங்கள் நிகழப்போவதும் முன்கூட்டியே தெரிகிறது.

  இன்றும் கூட நம் கிராமங்களில் விலங்குகளைப் பார்த்தும், பறவைகளைப் பார்த்தும், சில விசயங்களை கணிப்பார்கள். இவற்றையெல்லாம் நாம் மூட நம்பிக்கைகள் என்று சொல்லிக் கொண்டிருப்போம். ஆனால் விலங்குகளுக்குள் திரிகால ஞானம் இன்னும் பயன்பாட்டில் இருக்கிறது என்பதை அறிந்த நம் முன்னோர்கள் அந்த சக்தியை பயன்படுத்திக் கொண்டார்கள்.

  திரிகால ஞானம் அனைவருக்கும் இருக்கும், என்று சொன்னீர்களே அது எங்களுக்கும் இருக்குமா? என்றால் ஆம்! உங்களுக்கும் நிச்சயமாக இருக்கும். ஆனால் அது எந்த நிலையில் இருக்கிறது என்று சொல்வதானால், ஒரு பக்கவாதம் வந்த நபருக்கு இருக்கும் கை கால்களைப் போன்று இருக்கும். இருக்கும் ஆனால் அது முழுமையாக செயல்படாது. பல்லாயிரம் ஆண்டுகளாக மனித இனமும் நம் முன்னோர்களும் திரிகால ஞானத்தை நம்பாததாலும், பயன்படுத்தாததாலும் அவர்களின் வாரிசுகளான நமக்கு அந்த ஆற்றல் உயிர்ப்போடு இல்லை.

  ஆனாலும் நம்முடைய மரபணுவில் எதிர்கால ஞானத்தின் கோட்பாடுகளும் ,அவற்றின் ஆற்றல்களும் நிச்சயமாக இருக்கும். உணவு முறையையும், வாழ்க்கை முறையையும் மாற்றி யோகா, மற்றும் தியானப் பயிற்சிகளை மேற்கொண்டால், திரிகால ஞானத்தை நிச்சயமாக அனைவரும் அடைவது சாத்தியமான ஒன்றுதான்.

 • உடலின் சக்கரங்களும் அதன் தன்மைகளும்

  By Raja Mohamed Kassim →
  1. மூலாதாரம் - Mooladhara - Root/ Base Chakra

  அமைவிடம்: முதுகெலும்பின் ஆக கடைசி பகுதியில், வால் என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளது.
  வர்ணம்: சிகப்பு
  பஞ்சபூதம்: நிலம்
  திறன்: மனிதர்களின் அடிப்படைத்  தேவைகளையும், உணர்வுகளையும் உருவாக்கும், கொடுக்கும், கட்டுப்படுத்தும்.

  2. சுவாதிஸ்தானம்: Svadhisthana – Sacral Chakra

  அமைவிடம்: தொப்புளில் இருந்து இரண்டு அங்குலம்  கீழே அமைந்துள்ளது.
  வர்ணம்: ஆரஞ்சு
  பஞ்சபூதம்: நீர்
  திறன்: மனிதர்களின் ஆசைகளையும், உணர்ச்சிகளையும் உருவாக்குகிறது, கட்டுப்படுத்துகிறது.

  3. மணிபூரகம் Manipura - Solar Plexus Chakra

  அமைவிடம்: தொப்புளுக்கும், நெஞ்சுக்கும் நடுவில் அமைந்துள்ளது.
  வர்ணம்: மஞ்சள்
  பஞ்சபூதம்: நெருப்பு
  திறன்: தன்மானம், தன்னம்பிக்கை மற்றும் தன்மதிப்பை பாதுகாக்கிறது.

  4. அனாகதம் Anahata – Heart Chakra

  அமைவிடம்: நெஞ்சுப்  பகுதியில் இருதயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.
  வர்ணம்: பச்சை
  பஞ்சபூதம்: காற்று
  திறன்: அன்பு, பாசம், கருணை, அமைதி, மகிழ்ச்சி போன்ற உணர்வுகளை உருவாக்கவும் பாதுகாக்கவும் செய்கிறது.

  5. விசுத்தி Vishudha –Throat Chakra

  அமைவிடம்: கழுத்தில் தொண்டைக்  குழியின் பின் அமைந்துள்ளது.
  வர்ணம்: நீலம்
  பஞ்சபூதம்: மரம்
  திறன்: பேச்சுத்  திறன், நேர்மை, ஒழுக்கம் போன்றவற்றை உருவாக்குகிறது, பாதுகாக்கிறது.

  6. ஆக்கினை Ajna – Brow / Third Eye Chakra

  அமைவிடம்: இரு கண்களின் புருவ மத்தியில் அமைந்துள்ளது.
  வர்ணம்: கறுநீலம்
  பஞ்சபூதம்: புத்தி
  திறன்: புத்தி கூர்மையையும், பகுத்தறிவையும், சிந்தனை ஆற்றலையும் பாதுகாக்கிறது.

  7. சஹஸ்ராரம் Sahasrara - Crown Chakra

  அமைவிடம்: தலைக்கு ஒரு அங்குலம் மேலே
  வர்ணம்: கத்தரிப்பு
  பஞ்சபூதம்: பிரபஞ்சம்
  திறன்: இந்தப்பிரபஞ்சத்தின் இரகசியங்களை அறிவிப்பது. ஞானத்தை அடைவது.

 • ரெய்கி சின்னம் (Symbol)

  By Raja Mohamed Kassim →
  ரெய்கியில் பல சின்னங்கள் பயன்படுத்தப் பட்டாலும். சோ-கு ரேய் (Cho-Ku Rei) என்ற சின்னம் தான் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. சோ-கு ரேய் என்பதை பிரபஞ்ச ஆற்றலே ஒன்று கூடுங்கள் என்று மொழிபெயர்க்கலாம். ஹோலிஸ்டிக் ரெய்கியில் ரெய்கி சின்னங்கள் இல்லாமலேயே நோய்களை குணப்படுத்தலாம் மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். ஆனாலும் ரெய்கி சின்னத்தைப் பற்றி தெரிந்து வைத்துக் கொள்வதும் நல்லது தானே.


  சோ-கு ரேய் (Cho-Ku Rei) சின்னம் 1 (உருவாக்க)


  சோ-கு ரேய் (Cho-Ku Rei) சின்னம் 2 (குறைக்க)  சின்னங்களை பயன்படுத்தும் வழிமுறைகள்
  இந்த சின்னங்களை இரண்டு வகைகளில் பயன்படுத்தலாம். பிரபஞ்ச சக்தியை ஒன்று திரட்ட, அனுப்ப முதல் படத்தில் உள்ளது  போலவும்,பிரபஞ்ச ஆற்றலை வெளியேற்ற மற்றும் குறைக்க இரண்டாவது படத்தில் உள்ளது போலவும் வரையலாம்.

  சிகிச்சை செய்பவர் அவரின் இரு உள்ளங்கைகளில் இந்த சின்னத்தை ஆட்காட்டி விரலால் வரைந்துப் பின் இரு உள்ளங்கைகளையும் சிகிச்சைத்  தேவைப்படும் நபரை நோக்கியோ, இடத்தை நோக்கியோ, பொருளை நோக்கியோ காட்டலாம். நெடுந்தூர சிகிச்சைக்கும் சின்னத்தைப் பயன்படுத்தலாம்.

  ஆற்றல் குறைபாட்டால் தொந்தரவுகள் உருவாகும் போது முதல் சின்னத்தையும், ஆற்றல் அதிகமாகி தொந்தரவுகள் உருவானால் இரண்டாவது சின்னத்தையும் பயன்படுத்தலாம். இந்த சின்னங்களை வரைய படங்களில் எண்களின் வழிகாட்டுதலின்படி 1 என்ற எண்ணில் தொடங்கி 5 என்ற எண்ணில் முடிய வேண்டும்.

 • மனிதர்களின் தேடல்

  By Raja Mohamed Kassim →
  ஜப்பானின் ஜென் மார்க்கத்தில் ஒரு அருமையான தத்துவம் இருக்கிறது. “நீங்கள் மலையின் மீது காணும் ஞானம் கீழிருந்து எடுத்து சென்றது தான்” என்பது அந்த தத்துவம். இதன் பொருள் “ஞானத்தை நீங்கள் எங்கேயும் தேடி கண்டுபிடிக்க முடியாது” என்பதாகும். அதைப்போல் நீங்கள் ஞானத்தைத்  தேடி எங்கும் செல்லத் தேவையில்லை. அது உங்களுக்குள் தான் இருக்கிறது என்றும் பொருளாகும்.

  இந்த உலகத்தில் பரம ஏழைகள் முதல் மிகப்பெரும் கோடீஸ்வரர்கள் வரையில், அடிமைகள் முதல் உயரிய அதிகாரத்திலுள்ளவர்கள் வரையில் அனைவருக்கும் உள்ளத்தில் ஒரு தேடல் இருந்துக்கொண்டே இருக்கும். பெரும்பாலான நேரங்களில் பெரும்பாலான நபர்களுக்கு அவர்கள் என்ன தேடுகிறார்கள்? ஏன் தேடுகிறார்கள்? என்பது விளங்குவதில்லை. ஆனால் மனம் எதையோ தேடி அலைகிறது என்பது மட்டும் விளங்கும். மனதில் எப்பொழுதும் ஒரு வெறுமை இருக்கும். எதை கொடுத்தாலும் மனம் திருப்தி அடையாது.

  எனக்கு 14 வயது இருக்கும்போது எனக்குள் தேடல்கள் தொடங்கின. நான் யார்? நான் ஏன் பிறந்தேன்? ஏன் இந்த பூமிக்கு வந்தேன்? எங்கிருந்து இந்த பூமிக்கு வந்தேன்? பிறப்பதற்கு முன்பாக எங்கிருந்தேன்? மரணத்துக்குப்  பின்பாக என்ன நடக்கும்? என்னை யாராவது படைத்தார்களா? படைத்திருந்தால் என்னை ஏன் படைத்தார்கள்? இறைவன் என்று ஒருவர் உண்டா? சொர்க்கம் நரகம் என்பவை இருக்கின்றனவா? சொர்க்கம் நரகம் என்பவை இருந்தால் நான் தவறு செய்ய எல்லா வாய்ப்புகளையும் சக்தியையும் கடவுளே கொடுத்துவிட்டு அந்த தவற்றை செய்த பிறகு என்னை ஏன் நரகத்தில் போடவேண்டும்? மனிதர்கள் எந்த தவறும் செய்யாமல் ஒழுக்கமாக வாழக்கூடிய வகையில் இறைவனால் அவர்களை படைக்க முடியுமா? முடியாதா? முடியுமென்றால் ஏன் அவ்வாறு படைக்கவில்லை?

  இன்னும் பல நூறு கேள்விகள் என்னுள் எழுந்தன. அந்த கேள்விகளுக்கு விடைத்  தேடி பயணித்ததில் பலவற்றை கற்றுக் கொண்டேன். சில தெளிவுகளை அடைந்தேன். அவற்றிலிருந்து சிலவற்றை தான் இந்த இணையதளத்தின் மூலமாக உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.

  மனம்தான் மனிதனின் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் என்று கூறுவார்கள். இவ்வாறு சொல்வதற்கு காரணம் மனிதர்களின் மனம் எதிலும் திருப்தி அடைவதில்லை. மனம் பெரும்பாலான நேரங்களில் திருப்தி அடையாமல் மேலும் மேலும் தேடி அலைவதற்கு காரணம் நாம் மனதை புரிந்துக்  கொள்ளாமல் இருப்பது தான். மனம் எதை நாடுகிறது? எதைத் தேடுகிறது? என்று தெளிவாக கவனித்துப்  புரிந்து கொள்ளாமல், நம் மனதில் இருக்கும் பதிவுகளின் அடிப்படையிலும், நம்பிக்கைகளின் அடிப்படையிலும், வாழ்க்கை முறைகளின் அடிப்படையிலும், மனதை திருப்திப்படுத்த முயலும் போது மனம் ஒருகாலும் திருப்தி அடைவதில்லை.

  நம் உயிரில் ஒரு தேடல் தொடங்கும் போது அல்லது ஒரு தேடல் உருவாகும் போது மனம் அதற்கு உறுதுணையாக சேர்ந்து செயல்படுகிறது. உயிரின் தேவைகளை, தேடல்களை பூர்த்தி செய்யாமல் நம் இச்சைகளை மட்டும் பூர்த்தி செய்ய முயல்வதனால், மனம் திருப்தி அடையாமல் மேலும் மேலும் தேடி அலைந்துக் கொண்டிருக்கிறது. நம் மனதிலும் அமைதி குறைகிறது. எந்த ஒன்றை சிந்திக்கும் போது, நினைத்துப் பார்க்கும்போது, அனுபவிக்கும் போது, வாசிக்கும் போது மனம் மகிழ்ச்சிக்குப்  பதிலாக அமைதியை அடைகிறதோ அதுதான் உண்மையில் உங்கள் உயிர் தேடும் பொருள் என்று அர்த்தம். மனதுக்கு அமைதியையும் சமாதானத்தையும் அளிப்பவை மட்டுமே மனம் தேடும் உண்மையான பொருளாகும்.

 • நோய்களைக் குணப்படுத்தும் மனம்

  By Raja Mohamed Kassim →
  உடல் நலம்பெற வேண்டுமென்றால், முதலில் என் உடலுக்கு நோய்களைக் குணப்படுத்தும் தன்மை இருக்கிறது, என் நோய்கள் முழுமையாக குணமாகும், உடல் நலம் மேம்படும், என்ற நம்பிக்கை மனதில் தோன்ற வேண்டும். நுனிப்புல் மேயும் கதையாக இல்லாமல், அதை ஆழ் மனமும் முழுமையாக நம்ப வேண்டும் . எப்போது என் நோய்கள் குணமாகும் என்ற நம்பிக்கை உங்களுக்குள் தோன்றுகிறதோ, அந்த நொடி முதல், உங்கள் நோய்கள் குணமாகத்  தொடங்கிவிடும்.

  மனம் மட்டும் செம்மையாக இருந்தால், யாரையும் யாராகவும் மாற்றும் ஆற்றல் மனதுக்கு உண்டு. மனம் தான் மனிதன். ஒருவன் முழுமையாக நம்பிக்கை கொள்வானேயானால், புற்றுநோய்க்  கூட மருந்து மாத்திரைகளின்றி சுலபமாகக்  குணமாகும். மனதாலே குணபடுத்த முடியாத நோய்களே, இந்த உலகில் இல்லை. மனதைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள், ஆரோக்கியமாக வாழுங்கள்.


 • ஹோலிஸ்டிக் ரெய்கியினால் அடையக் கூடிய நன்மைகள்

  By Raja Mohamed Kassim →
  முறையாக ரெய்கி தீட்சைப் பெற்று, ரெய்கியை பயிற்சி செய்யும்போது தனி நபர் வாழ்க்கையில் அடையக் கூடிய நன்மைகள்.

  1. மனம் எப்போதும் அமைதியாகவும், சாந்தமாகவும் இருக்கும்.

  2. புத்திக்கூர்மை அதிகரிக்கும். எந்த விசயத்தையும் எளிதாகப் புரிந்துக் கொள்ள முடியும்.

  3. ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். தற்போது நோய்கள் கண்டவராக இருந்தால் அவர்களின் நோய்கள் குணமாகி ஆரோக்கியம் மேம்படும்.

  4. செல்வம் சேர்ப்பது எளிதாக இருக்கும்.

  5. குடும்பத்தாரிடமும், சமுதாயத்திடமும் அவரின் மரியாதையும் செல்வாக்கும் அதிகரிக்கும்.

  6. முகம் வெளிச்சமாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.

  7. ஆண்மை, பெண்மை ஆற்றல் அதிகரிக்கும். இல்லற வாழ்க்கையில் திருப்தி கிடைக்கும்.

  8. பிரபஞ்சத்திடம் இருந்து வழிகாட்டுதல்கள் கிடைக்கும்.

  9. உடல் மற்றும் மனதின் ஆரோக்கியம் மேம்படும்.

  10. ஆரா தெளிவாகவும், சுத்தமாகவும் இருக்கும்.

  11. தீய சக்திகளும், செய்வினைகளும் எளிதில் நெருங்க முடியாது.

  12. அவர்களை சுற்றியிருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் தூய்மையாகிவிடும்.

  13. ஆரோக்கியம் குறைவாக இருந்தால், விரைவாக குணமடைவார்கள்.

  14. உடல் பலமாகவும் வீரியமாகவும் இருக்கும்.


  முறையாக ரெய்கி தீட்சைப் பெற்று, ரெய்கியை பயிற்சி செய்யும்போது குடும்பம், உறவுகள் மற்றும் சமுதாயத்தில் உண்டாகும் மாற்றங்கள்.

  1. இந்த பூமியில் அவர்கள் செய்ய வேண்டியக் கடமைகள் எளிதில் புரிந்துவிடும்.

  2. கணவன் மனைவிக்கிடையில் அன்பும், புரிதலும் அதிகரிக்கும்.

  3. குடும்பத்தினர்கள் மத்தியில் அன்பும், உறவும் அதிகரிக்கும்.

  4. பிள்ளைகள் உடனான உறவின் நெருக்கம் அதிகரிக்கும்.

  5. நண்பர்களுக்கிடையில் மரியாதை கிடைக்கும், முக்கியத்துவம் வழங்கப்படும்.

  6. வாடிக்கையாளர்கள் இவர்களுடன் விருப்பத்துடனும் நம்பிக்கையுடனும் வியாபாரம் செய்வார்கள்.

  7. சமுதாயத்தில் மதிக்கப்படுவார்கள், முக்கியத்துவம் வழங்கப்படும்.

  8. விலங்குகளுடனும், தாவரங்களுடனும் நெருக்கம் உண்டாகும்.

  9. இந்த பூமியில் நடந்துக் கொண்டிருக்கும் விசயங்களும், நடக்கப்போகும் விசயங்களும் இவர்களுக்கு மறைமுகமாக உணர்த்தப்படும்.