ரெய்கி வகுப்பு
ரெய்கி வகுப்பு
அன்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அன்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

எதிரிகளையும் நேசியுங்கள்

மனதில் கோபத்தையும், வெறுப்பையும், பழிவாங்கும் எண்ணத்தையும், சேர்த்து வைப்பது, யாரோ ஒருவர் செய்த தவறுக்காக உங்களுக்கு நீங்களே தண்டனை கொடுத்துக் கொள்வதற்கு சமமாகும். சற்று சிந்தித்துப் பாருங்கள் மனதில் கோபத்தையும், வெறுப்பையும் சேர்த்து வைப்பதனால் உங்களுக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது? அந்த நிகழ்வை நினைத்து நினைத்து வேதனையை அனுபவிப்பது என்னவோ நீங்கள் மட்டும்தான். உங்களுக்கு வேதனையை உருவாக்கியவன் எங்கேயோ மகிழ்ச்சியாக வாழ்கிறான். தப்பு செய்தவன் மகிழ்ச்சியாக வாழும் போது, அந்த துரோகத்தால் பாதிக்கப்பட்ட நீங்கள் ஏன் வேதனையில் வாட வேண்டும்?

மனதில் கோபத்தையும், வெறுப்பையும், பழிவாங்கும் எண்ணத்தையும், சேர்த்து வைப்பது உடலின் சக்தியை குறைக்கிறது. மனதின் ஆரோக்கியத்தையும், உடலின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. மனதிலும் உடலிலும் நோய்கள் உருவாக காரணமாக இருக்கிறது. பழைய விசயங்களை மறந்துவிடுங்கள், எதிரிகளை மன்னித்துவிடுங்கள். துன்பங்களில் இருந்து உங்களுக்கு நீங்களே விடுதலை அளித்துக் கொள்ளுங்கள்.
  
எதிரிகளை மன்னிக்கும் வழிமுறைகள் 
1. எதிரியின் முகத்தை நினைத்துக் கொள்ளுங்கள்.
2. அவரின் பெயரை சொல்லி அழையுங்கள்.
3. அவர் செய்த தவறுகளை நினைத்துப் பாருங்கள்.
4. இப்போது அவர் செய்த தவறுகள் அனைத்தையும் மனதார மன்னியுங்கள்.
5. உங்கள் எதிரியின் பெயரை கூறி, உங்களை மனதார மன்னித்து விட்டேன் என்று அவரிடம் அறிவித்துவிடுங்கள்.
6. எதிரிக்கு உங்களின் அன்பை பரப்புங்கள்.

எதிரிகளை மன்னிப்பது கடினம்தான். ஆனால் எதிரிகளை மன்னிப்பதின் மூலமாகத்தான் நீங்கள் மன நிம்மதியை அடைய முடியும். உங்கள் மனதில் ஒரு எதிரியை நினைத்துக் கொண்டிருக்கும் வரையில் சூட்சம நிலையில் நீங்களும், உங்கள் எதிரியும், அவர் செய்த துரோகமும் இணைக்கப் பட்டிருக்கிறீர்கள். மீண்டும் மீண்டும் உங்கள் எதிரியும் அவர் செய்த தவறுகளும் உங்கள் நினைவில் தோன்றி உங்கள் நிம்மதியை கெடுத்துக் கொண்டே இருக்கும்.

ஒரு எதிரியை மன்னிக்கும் போது நீங்கள் உங்களை அவரிடம் இருந்தும், அவர் செய்த துரோகத்தில் இருந்தும் விடுவித்துக் கொண்டு நிம்மதியையும், மகிழ்ச்சியையும், மன அமைதியையும் அடைகிறீர்கள். மனம் அமைதியாகவும் சுதந்திரமாகவும் இருப்பது மிகவும் அவசியமாகும்.

"எதிரிகளின் மீது நாம் கொண்டிருக்கும் கோபம், எதிரி விரும்பும் வகையில் நமது சக்தியை கரையச் செய்யும்” - தோபாபேட


ரெய்கியும் அன்பும் ஒன்றுதான்

ரெய்கியை பயிற்சி செய்யும் நபர்கள் அனைத்து உயிர்களிடமும் அன்பாக இருக்க வேண்டும். ஒரு மனிதனின் மீதோ, விலங்கின் மீதோ, தாவரத்தின் மீதோ, அன்பு செலுத்துவதற்கு எந்த ஒரு காரணமும் தேவையில்லை. நமது இருப்பே அன்பின் வடிவமாக இருக்க வேண்டும். இவர்கள் என் பெற்றோர்கள், இவர்கள் என் சகோதர சகோதரிகள், இவர்கள் என் உறவினர்கள், இவர்கள் என் நண்பர்கள், என்று எந்த ஒரு காரணமும் இன்றி அனைவர் மீதும் அன்பும், கருணையும், பொழிய கூடிய நபராக நாம் இருக்க வேண்டும். ஒரு உயிரினத்தின் மீது அன்பும் கருணையும் செலுத்துவதற்கு, அந்த உயிரினத்தின் உடலில் குடி கொண்டிருக்கும் உயிரே போதுமானதாகும். நம் உடலில் ஓடும் உயிர்தானே அந்த உடலிலும் ஓடுகிறது.

என் பெற்றோர்கள், என் சகோதர சகோதரிகள், என் உறவினர்கள், என் நண்பர்கள், என் மதத்தைச் சார்ந்தவர்கள், என் ஜாதியைச் சார்ந்தவர்கள், என் ஊரைச் சார்ந்தவர்கள் என்ற காரணத்துக்காக அன்பு செலுத்துவது ஒரு சாதாரண விசயம். அந்த அன்புக்கு பின்னால் ஒரு தேவையும், ஒரு பாதுகாப்பு உணர்வும் இருக்கும். அதே நேரத்தில் நமக்கு எந்த கைமாறும் செய்ய முடியாத பலகீனமான மனிதர்களின் மீதும், விலங்குகள், பறவைகள், தாவரங்களின் மீதும் நாம் காட்டும் கருணையும், பரிவும், பாசமும் தான் உண்மையான அன்பின் வடிவமாகும்.

அனைவர் மீதும் அன்பு செலுத்துங்கள் 
1. அனைவர் மீதும் காரணமின்றி அன்பு செலுத்துங்கள்.
2. அனைவருடனும் கருணையுடனும் பரிவுடனும் நடந்துக் கொள்ளுங்கள்.
3. அனைத்து விலங்குகள் மீதும் கருணையுடனும் பரிவுடனும் நடந்துக் கொள்ளுங்கள்.
4. எல்லா தாவரங்களின் மீதும் கருணையுடனும் பரிவுடனும் நடந்துக் கொள்ளுங்கள்.
5. இயற்கையின் மீது கருணையுடனும் பரிவுடனும் நடந்துக் கொள்ளுங்கள்.
6. இறைவன் மீது அன்புடன் இருங்கள்.

இந்த உலகமே அன்பை அடிப்படையாக கொண்டு தான் இயங்கி கொண்டிருக்கிறது. நீங்கள் பிற உயிர்களின் மீது அன்புடனும், கருணையுடனும், இருக்கும் போது. இயற்கையும் இறைவனும் உங்களின் மீது அன்புடனும் கருணையுடனும் இருப்பார்கள். இந்த உலகில் நீங்கள் எதை மற்றவர்களுக்கு கொடுக்கிறீர்களோ அதுதான் உங்களுக்கும் கொடுக்கப்படும். நல்லதோ கெட்டதோ நீங்கள் கொடுக்கும் அத்தனையும் பல மடங்காக உங்களிடம் நிச்சயமாக ஒரு நாள் திரும்ப வரும்.