ரெய்கி வகுப்பு
ரெய்கி வகுப்பு
ஆரோக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆரோக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உண்மையான நோய்களும், நோய்க்கான காரணங்களும்

உடலில் ஏதாவது தொந்தரவுகள் தோன்றினால். அந்த தொந்தரவை மட்டுமே பார்த்து பயந்து கொண்டிருப்பார்கள் பலர். அந்த தொந்தரவு ஏன் உருவானது என்று சிந்திக்காமல், எப்படி சரி செய்வது என்பதில் மட்டுமே சிந்தனை இருக்கும். ஒரு நோய் உருவாக காரணமாக இருப்பனவற்றை சரி செய்யாமல் நோயை எவ்வாறு குணப்படுத்துவது?.

1. கண் நோய்கள், பார்வைக் கோளாறுகள், கண் கட்டிகளுக்கும், கண்கள் காரணம் இல்லை.

2. சலி, மூக்கடைப்பு, சைனஸ், இளைப்புக்கும் மூக்கு காரணம் இல்லை.

3. காது வலி, காது அடைப்பு, காதுகளில் அரிப்பு, கேட்கும் திறன் குறைவுக்கும் காது காரணம் இல்லை.

4. வாய், நாக்கு, உதடு புண்ணுக்கும், வாய் துர்நாற்றத்துக்கும், காரணம் வாயோ, நாக்கோ அல்ல.

5. தோல் நோய், புண், வெண் குஷ்டம், அலர்ஜி, அரிப்புகளுக்கு, முடி கொட்டுதல், மற்றும் பொடுகுக்கு காரணம் தோல் அல்ல.

தொந்தரவுகள் தோன்றும் இடத்தில் தான் உண்மையான நோய் இருக்கவேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது. இதனால் தான் என்ன வைத்தியம் செய்தாலும், இந்த நோய்கள் குணமாவதில்லை. இந்த நோய்களுக்கான உண்மைக் காரணத்தை அறிந்து மருத்துவம் செய்தால் தவிர, இவை தீராது. நோயின் மூலக் காரணங்கள் கூட அறியாதவர்கள், இவற்றை சரிசெய்ய நிச்சயமாக முடியாது.

நோய்கள் பலவாக இருந்தாலும், அவற்றை குணப்படுத்த, சில எளிய வழிமுறைகள் உள்ளன. அவைதான். தனித்திரு, விழித்திரு, பசித்திரு.

தனித்திரு - கவலை, துக்கம், கர்வம், பயம், எரிச்சல், போன்ற எந்த கெட்ட குணங்களும் மனதை அண்டாமல். நீங்கள் தனி உயிர் எந்த சூழ்நிலைக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை, என்பதை உணர்ந்து தனித்திருங்கள்.

விழித்திரு - உடலில் என்ன நடக்கிறது? ஏன், எதனால், நடக்கிறது என்று விழிப்பாக பாருங்கள், புரிந்துகொள்ளுங்கள்.

பசித்திரு - பசி எனும் உணர்வை உணருங்கள். நன்றாக பசி உருவாகும் வரையில் காத்திருங்கள். பசி இல்லாமல் அமிர்தமாக இருந்தாலும் உண்ணாதீர்கள். பசி அடங்கியவுடன்,  உடனே உண்பதை நிறுத்துங்கள்.

இவை மூன்றையும் பின்பற்றினால். உலகில் உள்ள அனைத்து நோய்களும் சுயமாக குணமாகும்.


(immune system) இம்மியுன் சிஸ்டம் எனும் பாதுகாப்பு சக்தி

(immune system) இம்மியுன் சிஸ்டம் என்றால் நோயெதிர்ப்பு சக்தி என்றுதான் நாம் பொருள் கொள்கிறோம். இம்மியுன் சிஸ்டம் என்றால் உண்மையில் பாதுகாப்பு சக்தி என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். மனித உடலின் முழுமையான செயல்பாட்டுக்கும் ஆரோக்கியத்துக்கும் இந்த இம்மியுன் சிஸ்டமே துணைபுரிகிறது. இந்த பாதுகாப்பு சக்தி (இம்மியுன் சிஸ்டம்) பலகீனமாக இருக்கும் வேளைகளில்தான் மனிதன் நோய்வாய்ப்படுகிறான்.

பாதுகாப்பு சக்தி (இம்மியுன் சிஸ்டம்) என்றால் என்ன?
இம்மியுன் சிஸ்டம் என்று தனியாக உடலில் எதுவும் கிடையாது. மனித உடலின் இயற்கை தன்மையான, இயக்க வேலைகளில் ஒன்றுதான் இந்த இம்மியுன் சிஸ்டம். மனித உடல் தன்னை தானே பாதுகாக்கும் வேலையைத்தான் இம்மியுன் சிஸ்டம் என்று அழைக்கிறார்கள். மனித உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லுக்கும் பிரத்தியேகமான அறிவு இருக்கிறது, ஒவ்வொரு செல்லுக்கும் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் ஆற்றலும்  இருக்கிறது.

என்னைப் பொறுத்தவரையில் இம்மியுன் சிஸ்டம் என்பது நோய் உண்டான பிறகு உடலை குணப்படுத்துவது அல்ல, அல்லது நோய்கள் உருவாகாமல் தடுப்பது மட்டுமல்ல, மாறாக உடலின் முழுமையான பாதுகாப்புக்கு உறுதுணையாக இருக்கும் சக்திதான் இம்மியுன் சிஸ்டம். உடலின் பாதுகாப்பு சக்திக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்.

ஒருவர் தன்னையே அறியாமல் கெட்டுப்போன உணவை உண்ண முயற்சி செய்தால், கை முதலில் காட்டிவிடும். உணவு கையில் பட்டதும் தோலின் பிசுபிசுப்பு காட்டிவிடும். அடுத்தது மூக்கு கெட்டுப்போன உணவைக் காட்டும். உணவின் கெட்ட வாடையைக் கண்டுபிடித்து அறிவிக்கும். அதைக் கவனிக்காமல் வாயில் போட்டால், வாய் குமட்டல் உணர்வைக் கொடுக்கும். அதையும் கண்டுகொள்ளாமல், உடலையும் மீறி மென்று விழுங்கினால். உடல் வாந்தியின் மூலமாக கெட்டுப்போன உணவுகளை வெளியேற்றிவிடும். அந்த வாந்தியைத் தடுத்தால் வயிற்றுப்போக்கு உண்டாகும். அந்த வயிற்றுப் போக்கையும் தடுக்கும் போது, அந்த கெட்டுப்போன உணவுகள் உடலின் உள்ளேயே தங்கி பல கேடுகளை உடலுக்கு உண்டாக்குகிறது.

இப்படி தோல், மூக்கு, நாக்கு, வயிறு, குடல் என உடலின் பல பாகங்களும் உடலுக்குள் கெட்ட பொருள் சென்றுவிடாமல் தடுக்கின்றன. உடலின் அறிகுறிகளை எல்லாம், மீறிச் செய்பவர்கள் தான், தனக்குத்தானே சூனியம் வைத்துக்கொள்பவர்கள். உடலுக்கு ஒவ்வாத உணவுகள் உடலின் உள்ளே செல்லும்போது தானே உடலில் பல உபாதைகள் உருவாகின்றன? உடலின் செயல்பாடுகளை கவனித்தால், உடல் கெட்டுப்போன உணவுகள் உடலுக்குள் செல்லாமலேயே பாதுகாக்கிறது. அந்த அளவுக்கு மிக பாதுகாப்பாக இந்த உடலை இறைவன் வடிவமைத்திருக்கிறார்.

நோயெதிர்ப்பு சக்தியை (இம்மியுன் சிஸ்டம்) பலப்படுத்த
மனித உடல் முழுமையாக தானியங்கியாக (Automatic) செயல்படும் முறையில்தான் இறைவன் வடிவமைத்திருக்கிறார். அதனால் பாதுகாப்பு சக்தியை (இம்மியுன் சிஸ்டம்), அதிகரிக்க என்று சிறப்பாக நாம் எதையும் செய்ய முடியாது, பாதுகாப்பு சக்தியை (இம்மியுன் சிஸ்டம்) பலப்படுத்த எதையாவது செய்யவோ, சாப்பிடவோ தேவையும் கிடையாது.

மனித உடலின் அமைப்பு
மனித உடல் மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. மனிதன் உட்கொள்ளும் ஒவ்வொரு வேலை உணவும், அந்த உணவிலிருந்து உருவாகும் சக்தியும் மூன்றாகப் பிரிக்கப்பட்டு உடலுக்கு பயன்படுகிறது.

உடலில் உற்பத்தியாகும் சக்தியில் 32% உடல் செயல்பாட்டுக்கும், 32% உடல் செரிமானத்துக்கும், 32% உடலின் பாதுகாப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த செயல்களுக்கு பின்பு மீதமிருக்கும் சக்திகள், சேமிப்பு சக்தியாகவும், அவசரக்கால சக்தியாகவும், உடலில் சேமிக்கப்படுகிறது.

மீதமிருக்கும் சேமிப்பு சக்திகள்தான் மனிதனின் அவசரகாலத்தில் பயன்படுத்தப்படுகிறது, உதாரணத்துக்கு நாய் துரத்தினாளோ, விபத்து நடந்தாலோ,  உயிருக்கோ, உடைமைக்கோ அச்சுறுத்தல் உண்டானாலோ, தன்னைப் பாதுகாத்துக்கொள்ள உடல் பாதுகாப்பு சக்தியை பயன்படுத்துகிறது. இரசாயன மருந்துகளை நெடுநாட்களுக்கு உட்கொள்பவர்களுக்கு சேமிப்பு சக்தி என்று எதுவுமே இருக்காது. அதனால் தான் நெடுநாட்களாக ஆங்கில மருந்துகள் உட்கொள்பவர்கள், கொடிய உயிர்கொல்லி நோய்களுக்கு ஆளாகிறார்கள். அல்லது ஏதாவது நோய்கள் உண்டானால் முழுவதுமாக உடலாலும், மனதாலும் உடைந்து, சோர்ந்துவிடுகிறார்கள்.

பாதுகாப்பு சக்தியை (இம்மியுன் சிஸ்டம்) பலப்படுத்தும் வழிமுறைகள்
மனித உடலில் உருவாகும் எல்லா சக்திகளும் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு செயல்படுகின்றன என்று மேலே பார்த்தோம். அதனால் தேவையற்ற உடல் உழைப்புகளை குறைத்து, ஓய்வெடுத்தால் உடல் செயல்பாட்டுக்கும் ஒதுக்கப்பட்ட 32% சக்தி மிச்சப்படும், உடலுக்கு ஒத்துக்கொள்ளக் கூடிய எளிமையான உணவுகளை மட்டுமே உட்கொண்டால் செரிமானத்துக்கு ஒதுக்கப்பட்ட 32% சக்தியும் மிச்சமாகும். இப்படி உழைப்பிலும், உணவிலும் செலவழிக்க கூடிய சக்திகளை சேமித்தல். சேமித்த சக்திகள் அனைத்தும் முழுமையாக பாதுகாப்பு இயக்க சக்திக்கு வழங்கப்படும். உடலின் பாதுகாப்பு சக்தி (இம்மியுன் சிஸ்டம்), பலப்படும்.

இதை விட்டுவிட்டு, எந்த மருந்து மாத்திரைகள் உட்கொண்டாலும் பாதுகாப்பு சக்தியை (இம்மியுன் சிஸ்டம்) பலப்படுத்த முடியாது. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் மனித உடல் முழுமையாகத் தானியங்கியாக (Automatic) செயல்படும் முறையில் தான் இறைவன் வடிவமைத்திருக்கிறார். யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. எல்லாம் உடலின் செயல்.

தடுப்பூசிகள் தேவையில்லை
மனித உடலுக்கு இயற்கையாகவே பாதுகாப்பு சக்தியும், நோய் எதிர்ப்பு சக்தியும் இருப்பதனால். தடுப்பூசிகள் என்று எதுவுமே மனித உடலுக்கு தேவையில்லை. தடுப்பூசி என்பது வெறும் வணிக நோக்கத்தை கொண்டதே ஒழிய, அதில் எந்த உண்மையும் கிடையாது.


கர்ப்பிணிப் பெண்களுக்கு ரெய்கி எவ்வாறு உதவும்? - How do Reiki helps pregnant woman's?

ADR எனும் எமன் - மருந்துகளின் பக்க விளைவுகள்

ஆங்கிலத்தில் ADR என்று அழைக்கப்படும் இந்தத் தொந்தரவு, இந்த காலகட்டத்தில் பல நோயாளிகளை வாட்டி வதைக்கும் தொந்தரவாக உருவெடுத்துள்ளது. உண்மையில் இப்படி ஒரு நோய் உருவானதும், இந்த நோயினால்தான் நாம் பல உடல் உபாதைகளை அனுபவிக்கின்றோம் என்பதும் பல நோயாளிகளுக்கு தெரிவதில்லை. மற்றும் தெரியாமல் மறைக்கப்படுகிறது.

பல நோயாளிகள் இன்று அனுபவிக்கும் பெரும்பாலான உடல் உபாதைகள் நோய்களினால் உருவானவை அல்ல மாறாக ஏ.டி.ஆரினால் உருவாக்கப்பட்டவை.

ADR என்றால் என்ன?
ஏ.டி.ஆரின் முழு விளக்கம் ADR "Adverse drug reaction" அதாவது எதிர் எதிர் மருந்துகளின் பக்கவிளைவுகள். ஆங்கில மருத்துவர்கள் கொடுக்கும் அனைத்து மருந்துகளும் முழுக்க முழுக்க உடலுக்கு ஒவ்வாத இரசாயனங்களினால் ஆனவை. இது மருந்து கொடுக்கும் மருத்துவர் உட்பட அதனை உட்கொள்ளும் நோயாளி வரையில் அனைவருக்கும் தெரியும். தெரிந்தே நோயாளிகளும் உட்கொள்கிறார்கள் அவர்களின் குழந்தைகளுக்கும் கொடுக்கிறார்கள்.

ஆங்கில மருத்துவத்தின் கேடுகளை பற்றிய விழிப்புணர்வு இல்லாத இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், மலேசியா போன்ற ஏழை மற்றும் வளரும் நாடுகளில்தான் ஆங்கில மருத்துவர்கள் கொடுப்பதை (medicine) மருந்து என்று அழைக்கிறார்கள் ஆனால் மேற்கத்திய மற்றும் வளர்ந்த நாடுகளில் இவற்றை (drugs) போதைப் பொருள் என்றே அழைக்கிறார்கள். ஆங்கில மருத்துவர்கள் கொடுப்பது மருந்து அல்ல, நோயாளிகள் தன் நோயை உணராமல் இருக்க கொடுக்கப்படும் போதைப் பொருட்கள் மட்டுமே.

ADR உருவாக்கும் உடல் தொந்தரவுகள்
ADR "Adverse drug reaction" அதாவது எதிர் எதிர் மருந்துகளின் பக்கவிளைவுகள் என்பது, இரண்டு வெவ்வேறு இரசாயன மருந்துகளை ஒரே நேரத்தில் உட்கொள்ளும் போது உண்டாகும் பக்க விளைவாகும். ஆங்கில மருத்துவம் மட்டுமல்ல, சித்த, யுனானி, ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற மருந்துகளுக்கும் இது பொருந்தும்.

உதாரணத்துக்கு ஒரு நீரிழிவு (இனிப்பு நீர்) நோயாளியை எடுத்துக்கொள்வோம். அவருக்கு இரத்த அழுத்தமும், அசதியும் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஆங்கில மருத்துவர் அவரின் நீரிழிவுக்கு ஒரு மருத்து கொடுக்கிறார். இரத்த அழுத்தத்துக்கு ஒரு மருந்து கொடுக்கிறார். உடல் தெம்புக்கும் ஒரு மருந்து கொடுக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.

மேலே கூறப்பட்ட எல்லா தொந்தரவுகளுக்கும் மருந்துகள் இரசாயனங்களில் இருந்துதான் உருவாக்கப்படுகின்றன. எல்லா மருந்துகளும் தனி தனியே சோதிக்கப்படுகின்றன. உயிருக்கு ஆபத்து இல்லை என்று நிரூபிக்கப்பட்டு மனிதர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

ஏ .டி.ஆரின் - பக்கவிளைவுகள் எங்கு தொடங்குகின்றன?
மேலே உள்ள தொந்தரவுகளுக்கு மருத்துவர் குறைந்தது மூன்று முதல் ஐந்து மருந்துகள் வரையில் கொடுப்பார். அவர் கொடுக்கும் மருந்துகள் அனைத்துமே தனி தனியாக சோதிக்கப் பட்டவை. தனி தனியே சாப்பிடும் போது உயிருக்கு ஆபத்து இல்லை ஆனால் இரண்டு மருந்துகள் என்பது வெவ்வேறு இரசாயன கலவைகளாகும். இரண்டு வெவ்வேறு இரசாயன கலவைகள் ஒன்றாக வயிற்றுக்குள் சென்றால் என்ன நடக்கும்?

இது யாருக்கும் தெரியாது. மருந்து கொடுக்கும் மருத்துவருக்கும் தெரியாது. மருந்து தயாரிக்கும் மருந்து கம்பெனிகளுக்கும் தெரியாது.

இரண்டு வெவ்வேறு இரசாயன கட்டமைப்பு கூறுகள் ஒன்றாகச் சேரும்போது அது மூன்றாவதாக ஒரு விளைவை உண்டாக்குகிறது. மூன்று, நான்கு, ஐந்து என மாத்திரைகள் அதிகரிக்கும் போது அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து உருவாக்கும் விளைவுகளை யாராலும் கணிக்க முடியாது.

ஏ .டி.ஆரின் - நடைமுறை உதாரணம்
தேநீரை தனியாக சாப்பிடும்போது நன்றாக இருக்கும் காப்பியும் தனியாக சாப்பிடும்போது நன்றாக இருக்கும். ஆனால் இரண்டையும் ஒன்று கலந்தால் என்ன ஆகும்? தேநீர், காப்பியுடன், ஹார்லிக்ஸ் கலந்தால் என்ன ஆகும்? அதன் சுவை எப்படி இருக்கும்?அதனுடன் பூஸ்ட் கலந்தால்? அதில் பெப்சி கலந்தால்? இந்த ஐந்து பானங்களின் கலவையை சிறிது கற்பனை செய்துபாருங்கள்.

ஐந்து மாத்திரைகளை ஒன்றாக சாப்பிடும் போது இதுதான் உடலின் உள்ளே நடக்கிறது.

ஏ .டி.ஆர் - உருவாக்கும் பக்கவிளைவுகள் எப்படி இருக்கும்?
இந்தக் கேள்விக்கு இந்த உலகத்தில் யாராலும் பதில் சொல்ல முடியாது. அப்படியே சொன்னாலும் அது சரியானதாக இருக்கவும் முடியாது. ஐந்து வகையான மாத்திரை கலவையை பத்து நபர்களுக்கு கொடுத்தால் அதன் விளைவு ஒரே மாதிரியாக இருக்காது, அதற்குக்  காரணம், மருந்துகளின் விளைவு என்பது நோயாளியின் நோயின் தன்மை, உடல் வாகு, வாழ்க்கை முறைகள், உணவு முறைகள், மனபக்குவம் இப்படி பல விசயங்களை சார்ந்து மாறுபடும்.

இதனால்தான் சிலருக்கு இரசாயன மருந்துகள் ஒத்து போகின்றன சிலருக்கு கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றன. இன்று உலகில் வினோதமான சில நோய்கள் தோன்றுவதற்கும் எ.டி.ஆர் தான் காரணம்.

ஏ .டி.ஆர் - எச்சரிக்கை
சிலருக்கு ஆங்கில மருந்துகளை உட்கொண்ட பின்பு ஏதாவது தொந்தரவுகள் புதிதாக உருவானால் அல்லது இருக்கின்ற தொந்தரவு அதிகரித்தால், அது நோயின் தாக்கம் அல்லது அலர்ஜி என்று நம்மை நாமே சமாதானபடுத்திக் கொள்கிறோம் அல்லது மருத்துவர்கள் நம்மை சமாதானப்படுத்துவார்கள். ஆனால் ஏன் அந்த மாத்திரைகளை உட்கொண்ட பின்பு இந்த புதிய தொந்தரவுகள் உண்டானது என்று சிந்திக்கும் வரையில் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்காது.

நோய்களை குணப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு தீராத நோய்களிலும், தீவிர நோய்களிலும் சென்று சிக்கிக்கொள்ளாதீர்கள். பல ஆங்கில மருந்துகளை ஒன்றாக உட்கொள்ளும் போது மட்டுமின்றி, புட்டியில் அடைக்கப்பட்ட சித்த, யுனானி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், போன்ற மருந்துகளை ஒன்றாக உட்கொள்ளும் போதும் இது போன்ற விளைவுகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன.

மருந்து மாத்திரைகள் மட்டுமின்றி, நாம் அனுதினமும் பயன்படுத்தும் உணவுகளில் கலக்கப்படும் இரசாயனங்களும், அழகு சாதன பொருட்களில் கலக்கப்படும் இரசாயனங்களும், மற்றும் நாம் பயன்படுத்தும் மற்ற பொருட்களில் கலக்கப்படும் இரசாயனங்களும் ஏ .டி.ஆரை உருவாக்க வாய்புகள் உள்ளன. அதனால் இரசாயனங்களின் பயன்பாட்டைத்  தவிர்த்துவிடுங்கள்.

“இயற்கைக்குத் திரும்புங்கள், ஆரோக்கியமாக வாழுங்கள்"


அனைத்து நோய்களையும் குணமாக்கும் வழிமுறைகள்

இக்கட்டுரையை நோய் கண்டவர்களுக்காகவும், நோய்களுக்கு மருத்துவம் செய்பவர்களுக்காகவும் எழுதுகிறேன். பல வருடங்களாக மருத்துவம் செய்தும் நோய்கள் ஏன் குணமாகவில்லை என்று குழம்புவோருக்கும் இந்த கட்டுரையில் பதில் உள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ விருப்பப்படுபவர்களும் இந்த கட்டுரையை வாசியுங்கள். கட்டுரையை வாசிக்கும் முன்பாக ஒன்றை முதலில் விளங்கிக் கொள்ளுங்கள்.

அனைத்து வகையான நோய்களுக்கும், தொந்தரவுகளுக்கும், உபாதைகளுக்கும், இயலாமைக்கும் நிச்சயமாக ஒரு மருத்துவமோ, தீர்வோ இருக்கும். மருத்துவமோ, தீர்வோ இல்லாத தொந்தரவுகள் யாருக்கும் உருவாவதில்லை.

தலைவலி முதலாக எயிட்ஸ் வரையில் அனைத்து நோய்களுக்கும் ஏதாவது ஒரு தீர்வு நிச்சயமாக இருக்கும். மருத்துவம் தெரியாதவர்களிடமும், மனித உடல் அமைப்பை முழுமையாக அறியாதவர்களிடமும் சிக்கிக்கொண்டு, குணபடுத்த முடியாத நோய்கள் உண்டு என்ற தப்பான எண்ணத்தை வளர்த்துக் கொள்ளாதீர்கள். குறிப்பாக அனைத்து நோய்களுக்கும் ஆங்கில மருத்துவமே தீர்வு என்ற தவறான முடிவுக்கு வராதீர்கள். இன்று பெரும்பாலானோர் தங்கள் நோய்கள் குணமாகாமல் நிரந்தர நோயாளிகளாகவே வாழ்வதற்கு முக்கிய காரணமாக இருப்பது, ஆங்கில மருத்துவமே அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு என்று நம்புவதுதான்.

எந்த ஒரு நோய்க்கும் நிரந்தர தீர்வை தேட வேண்டுமே ஒழிய தற்காலிகமான தீர்வை நாடக்கூடாது. ஒரு நோயை முழுமையாக குணப்படுத்த வேண்டுமென்றால் முதலில் அந்த நோயின் தொடக்கத்தையும், அதன் மூலகாரணத்தையும் அறிந்துக் கொள்ள வேண்டும். நோயின் மூல காரணத்தை அறியாமல் யாராலும் எந்த நோயையும் குணப்படுத்த இயலாது.

நோய்களை பற்றிய சில முக்கிய குறிப்புகள்
1. வலியோ தொந்தரவோ இருக்கும் இடத்தில் தான் நோய் இருக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது.

2. தொந்தரவுகள் உண்டான உடன் தான் நோய் தோன்றியது என்று அர்த்தம் கிடையாது. சிறுவயது முதலாக சிறிது சிறிதாக சேர்ந்த கழிவுகளே பின்னாளில் உடலில் தொந்தரவாக வெளிப்படுகின்றன.

3. உடலில் சேரும் கழிவுகளே உடல் உறுப்புகளின் இயக்கத்தை தடுக்கின்றன, கட்டுப்படுத்துகின்றன.

4. உடலில் சேரும் கழிவுகளே அனைத்து வலிகள், இயலாமை, தொந்தரவுகள் மற்றும் நோய்களுக்கு மூல காரணமாக இருக்கின்றது.

5. உடலில் சேரும் கழிவுகளே அனைத்து உபாதைகளுக்கும் மூல காரணமாக இருப்பதனால், அந்த கழிவுகளை வெளியேற்றுவதும், புது கழிவுகள் உடலில் சேராமல் தடுப்பதுமே மருத்துவமாக இருக்க வேண்டும்.

6. எப்போதும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ ஆசைப்படுவோர், உடலில் சேர்ந்துள்ள கழிவுகளை முதலில் வெளியேற்ற வேண்டும். மேலும் புது கழிவுகள் உடலில் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

7. நீங்கள் எந்த வைத்தியம் செய்தாலும், ஆங்கில மருத்துவமோ, சித்த மருத்துவமோ, யுனானியோ, ஹோமியோபதியோ, அக்குபஞ்சரோ, எந்த மருத்துவமாக இருந்தாலும், அவர்கள் செய்யும் ஒரே மருத்துவம் உடலில் சேர்ந்த கழிவுகளை வெளியேற்றுவதாக மட்டுமே இருக்க வேண்டும்.

8. உடலின் நோய்களை குணப்படுத்த உடலால் மட்டுமே முடியும். எந்த மனிதனாலும் நிச்சயமாக முடியாது.

9. மருத்துவர்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை, கழிவுகளை வெளியேற்ற உடலுக்கு உறுதுணை புரிவது மட்டுமே.

10. கழிவுகளை மட்டும் வெளியேற்றிவிட்டால் போதும் உடல் தன்னை தானே குணப்படுத்திக் கொள்ளும்.

11. கழிவுகள் உடலில் சேர முக்கிய காரணமாக இருப்பது இரண்டு. ஒன்று செரிமானம் கோளாறு மற்றொன்று மலச்சிக்கல். இவை இரண்டையும் ஒழுங்குப்படுத்த வேண்டும்.

12. உடலில் கழிவு சேரும் மற்ற காரணங்களை முந்தைய கட்டுரைகளில் வாசிக்கலாம்.

நோய்களை குணப்படுத்தும் வழிமுறை உதாரணம்
ஒருவர் மூச்சுவிட சிரமப்படுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருடைய இந்த தொந்தரவுக்கு ஆங்கில மருத்துவர்கள், பல பெயர்கள் சூட்டுவார்கள், ஆனால் உண்மையில் அவருடைய தொந்தரவு என்ன? மூச்சு விட சிரமமாக உள்ளது அவ்வளவு தானே. இதை எவ்வாறு குணப்படுத்துவது?.

உண்மையில் இந்த நோயாளியை குணப்படுத்துவது மிகச் சுலபம் ஆனால் சில மருத்துவர்கள் அதை செய்யமாட்டார்கள். அந்த நோயாளியை வைத்து பணம் பண்ணுவதற்காக அவரின் நோய் குணமாகாமல் பார்த்துக் கொள்வார்கள், அல்லது அந்த நோயின் தீவிரத்தை அதிகமாக்குவார்கள்.

இந்த நோயாளியை குணபடுத்த என்ன செய்ய வேண்டும்? முதலில் மூச்சுவிட உடலுக்கு எந்த உறுப்பு துணைப் புரிகிறது? நுரையீரல். மூச்சுவிட சிரமமாக இருந்தால் அல்லது மூச்சு தொடர்பான தொந்தரவுகள் இருந்தால் நுரையீரலுக்கு மருத்துவம் செய்ய வேண்டுமே ஒழிய, மூச்சுவிட உதவி செய்கிறேன் என்று மூக்குக்கு மருத்துவம் செய்யக் கூடாது.

அவர் நோய் முழுமையாக குணமாக
1. நுரையீரலில் சேர்ந்திருக்கும் கழிவுகளை முதலில் வெளியேற்ற வேண்டும்.

2. எவ்வாறு கழிவுகள் சேர்ந்தன என்பதைக் கண்டறிந்து; புதுக் கழிவுகள் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

3. நுரையீரலுக்கு சக்தி அளிக்க வேண்டும்.

4. ஒழுங்கான வாழ்க்கை முறைகளையும், உணவு முறைகளையும் கற்றுத்தர வேண்டும்.

5. இவற்றைச் செய்தால், உடலே அவரின் நோய்களை சுயமாக குணப்படுத்திவிடும். தொந்தரவுகள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும்.

6. அந்த ஆரோக்கியம் நிரந்தரமாக நிலைத்தும் இருக்கும்.

நோய்களைக் குணப்படுத்துவது எவ்வளவு சுலபம் பார்த்தீர்களா?எந்த மருத்துவர் இவற்றைச் செய்கிறாரோ அவர் மட்டுமே உண்மையான மருத்துவர். மூச்சுத்  திணறல் என்றதும் மூக்கில் கேஸ் வைப்பதும், வாயில் ஸ்பிரே அடிப்பதும்  எந்த காலத்திலும் நிரந்தரமான தீர்வாக அமையாது. அந்த நபர் இறுதிவரையில் நோயாளியாகவே வாழ நேரிடும்.

மருந்துகளை உட்கொள்ளும் வரையில் மூச்சு சுலபமாக விடலாம், இந்த ஸ்பிரே அடிக்கும் போது மூச்சு சுலபமாக விடலாம் என்றும், மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதை நிறுத்தினால் உங்கள் உயிருக்கு நாங்கள் உத்தரவாதம் இல்லை என்றும் மிரட்டி மக்கள் பணத்தைப்  பறிக்கும் கொள்ளை கூட்டத்திடம் சிக்கிக்கொள்ளாதீர்கள்.

மருத்துவம் செய்யும் வழிமுறைகள்
இந்த மருத்துவம் செய்யுங்கள், அந்த மருத்துவம் செய்யாதீர்கள் என்று நான் பரிந்துரைக்க மாட்டேன். உங்கள் உடல், உங்கள் நோய், உங்கள் பணம், உங்கள் விருப்பம். ஆனால் மருத்துவம் செய்யும் வழிமுறைகளை மட்டும் விளக்குகிறேன். மருத்துவரை காண சென்றால்..

1. உங்களுக்கு உருவாகியிருக்கும் தொந்தரவுகளின் மூல காரணத்தைக்  கேளுங்கள். குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதைப் போன்று, தொந்தரவுகளுக்கு பெயர்களை மட்டுமே சூட்டி உங்களை ஏமாற்றப் பார்ப்பார்கள். ஏமாறாதீர்கள். நோயைப்பற்றிய தெளிவாக விளக்கம் கேளுங்கள்.மூல காரணம் கேளுங்கள், கூறவில்லை என்றால் அவரிடம் மருத்துவம் செய்யாதீர்கள், கிளம்பிவிடுங்கள்.

2. உங்கள் தொந்தரவுகளை தவிர்க்கும் வழிமுறைகளை கேளுங்கள். இனிமேல் அந்த தொந்தரவு உண்டாகாமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்று கேளுங்கள்.

3. அவர்கள் கொடுக்கும் மருந்து / சிகிச்சை என்ன செய்யும், எவ்வாறு நோய்களைக்  குணபடுத்த உதவும் என்று கேளுங்கள்.

4. அவர்கள் கொடுக்கும் மருந்துகளின் / சிகிச்சையின் பக்கவிளைவுகளை தெளிவாக கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.

5. அனைத்துக்கும் மேலாக அந்த மருத்துவர் எவ்வாறு நடந்துகொள்கிறார், எவ்வாறு பேசுகிறார் என்பதை கவனியுங்கள். உங்களை பயமுறுத்தும் நோக்கத்துடனோ, மரண பயம், நோயின் பயம் உருவாக்கும் பாணியிலோ பேசினால், பேச்சை நிறுத்திவிட்டு கிளம்பி விடுங்கள்.

6. நோயாளிகளுக்கு நம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுப்பவர் மட்டுமே உண்மையான மருத்துவர். பயத்தை உருவாக்குபவன் ஏமாற்றுக்காரன்.

7. அந்த மருத்துவர் மன தைரியத்தை கொடுத்தால், அவர்கள் கொடுக்கும் மருந்து உடலின் கழிவுகளை வெளியேற்றும் என்றால், உடலுக்குத் தெம்பை கொடுக்கும் என்றால், அவர் கொடுக்கும் மருந்து உடலுக்குத் தீங்கு விளைவிக்காது என்றால், தொடர்ந்து வைத்தியம் செய்யுங்கள். இல்லையேல், வேறு நல்ல மருத்துவரை / மருத்துவத்தை நாடுங்கள்.மனிதர்களின் ஆரோக்கியத்தை அளக்கும் வழிமுறைகள்

மனிதர்களின் ஆரோக்கியத்தை அளந்து பார்க்கும் சில வழிமுறைகளான ஸ்கேன், எக்ஸ்ரே, லேப் டெஸ்ட், யூரின் டெஸ்ட், மோஷன் டெஸ்ட் போன்ற எதுவுமே தேவையில்லை. ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்யவும் தேவையில்லை. கீழே குறிப்பிடப்பட்ட ஐந்து விஷயங்களை கவனித்தாலே போதுமானது.

1. தரமான பசி
2. தரமான தாகம்
3. திருப்தியான உறக்கம்
4. முழுமையான கழிவு நீக்கம்
5. மன அமைதி

1. தரமான பசி
உழைப்புக்குத்  தகுந்த பசி இருக்க வேண்டும். உழைப்பு குறைவாக இருந்தால் பசியின் அளவும் குறைவாக இருக்க வேண்டும். 1 நாளைக்கு குறைந்தது 2 வேளைகள் பசி உணர்வு உண்டாக வேண்டும். உட்கொண்ட உணவு எளிதில் ஜீரணமாக வேண்டும். உணவை உட்கொண்ட பிறகு வயிறு உப்புசம், வயிற்றில் பாரம், அசதி, தூக்கம் உண்டாகக் கூடாது.

2. தரமான தாகம்
உழைப்புக்கு ஏற்ற தாகம் இருக்க வேண்டும். அளவான தாகம் உருவாக வேண்டும். உதடு காய்வது தாகம் அல்ல. தாகத்துக்கு வெறும் தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும். புட்டியில் அடைத்த, சுவை, மனம், இரசாயனம் கலந்த நீரை அருந்தக் கூடாது.

3. திருப்தியான உறக்கம்
இரவு படுத்த 10 நிமிடங்களில் உறங்கிவிட வேண்டும். இடையில் காலை வரையில் எழுந்திருக்கக் கூடாது. தூங்கி எழும்போது அசதி இருக்கக் கூடாது. உறக்கத்திலிருந்து எழுந்ததும் உடல் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். மனம் அமைதியாக இருக்க வேண்டும்.

4. முழுமையான கழிவு நீக்கம்
தினமும் காலையில் சுலபமாக மலம் கழிக்க வேண்டும். மலம் முழுமையாகவும் சுலபமாகவும் வெளியேற வேண்டும். மலம் கழித்த திருப்தி இருக்க வேண்டும். சிறுநீர் சுலபமாக வெளியேற வேண்டும். சிறுநீர் கழித்த திருப்தி இருக்க வேண்டும்.

5. மன அமைதி
மனம் அமைதியாக இருத்தல் வேண்டும். எந்த சூழ்நிலையிலும் மனதில் அச்சம், குழப்பம், சோர்வு உருவாகக் கூடாது. அளவுக்கு மீறிய மகிழ்ச்சி, கவலை, பயம், துக்கம், கோபம், தாழ்வு மனப்பான்மை, மன உளைச்சல் உருவாகக் கூடாது.
மனம் எப்பொழுதும் சமநிலையில், நிதானமாக இருக்க வேண்டும்.

பசி, தாகம், உறக்கம், கழிவு நீக்கம், மன அமைதி
மேலே குறிப்பிடப்பட்ட ஐந்து செயல்களும் தடைப்பட்டாலும், அவற்றை செய்ய சிரமத்தை எதிர்நோக்கினாலும், குறைந்தாலும், அதிகரித்தாலும், ஆரோக்கிய குறைபாடும், நோய்களும் உருவாக வாய்ப்புகள் உண்டு.

ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ள
பசியின்றி உணவு உண்பது கூடாது. தாகமின்றி தண்ணீர் அருந்தக் கூடாது. இரவு 10 மணி முதல் காலை 4 மணிவரையில் கண்டிப்பாக உறங்க வேண்டும். தினமும் காலையில் கழிவுகளை வெளியேற்ற வேண்டும். மனதை எப்போதும் அமைதியாகவும் சாந்தமாகவும் வைத்திருக்க வேண்டும்.

மேலே கூறப்பட்ட ஐந்தும் சரியாகவும், அளவாகவும் இருந்தால், ஒரு மனிதன் நிச்சயமாக ஆரோக்கியமாக இருப்பான், ஆரோக்கியமாக இருக்கிறான். நோய்களைக்  கண்டு அச்சப்படத் தேவையில்லை. எந்த நோயாக இருந்தாலும், எவ்வளவு கடுமையாக இருந்தாலும். மேலே குறிப்பிடப்பட்டவற்றை சீர் செய்தால், நிச்சயமாக அனைத்து நோய்களும் சுயமாக குணமாகும்.

உங்கள் உடலின் கட்டளைகளை புரிந்துக் கொண்டு, உங்கள் உடலை நீங்கள் கவனித்தால், உங்கள் உடல் உங்களை கவனித்துக் கொள்ளும்.


நோய்களைக் குணப்படுத்தும் வழிமுறைகள்

ஒருவர் நோய் வாய்ப்பட்டால் வைத்தியர் (மருத்துவர்) அவரை பரிசோதித்து, அவரின் உபாதைகளை அறிந்து, உடல் காட்டும் அறிகுறிகளைக் கொண்டு நோயாளியின் உண்மையான நோயை கண்டறிய வேண்டும். அந்த நோய் உடல் சம்பந்தப்பட்டதா? மனம் சம்பந்தப்பட்டதா? என்பதை கண்டறிய வேண்டும். நோயின் மூலத்தை அறிந்த பின்பு தான் மருத்துவம் செய்ய வேண்டும்.

மன நிம்மதி 
உடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க மன நிம்மதியும், மன அமைதியும் மிகவும் அவசியமானது. மனிதர்களின் பெரும்பாலான நோய்கள் மனதில் உண்டாகும் மாறுபாட்டாலேயே உருவாகின்றன.

உதாரணம் 1: ஒரு குழந்தையை மிரட்டினால் அல்லது பயமுறுத்தினால் அந்தக் குழந்தை பயத்தில் சிறுநீர் கழித்துவிடுகிறது. அந்தக் குழந்தையின் உடலில் என்ன நடந்தது? ஏன் அந்தக் குழந்தை சிறுநீர் கழித்தது?

உண்மையில் என்ன நடந்தது என்றால், அந்தக் குழந்தையின் மனதில் உண்டான அதிகப்படியான பயம் மனதின் சமநிலையை கெடுத்தது. அந்த பாதிப்பு சிறுநீர் பையை பாதித்து, சிறுநீர் சுயமாக வெளியேறத் தொடங்கியது. மனதில் உண்டாகும் பயமானது சிறுநீரகங்கள், சிறுநீர் பை, கர்ப்பப்பை, ஆண்மை மற்றும் உடலின் பல உறுப்புகளை பாதிக்கக் கூடியது. அதிகப்படியான பய உணர்வு உள்ளவர்களுக்கு மேலே குறிப்பிட்ட உறுப்புகளில் சில தொந்தரவுகள் உருவாகக் கூடும். அச்ச உணர்வுகளை நீக்கி விட்டால் அந்த பாதிப்புகள் நீங்கிவிடும்.

உதாரணம் 2: ஒரு வீட்டில் துக்ககரமான நிகழ்வுகள் நடக்கும் போது அந்த வீட்டைச் சார்ந்தவர்களுக்கு பசி உண்டாவதில்லை. மரணம் நடந்த வீட்டில் இதை கண்கூடாக அனைவரும் காணலாம். நாள் முழுதும் சாப்பிடாவிட்டாலும் அந்த வீட்டுக் குடும்ப உறுப்பினர்களுக்குப் பசி என்ற உணர்வு உண்டாவதில்லை. கவலையுடன் இருக்கும் மனிதர்கள் கூட எனக்கு பசியில்லை, உணவு வேண்டாம் என்பார்கள்.

இந்த சூழ்நிலையில் என்ன நடக்கிறது என்றால் துக்கம், சோகம், கவலை போன்ற உணர்வுகள் வயிற்றை பாதிக்கின்றன. வயிறு பாதிப்புக்கு உள்ளானதால் அது உணவைச் சீரணிக்கும் தன்மையில் இருக்காது. அதனால் அவர்களுக்குப் பசி உண்டாகாது.

மனதின் அமைதியும், சம தன்மையும் உடலின் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமானது. அதனால் யாருக்காவது உடல் நலம் பாதிப்படைந்தால், உடலை மட்டும் சோதிக்காமல், நோயாளியுடன் உரையாடி அவருக்கு மனம் தொடர்பான பாதிப்புகள் ஏதாவது இருக்கின்றனவா என்பதையும் அறிந்துக் கொள்ள வேண்டும்.
ஆரோக்கியத்தை மீட்டு தக்க வைத்துக் கொள்ள

ஆரோக்கியம் என்பது இன்றியமையாத ஒன்று. இந்த உலகில் நீங்கள் அடைய நினைப்பது எதுவாக இருந்தாலும், அதை அடைய உங்களுக்கு அடிப்படைத் தேவையாக இருப்பது உடலின் ஆரோக்கியம். ஆரோக்கியம் என்பது மனிதனின் அடிப்படை உரிமையாக இருந்தாலும், அதை எவ்வாறு தக்கவைத்துக் கொள்வது என்று பெரும்பாலான மனிதர்களுக்குத் தெரிவதில்லை. ஆரோக்கியம் மனிதனின் உள்ளேதான் இருக்கின்றது என்பதை உணராமல், மருந்து, மாத்திரை, வைத்தியம் என்று பலர் அலைந்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆங்கில மருத்துவம் மேற்கொள்பவர்கள், அந்த மருத்துவத்தை மேற்கொண்டு, மீண்டும் முழுமையான ஆரோக்கியம் பெற்றதாக  யாரையும் நான் இதுவரையில் பார்த்ததில்லை. அலோபதி (மேற்கத்திய) மருத்துவத்தில் ஒரு சில வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. ஒன்று, மரணம் வரையில் நோயாளியாகவே வாழ்ந்து, தினமும் மருந்து மாத்திரைகளை உட்கொள்வது. இரண்டு, நோய் உண்டான உறுப்புகளை நீக்கிவிட்டு ஊனமாக தொந்தரவுகளுடன் வாழ்வது. அல்லது மருந்துகளின் மற்றும் இரசாயனங்களின் பக்கவிளைவுகளால் நோய் முற்றி அல்லது புதிய நோய்கள் உருவாகி மரணமடைவது. நோய்களை எவ்வாறு குணப்படுத்துவது என்று ஆங்கில மருத்துவத்துக்கு தெரியாது. காரணம், அவர்கள் நோய்களின் உண்மையான மூல காரணங்களை கண்டறிவதில்லை. மாறாக அவர்கள் நோய்களின் அறிகுறிகளுக்கு மட்டுமே மருத்துவம் செய்பவர்கள்.

ஆங்கில மருத்துவம் மட்டுமின்றி பெரும்பாலான மருத்துவங்கள் நோயாளிகளின் நோய்களைத் தீர்ப்பதில் தோல்வி கண்டுள்ளன. இதற்குக் காரணம், அவர்களுக்கு மனிதர்களைப் பற்றிய முழுமையான புரிதல்கள் கிடையாது. மனிதன் என்பவன் உடல், மனம், ஆற்றல் மற்றும் உயிரின் கலவை என்பதை உணராமல், உடலுக்கு மட்டுமே மருத்துவம் செய்து எந்தப் பயனுமில்லை. நோய்கள் மனதிலும், ஆற்றலிலும், கர்மாவினாலும் உருவாகலாம்.

உடலில் உருவாகும் நோய்களுக்கு உடலிலும், மனதில் உருவாகும் நோய்களுக்கு மனதிலும், ஆற்றலினால் உருவாகும் நோய்களுக்கு ஆற்றலிலும் மருத்துவம் செய்ய வேண்டும். கர்மாவினால் உண்டாகும் நோய்களை மனதார ஏற்றுக்கொண்டு அவற்றை அனுபவிப்பதே, அவற்றை குணப்படுத்தும் வழியாகும். கர்ம வினைகளினால் உண்டாகும் நோய்களை குணப்படுத்த முயற்சி செய்தாலும் கர்மா கணக்கு தீரும் வரையில் அவற்றை குணப்படுத்த முடியாது.

ஒரு நோயை முழுமையாக குணப்படுத்த வேண்டுமென்றால் அந்த நோய் ஏன்? எங்கே? எவ்வாறு? உருவானது என்பதை கண்டறிய வேண்டும். நோயின் மூல வேரை கண்டறியாமல் ஒரு சிறு புண்ணைக் கூட யாராலும் குணப்படுத்த முடியாது. இதற்கு உதாரணம் ஆங்கில மருத்துவர்கள், சர்க்கரை நோயாளிகளின் கால்களில் புண்களை குணப்படுத்த தெரியாமல் காலை வெட்டிக் கொண்டிருக்கிறார்கள். சாதாரண புண்ணை ஆற்றத் தெரியாத மருத்துவத்தை நம்பி பலர் தங்களின் உயிரையும் ஒப்படைக்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக: ஒருவருக்கு வயிறு வலிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த வயிற்று வலியை முழுமையாக குணப்படுத்த வேண்டுமென்றால் அந்த வயிற்று வலி எங்கே? ஏன்? எதனால்? உருவானது என்பதை முதலில் கண்டறிய வேண்டும். அதை விட்டு விட்டு வயிறு வலித்தால் இதை சாப்பிட வேண்டும் அல்லது அந்த மருந்தை சாப்பிட வேண்டும் என்று தொடங்கினால், அந்த வலி தற்காலிகமாகக் குறையலாம். ஆனால், அந்த வலி மீண்டும் வரக் கூடும். உடலின் மற்ற பகுதிகளுக்கும் வலி மாறக்கூடும். புதிய தொந்தரவுகள் வேறு வடிவிலும் உருவாகலாம் அல்லது சாதாரண வலியாக இருந்தது கொடிய நோயாகவும் மாறலாம்.

உடலில் வலிகள் உண்டாக பல காரணங்கள் இருக்கலாம். வலிக்கும் பகுதியில் சக்தி குறைவாக இருக்கலாம், உடலில் கழிவின் தேக்கம் அதிகமாக இருக்கலாம். அந்த வலி ஏதாவது ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம், மன அழுத்தமாக இருக்கலாம், அல்லது மனதில் உண்டான கவலை, பயம், துக்கம் போன்றவை வலிகள் உண்டாக காரணமாக இருக்கலாம்.

உடலில் தொந்தரவுகள் உண்டானால் அந்த தொந்தரவின் மூலத்தைக் கண்டறியாமல் எவ்வாறு மருத்துவர்கள் நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியும்? ஒரு இயந்திரம், கணினி, அல்லது ஆய்வுக் கூடத்தின் அறிக்கைகளைக் கொண்டு அனைத்தையும் அறிந்துக் கொள்ள முடியுமா? நிச்சயமாக யாராலும் முடியாது. இதனால் தான் இயந்திரங்களின் உதவியினால் கண்டறியப்படும் எந்த நோயும் குணமாவதில்லை. ஒரு இயந்திரம் (மிஷின்) ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவற்றை மீண்டும் கூறுமே ஒழிய அதற்கு எந்த அறிவும் கிடையாது. இயந்திரம் சொல்வது சரியாகத்தான் இருக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது.

மனதில் தோன்றும் நோய்களையும், சக்தி தட்டுப்பாட்டால் உண்டாகும் நோய்களையும் கண்டறியக் கூடிய இயந்திரம் இதுவரையில் கிடையாது. ஒரு நோயாளியுடன் அமர்ந்து அவருடன் நேரம் செலவழித்து பொறுமையாகவும் விரிவாகவும் பேசினால் ஒழிய உண்மையான நோயின் மூலக் காரணத்தைக் கண்டறிய முடியாது.

உடலில் வலி என்று ஆங்கில மருத்துவரிடம் சென்றால் அவர் வலி தெரியாமல் இருக்க மாத்திரைகளைப் பரிந்துரைக்கிறார். அந்த மாத்திரைகள் வலியை குணப்படுத்துமா? அல்லது வலியை மறைக்க மட்டும் உதவுமா? நிச்சயமாக அந்த மாத்திரைகள் வலிகளை குணப்படுத்துவது கிடையாது. மாறாக, அந்த மாத்திரைகள் நோயாளி தன் வலியை உணராமல் இருக்க உணர்வு மண்டலங்களை கட்டுப்படுத்துகிறது. வலியை உருவாக்கிய நோயும், பாதிப்படைந்த உறுப்பும், மேலும் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன. பாதிப்புகளும், நோய்களும் பெரிதாகும். இதனால் தான் ஆங்கில மருத்துவத்தில் பெரும்பாலான நோயாளிகள் நோய்கள் குணமாகாமல் மேலும் நோய்கள் மோசமாகி மரணிக்கிறார்கள்.


நோய்களை குணப்படுத்தும் உண்மையான மருத்துவர்

உண்மையான மருத்துவர் 
நோயாளிகளின் நோய்களை குணப்படுத்துவது தாங்கள் அல்ல என்பதை, ரெய்கி சிகிச்சை அளிக்கும் அனைவரும் உணர வேண்டும். சிகிச்சை பெறுபவரின் உடலில் கலக்கும் பிரபஞ்ச ஆற்றல் தான் அவரின் நோய்களையும், வேதனைகளையும், துன்பங்களையும் நீக்க துணைப் புரிகிறது என்பதை உணர வேண்டும்.

ரெய்கி சிகிச்சை அளிப்பவர் அல்லது மற்ற இயற்கையைச் சார்ந்த சிகிச்சையை அளிப்பவர் நான்தான் சிகிச்சை அளிக்கிறேன், நான்தான் குணப்படுத்துகிறேன் என்ற எண்ணம் தோன்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நான் தான் மக்களுக்கு நோய்களை குணப்படுத்துகிறேன், துன்பங்களில் உதவுகிறேன் என்பன போன்ற எண்ணங்கள் உருவாக தொடங்கிவிட்டால் அவருக்குள் ஆணவமும், கர்வமும் உண்டாகி விட்டது என்று அர்த்தம். 

"நடப்பன அனைத்தும் அவன் செயல், அவன் அருளாலே, அவன் உதவியைக் கொண்டு நான் என் முயற்சியை செய்கிறேன். முடிவை இறைவன் கையில் ஒப்படைக்கிறேன்", என்று நல்லதோ கெட்டதோ அனைத்தையும் இறைவன் மீது சாற்றி விட வேண்டும். நான் தான் செய்கிறேன் என்ற எண்ணத்துடன் செய்தால், முயற்சிகள் வெற்றி பெறாமல் போகலாம். மேலும் மற்றவர்களின் கர்மாக்களையும் நாம் சுமக்க நேரிடலாம். 

நோய்களை குணப்படுத்தும் 5 வழிமுறைகள் 
ஒரு மனிதர் நோய்வாய்ப்படும்போது அதை முழுமையாக குணப்படுத்த அவர் ஐந்து அடிப்படை ஒழுக்கங்களைக் கடைபிடிக்க வேண்டும். இந்த ஐந்து அடிப்படை ஒழுக்கங்களைக் கடைபிடிக்கும் போது அவர் விரைவாக குணமடைவார். இந்த ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்கவில்லை என்றால் என்னதான் உயரிய மருத்துவம் செய்தாலும், நவீன மருத்துவம் செய்தாலும், அவரின் உடலும் மனமும் குணமடைய தாமதமாகும். 

1. உணவை உட்கொள்ளும் முறைகள் 
உணவு உண்ணும் பழக்கத்தை முதலில் முறைப்படுத்த வேண்டும். பசித்தால் மட்டுமே பசியின் அளவுக்கு உணவை உட்கொள்ள வேண்டும். அந்த உணவு உடலுக்கு ஒத்துக்கொள்ளக் கூடியதாகவும் எளிதில் ஜீரணிக்கக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். 

2. தண்ணீர் அருந்தும் முறை 
தேவையில்லாமல் தாகம் இல்லாமல் தண்ணீர் அருந்தக் கூடாது. தாகம் உண்டானால் மட்டுமே தண்ணீர் அருந்த வேண்டும். சீனி, வர்ணங்கள், வாசனைகள், இரசாயனங்கள், போன்றவை கலக்கப்பட்ட பானங்களை அருந்தக் கூடாது. சுடவைத்த அல்லது அதிகமாக வடி கட்டப்பட்ட தண்ணீரை அருந்தக் கூடாது. 

3. உடலுக்கு போதிய ஓய்வு வேண்டும் 
உடலில் சோர்வு உண்டானால் ஓய்வெடுக்க வேண்டும். அசதியாக இருக்கும் போது வற்புறுத்தி வேலைசெய்யக் கூடாது.  

4. இரவு உறக்கம் அவசியம் 
இரவு 9 மணிக்கெல்லாம் உறக்கம் வரவில்லை என்றாலும் படுக்கைக்குச் சென்றுவிட வேண்டும்.  

5. மன அமைதி அவசியம் 
மனதை கோபம், வெறுப்பு, பொறாமை, பயம், எரிச்சல், கர்வம் போன்ற தீய எண்ணங்கள் இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். 

இந்த 5 விசயங்களை சரி செய்யும் போதே உடல் பாதி குணமாகிவிடும். மீதியை ரெய்கி சிகிச்சையின் மூலம் குணப்படுத்தி விடலாம். 

மனிதனின் உடல்கள்

ரெய்கி மற்றும் மருத்துவம் பயில்வதற்கு முன்பாக மனிதன் என்றால் யார் என்று முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மனிதன் என்பவன் நம் கண்களால் காணக்கூடிய பூதவுடல் மட்டுமே அல்ல. 4 உடல்களின் கலவையே மனிதன் என்று அழைக்கப்படுகிறான். மனிதர்களிடம் நான்கு உடல்களைத் தாண்டி மேலும் சில விசயங்கள் இருந்தாலும் இந்த நான்கு உடல்கள்தான் மனிதர்களின் ஆரோக்கியத்தையும் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன.

இந்த நான்கு உடல்களும் மனிதனின் ஆரோக்கியத்தையும் மன அமைதியையும் பாதுகாக்க தனது பங்கை ஆற்றி கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு உடலுக்கும் ஒரு தனி இயல்பு இருந்தாலும் இந்த நான்கு உடல்களும் ஆரோக்கியமாகவும் சமநிலையாக இருக்கும்போது மட்டுமே மனிதன் ஆரோக்கியமாகவும் அமைதியாகவும் வாழ முடியும்.

(மனிதனின் 4 உடல்கள்)

மேலே குறிப்பிடப்பட்ட நான்கு உடல்களும் ஒன்றாகத்தான் செயல்படும். ஒன்றோடு ஒன்று இணைந்து, ஒன்றுக்கு ஒன்று உறுதுணையாகவும், ஒன்றுக்கு ஒன்று உதவியாகவும் செயல்படுகிறது. இந்த நான்கு உடல்களில் ஒன்றினால் கூட மற்றதின் துணை இல்லாமல் சுயமாக செயல்பட முடியாது.

உதாரணத்திற்கு:
உடல் இருந்தும் உயிர் இல்லாவிட்டால் அதை மனிதன் என்று அழைப்பதில்லை பிணம் என்றே அழைக்கிறோம். உடலும் உயிரும் இருந்தும் புத்தி செயல்படவில்லையென்றால் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று அழைக்கிறோம். அனைத்தும் இருந்தும் ஆற்றல் இல்லாவிட்டால் நோய்வாய்ப்படுகிறார்.

ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், மன அமைதியை பாதுகாக்கவும், சிறப்பான வாழ்க்கையை வாழவும், இந்த நான்கு உடல்களையும் பாதுகாப்பதும், ஆரோக்கியமாக வைத்திருப்பதும், மிக முக்கியமாகும்.