ரெய்கி வகுப்பு
ரெய்கி வகுப்பு
ஆற்றல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆற்றல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Grounding / தீய ஆற்றல்களை அழித்தல்


Grounding எனப்படுவது நம் உடலுக்குள் இறங்கி கொண்டிருக்கும் ஆற்றல்களை நிறுத்துவது அல்லது நாம் சிகிச்சை அளிக்கும் நபரின் உடலில் இருந்த தீய ஆற்றல்களை அழிப்பது.

ஒரு நோயாளிக்கோ, பிரச்சினைகள் உள்ளவர்களுக்கோ, சிகிச்சை அளிக்கும் போது அவரின் உடலில் இருக்கும் தீய ஆற்றல்களை முதலில் சுத்தம் செய்ய வேண்டும். அந்த தீய ஆற்றல்களை அழிக்காமல் அப்படியே விட்டு விட்டால், சிகிச்சை நடந்த இடத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கக் கூடும். அல்லது, அந்த தீய ஆற்றல்கள் மற்றவர்களின் உடலில் சேரக்கூடும். அதனால் சிகிச்சை அளிக்கும் நபர் அந்த தீய ஆற்றல்களை அழித்து விட வேண்டும்.

அடுத்ததாக ஒரு நபருக்கு சிகிச்சை அளிக்கும் போது, நம் உடலில் இறங்கும் பிரபஞ்ச ஆற்றல் சில வேளைகளில் கட்டுப்படாமல் தொடர்ந்து நம் உடலுக்குள் இறங்கி கொண்டே இருக்கக் கூடும். அதனால் சிகிச்சை அளிக்கும் நபர்கள் சிகிச்சை முடிந்ததும் பிரபஞ்ச ஆற்றலை துண்டித்துக் கொள்ள வேண்டும். ஆற்றல் தொடர்ச்சியாக உடலுக்குள் கிரகித்தால் உடலின் ஆற்றல் அதிகரித்து உடலில் சில உபாதைகள் தோன்றலாம், தூக்கம் இன்மை உருவாகலாம். இவை இரண்டையும் எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.

இயற்கையுடன் ஆற்றலை துண்டிக்க
ஒரு நபருக்கு சிகிச்சை அளித்து முடித்தவுடன் ஆற்றலுடனான தொடர்பை துண்டிக்க, ஆற்றலுக்கும் அதன் உதவிக்கும் நன்றி கூறி, மனதாலே, "சிகிச்சை முடிந்தது, ஆற்றலின் தொடர்பு துண்டிக்கட்டும்", என்று நினைத்தாலே போதும், ஆற்றலின் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிடும்.

அல்லது, இரண்டு கைகளையும் தேய்த்து எண்ணத்தால் நினைத்தாலும் ஆற்றல் துண்டிக்கப்பட்டுவிடும். அல்லது, நீங்களாக ஒரு புதிய யுக்தியையும் உருவாக்கிக் கொள்ளலாம்.

கல் உப்பை பயன்படுத்தி தீய ஆற்றல்களை அழித்தல்
ஒரு பாத்திரத்தில் கல்லுப்பு அல்லது மலை உப்பை வைத்துக் கொள்ளவும். அல்லது, ஒரு பாத்திரத்தில் கல்லுப்பு அல்லது மலை உப்பு கலந்த தண்ணீரை வைத்துக் கொள்ளவும். கைகளால் நோயாளியின் உடலை (scan) ஸ்கேன் செய்தால் தீய ஆற்றல் தேங்கி இருக்கும் பகுதியை அடையும் போது அந்த தீய ஆற்றலை நம்மால் உணர முடியும். அந்த தீய ஆற்றலை நம் எண்ணத்தால் பிடிக்க வேண்டும். கைகளால் பிடிப்பதை போன்று பிடிக்க வேண்டும். பிடித்த தீய ஆற்றலை உப்பில் அல்லது உப்பு கலந்த நீரில் போட வேண்டும்.

ஒவ்வொரு முறை சிகிச்சை அளித்த பிறகும் கைகளை உப்பிலோ உப்பு கலந்த தண்ணீரிலோ கழுவுவது நல்லது. இதன் மூலம் தீய ஆற்றல்கள் நம் மீது அண்டாமல் தடுக்க முடியும்.

தீய ஆற்றல்களைப் புதைத்தல்
நோயாளியின் தீய ஆற்றல்களை கைகளால் மேலே குறிப்பிட்டபடி பிடித்து எண்ணத்தால் ஒரு குழி தோண்டி அதை அந்த குழியில் போட வேண்டும். சிகிச்சை முடிந்த பிறகு அந்த குழியை எண்ணத்தால் மூடிவிட வேண்டும்.

சிகிச்சை அளிப்பவரின் உடலில் இருக்கும் அளவுக்கு அதிகமான ஆற்றல் உடலிலிருந்து வெளியேறட்டும் என்ற எண்ணத்துடன் கால்களில் செருப்பில்லாமல் தரையிலும் நிற்கலாம்.

ஆற்றல்களை தண்ணீரில் வீச
சிகிச்சை பெறுபவரின் உடலில் இருக்கும் தீய ஆற்றல்களை பிடித்து ஓடும் தண்ணீரில் கழுவலாம். ஆற்று நீரில் அல்லது ஓடும் குழாய் தண்ணீரில் கைகளை கழுவலாம். கைகளை கழுவும் போது தீய ஆற்றல்களை கழுவுகிறேன் என்ற நோக்கம் இருக்க வேண்டும். நீர் வீழ்ச்சி, ஆறு அல்லது கடலில் தீய ஆற்றல்களை வீசலாம்.

ஆற்றல் (Energy)


ஆற்றல் (Energy) ஒவ்வொரு மனிதனுக்கும், விலங்குக்கும், தாவரத்திற்கும் மிகவும் அவசியமானது. ஆற்றல் உயிர்களை வாழ வைக்கிறது. ஆற்றல் குறைபாடே உயிர்களைக் கொல்கிறது. மனிதர்களுக்கு உணவு, தண்ணீர், இயற்கை, மழை, பயிற்சிகள், தியானம், பிரார்த்தனை, வழிபாடு போன்றவற்றால் ஆற்றல் கிடைக்கிறது.

உணவு பழக்கங்கள் 
உடலுக்கு ஒத்துக் கொள்ளும் உணவுகளையும், எளிதாக ஜீரணிக்க கூடிய உணவுகளையும் உட்கொள்ளும் போது உடலின் ஆற்றலை அதிகரிக்கலாம். உடலுக்கு ஏற்ற உணவு எனும் போது அது ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபடலாம். ஒரு தாய்க்கும், சேய்க்கும் கூட உணவின் தேவைகள் மாறுபடலாம். பழங்களும், காய்கறிகளும் மட்டுமே அனைத்து மனிதர்களுக்கும் ஒத்துக்கொள்ளக் கூடிய உணவாகும். அவற்றில் மட்டுமே மனித உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன.

வழிபாடுகள் மற்றும் பயிற்சிகள் 
தொழுகை, வழிபாடு, பிரார்த்தனை, தியானம், யோகா, தைச்சி, மூச்சு பயிற்சி, மற்றும் மற்ற ஆன்மீக பயிற்சிகளின் மூலமாக மனித உடலின் ஆற்றலை அதிகரிக்கலாம், மேலும் தக்க வைக்கலாம். இவ்வாறான பயிற்சிகள் உடலின் ஆற்றல் சீர்கெடாமல் தடுப்பதோடு, சீராக செயல்படவும் உதவும்.

இயற்கையோடு இணைதல்
காடு, மலை, கடல், ஆறு, அருவி, குளம், புல்வெளி, போன்ற இடங்களில் கால்களில் செருப்பின்றி நடக்கும் போதும், அமைதியாக அமர்ந்திருக்கும் போதும், குளிக்கும் போதும் பிரபஞ்ச ஆற்றல் உடலில் அதிகரிக்கும். சீர்கெட்ட ஆற்றல் சரி செய்யப்படும். மேலும் ஆற்றலும், இயற்கையின் தொடர்பும் மேம்பாடு அடையும்.

நேர்மறை ஆற்றல்களைப் பெற


ஒரு மனிதர் நேர்மறை ஆற்றல்களை உணவின் மூலமாகவும், வாழ்க்கை முறைகளின் மூலமாகவும், ஆன்மீகப் பயிற்சிகளின் மூலமாகவும், மற்றும் இயற்கையிடமிருந்தும் பெற்றுக்கொள்ளலாம். ஆற்றல் எல்லா இடத்திலும் நிறைந்திருக்கிறது என்று முன்னரே பார்த்தோம். அந்த ஆற்றல்களை நாம் சேகரித்துக் கொள்ள சில வழிமுறைகளைப் பார்ப்போம்.

உணவின் மூலமாக ஆற்றல்களை பெற எளிதாக உடலால் ஜீரணிக்கக் கூடிய உணவுகளை உட்கொண்டால், உடல் சுயமாகவே நல்ல ஆற்றல்களை உற்பத்தி செய்துக் கொள்ளும். மேலும் நாம் உட்கொள்ளும் உணவானது மனதுக்கும், கண்களுக்கும், நாவுக்கும் விருப்பமானதாக இருக்க வேண்டும்.

பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக உட்கொள்வதன் மூலமாகப் பிரபஞ்ச ஆற்றலை அதிகமாக உடலில் சேகரிக்கலாம். காய்கறிகளின் ஆற்றல் அவற்றை சமைக்கும் போது குறைந்து போகலாம் அல்லது சிதைந்து போகலாம். ஆனால் பழங்களில் இருக்கும் ஆற்றல்கள் மட்டும் மனிதர்களுக்கு முழுமையாகக் கிடைக்கும். காரணம் பழங்களைச் சமைக்காமல் அப்படியே சாப்பிடலாம். பழங்களை அதிகமாக சாப்பிடுவதன் மூலமாக உடலில் அதிகப்படியான ஆற்றல்களை சேகரிப்பது மட்டுமின்றி நோய்களையும் குணப்படுத்தலாம்.

இயற்கையிலிருந்து ஆற்றல்களைப் பெற இயற்கையான தூய காற்றை சுவாசிக்கும் போது அவற்றில் கலந்திருக்கும் பிரபஞ்ச ஆற்றல்களை உடல் கிரகித்துக் கொள்ளும். காடு, மலை, குகை, புல்வெளி, போன்ற இடங்களுக்குச் சென்று வெறும் காலில் செருப்பில்லாமல் நடக்கும்போது உடல் அந்த நிலத்தில் இருந்தும், காற்றில் இருந்தும், வெளியில் இருந்தும் பிரபஞ்ச ஆற்றல்களைக் கிரகித்துக் கொள்ளும். கடல், ஆறு, குளம், குட்டை, போன்ற இயற்கையான நீர்நிலைகளில் குளிக்கும் போது உடல் அவற்றில் இருக்கும் பிரபஞ்ச ஆற்றல்களைக் கிரகித்துக் கொள்ளும். பஞ்சபூதங்களில் காற்று, நீர், ஆகாயம், நெருப்பு, நிலம் போன்றவற்றில் உருவாகும் ஆற்றல்களையும் சுயமாகக் கிரகித்துக் கொள்ளும் தன்மை நம் உடலுக்கு உள்ளது.

பயிற்சிகளின் மூலமாக ஆற்றல்களை பெற மூச்சுப்பயிற்சி, யோகா, தியானம், தைச்சி, நோன்பு, வழிபாடுகள், தொழுகை, வணக்கங்கள் போன்றவற்றின் மூலமாகவும் உடல் பிரபஞ்ச ஆற்றல்களைக் கிரகித்தும், அவற்றை சீர் செய்தும் கொள்கிறது.

ரெய்கி ஆற்றலை அனுப்பும் பயிற்சிகள்

ரெய்கி ஆற்றலை ஒரு மனிதருக்கோ, விலங்குக்கோ, தாவரத்துக்கோ, இடத்துக்கோ எளிதாக அனுப்பலாம். மன அமைதியுடனும், மன ஓர்மையுடனும், உங்கள் கரங்களை அந்த மனிதர், விலங்கு, பொருள் அல்லது இடத்தின் மீது காட்டி மனதுக்குள் ரெய்கி ஆற்றல் அவர் மீது பரவட்டும் என்று நினைத்தாலே போதும். நீங்கள் நினைத்த மாத்திரமே ரெய்கி ஆற்றல் உங்கள் உள்ளங்கைகளின் மூலமாக பரவ தொடங்கிவிடும். அதை நீங்கள் உணரவும் முடியும்.

ஒரு குறிப்பிட்ட நோயோ, தொந்தரவோ, நோக்கமோ, தேவையோ இருந்தால், அந்த நோக்கத்தை சரிசெய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனும், ரெய்கி ஆற்றலை அனுப்பலாம். உங்கள் உள்ளங்கைகளைக் காட்டி கொண்டு நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது நடக்கும். அவ்வளவு எளிமையானது ரெய்கி. இரண்டு கரங்களையும் பயன்படுத்தலாம் அல்லது வலது கரத்தை மட்டுமே பயன்படுத்தலாம்.  ரெய்கி முத்திரைகளையும் (Reiki symbols) பயன்படுத்தலாம்.

1. அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி ரெய்கி ஆற்றலை பயன்படுத்த வேண்டும்.

2. நம் வீட்டை சுற்றி இருக்கும் செடி, கொடி, மற்றும் மரங்களுக்கு ரெய்கி ஆற்றலை அனுப்ப வேண்டும்.

3. நோய்வாய்ப்பட்டிருக்கும் வீட்டு அல்லது சாலையோர விலங்குகளுக்கு ரெய்கி ஆற்றலை அனுப்ப வேண்டும்.

4. கர்ப்பம் தரித்திருக்கும் விலங்குகளுடன் ஆற்றலை பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.

5. விபத்துகளில் பாதிப்படைந்த அல்லது ஊனமுற்ற விலங்குகளுடன் உங்கள் ஆற்றலை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

6. ஆபத்தில், அவசரத்தில், அல்லது ஆம்புலன்சில் இருக்கும் மனிதர்களுடன் உங்கள் ஆற்றலை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

7. முதுமையுற்ற, ஏழ்மையில் இருக்கும் அல்லது இயலாமையில் இருக்கும் மனிதர்களுடன் உங்கள் ஆற்றல்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

8. கர்ப்பம் தரித்த தாய்மார்களுடன் ரெய்கி ஆற்றலை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

9. வீட்டுக்காக நீங்கள் வாங்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் மற்ற உணவு பண்டங்களுக்கு ரெய்கி ஆற்றலை அனுப்புங்கள்.

காய்கறிகளோ, பழங்களோ, தானியங்களோ வாங்கினால், வீடு திரும்பியதும் அவற்றின் மீது ரெய்கி ஆற்றலை அனுப்பினால் அவை அதிக நாட்கள் கெட்டு போகாமல் இருக்கும். இதை முயற்சி செய்துபாருங்கள்.

 (கைகளில் ஆற்றல் பந்தை உருவாக்கும் உதாரணம்) 

(கைகளில் ஆற்றலை உணர்தல் உதாரணங்கள்) 

ஆற்றலின் வீரியத்தை அதிகரிக்கும் பயிற்சிகள்

ரெய்கி ஆற்றல் பயிற்சிகள் 
உடலில் ஆற்றலின் உற்பத்தியை அதிகரிக்கவும், தக்கவைத்துக் கொள்ளவும், உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் சில பயிற்சிகள்.

1. ஆற்றலை அடிக்கடி கைகளில் குவித்து, ஆற்றல் பந்தை (Energy Ball) உருவாக்க வேண்டும்.

2. உள்ளங்கையில் உருவாகும் ஆற்றலை எப்போதும் கூர்மையாக கவனிக்க வேண்டும்.

3. உடலில் உருவாகும் மற்றும் இயங்கி கொண்டிருக்கும் ஆற்றலை எப்போதும் கூர்மையாக உணரவும், கவனிக்கவும் வேண்டும்.

4. இயற்கையிலும் நம்மை சுற்றியும் உருவாகும் மற்றும் இயங்கி கொண்டிருக்கும் ஆற்றல்களை எப்போதும் கூர்மையாக உணரவும், கவனிக்கவும் வேண்டும்.

5. எப்போதுமே இயற்கையுடன் இணைந்திருக்க வேண்டும்.


ஆற்றலை பயன்படுத்தும் காலம்

ஒரு மாணவர் தீட்சை பெற்றுவிட்டால் அவர் பெற்ற தீட்சையும் ஆற்றலும் கடைசி வரையில் அவருடன் இருக்கும். தொடர்ச்சியாக பயன்படுத்தாமல் இருந்தாலோ, பயிற்சிகள் செய்யாமல் இருந்தாலோ ஆற்றல் சற்று குறையலாம் அல்லது அதன் பலன்கள் தாமதமாகலாம். மற்றபடி ஒருமுறை முழுமையாகவும், முறையாகவும் தீட்சை பெற்றுவிட்டால் இறுதிவரையில் அது நம்முடன் இருக்கும்.

தொடர்ந்து பயன்படுத்தாமல் இருந்தாலோ, பயிற்சிகள் செய்யாமல் இருந்தாலோ பெட்ரோல் தீர்ந்து போன வாகனத்தைப் போல் உடலும், மனமும், ஆராவும், சக்ராக்களும் ஆற்றலை இழக்கலாம். மீண்டும் பயிற்சிகளை தொடங்கும் போது அனைத்தும் மீண்டும் முறையாக செயல்படத் தொடங்கும். ஒருவேளை ஒரு மாணவர் முறையாக அல்லது முழுமையாக தீட்சை பெறவில்லை என்று கருதினால் வேறு ஒரு மாஸ்டரிடம் மீண்டும் தீட்சை பெற்றுக் கொள்வது சிறப்பாகும்.


ரெய்கியை தவறாக பயன்படுத்தாதீர்கள்

 சில மனிதர்கள் ரெய்கி ஆற்றலை தவறான காரியங்களுக்கு பயன்படுத்த முயற்சி செய்வார்கள். பெண்களை கவர்வது, மக்களை ஏமாற்றுவது, செய்வினை செய்வது, பழிவாங்குவது, மனிதர்களை மயக்குவது, பேய் பிசாசு போன்றவற்றுடன் உறவாடுவது, மற்றும் மற்ற தவறான ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள இந்த ஆற்றலை பயன்படுத்த முயல்வார்கள்.

ஒருவர் இந்த ஆற்றலை தவறான காரியங்களுக்குப்  பயன்படுத்த முயற்சி செய்தால், அவரின் ரெய்கி ஆற்றல் குறைய தொடங்கிவிடும், பலகீனமாகும். ஒருவர் இந்த ஆற்றலை நன்மையான காரியங்களுக்கும் மற்றவர்களுக்கு உதவுவதற்கும் பயன்படுத்துவாரே ஆனால், அவரின் ஆற்றல் மேலும் வலிமையைப் பெரும். விரைவாகவும் சிறப்பாகவும் இலகுவாகவும் செயல்படும். இவர் நினைத்த மாத்திரமே இவர் நினைத்த விசயங்கள் நடக்க தொடங்கிவிடும். இது இயற்கையின் விதியாகும். 

தீய ஆற்றல்கள் உடலில் சேருவதற்கு காரணங்கள்

மனித உடலில் தீய ஆற்றல்கள் சேருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. தவறான உணவு முறைகள், தவறான பழக்க வழக்கங்கள், தவறான வாழ்க்கை முறைகள், தீய மனிதர்களின் எண்ணங்கள், தீய மனிதர்களின் செயல்கள், மற்றும் தவறான இடங்களில் இருக்கும் தீய அலைகள் கூட மனிதர்களின் உடலில் தீய ஆற்றல்கள் சேருவதற்கு காரணமாக இருக்கின்றன. இயற்கையில் ஏற்படும் மாற்றங்களும், சீற்றங்களும் கூட மனிதர்களிடம் சில மாற்றங்களை உருவாக்கலாம்.

உணவு முறைகள் 
இன்றைய காலகட்டத்தில் தவறான உணவு முறைகளை பின்பற்றுவதனால் மனிதர்கள் எளிதில் நோய்வாய்ப்படுகிறார்கள். இன்றைய மனிதர்கள் உடலுக்கு ஒவ்வாத உணவுகளையும், இரசாயனங்கள் கலந்த உணவுகளையும் அதிகமாக உட்கொள்கிறார்கள். இதனால் உடலில் சத்து குறைபாடுகளும், சோர்வும், நோய்களும், உடல் உறுப்பில் குறைபாடுகளும் அதிகமாக காண முடிகிறது.

தவறான வாழ்க்கை முறைகள் 
மது அருந்துதல், புகை பிடித்தல், சூதாடுதல், விபச்சாரம் செய்தல், போன்ற செயல்களும், ஆணவம், திமிர், கர்வம், கோபம், பயம், எரிச்சல், பொறாமை போன்ற குணக் கேடுகளும் மனிதர்களின் உடலில் தீய சக்திகளையும் நோய்களையும் உருவாக்குகின்றன.

சுற்றி இருக்கும் மனிதர்கள் 
குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், உடன் தொழில் செய்பவர்கள், மற்றும் நம்மை சுற்றி வாழும் மனிதர்களும் நமது ஆற்றல் பாழடைய காரணமாக இருக்க முடியும். நம்மை சுற்றி வாழும் மனிதர்களால் நமது ஆற்றல், ஆரா, அதிர்வு, மனம், மற்றும் சிந்தனையும் மாறுபாடு அடையலாம் அதனால் வாழ்க்கையில் தொந்தரவுகளும் நோய்களும் உருவாகலாம்.

இடங்கள் 
விபத்து நடந்த இடம், மரணம் நடந்த வீடு, மருத்துவமனை, பிணவரை, மயானம், மதுக்கடை, விபச்சார விடுதி, போன்ற இடங்களுக்கு செல்லும்போது நமது சிந்தனை, எண்ணம், உணர்வு, உணர்ச்சி, ஆற்றல் போன்றவற்றில் பாதிப்புகள் ஏற்படலாம். வாழ்க்கையில் தொந்தரவுகளும் நோய்களும் உண்டாகலாம். இது போன்ற இடங்களுக்கு செல்லும்போது அங்கிருக்கும் தீய ஆற்றல்களும் நமக்குள் பதிவாகலாம், பரவலாம்.

இயற்கையின் மாற்றங்கள் 
சக்தி நிலையில் அனைத்து படைப்புகளும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருப்பதனால், இயற்கையில் உண்டாகும் ஒவ்வொரு மாற்றங்களும் மனிதர்களிடம் சில மாறுதல்களை உண்டாக்கலாம். நிலத்தில், மலையில், காற்றில், கடலில், மழையில், வானிலையில் என பூமியில் உண்டாகும் ஒவ்வொரு மாற்றமும் மனிதர்களிடமும், விலங்குகளிடமும், தாவரங்களிடமும், மற்ற உயிரினங்களிடமும் சில மாறுதல்களை உண்டாக்கலாம்.

பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு மூலையில் உருவாகும் அசைவும், இந்த பூமியில் ஏதோ ஒரு மூலையில் உருவாகும் மாற்றமும் கூட மனிதர்களின் வாழ்க்கையில் மாற்றங்களை உண்டாக்கலாம். நிலவிலும், சூரியனிலும், மற்ற கிரகங்களிலும் உருவாகும் மாற்றங்களும், மனிதர்களின் மனநிலையையும், சிந்தனையையும் மாற்றலாம். அதனால் வாழ்க்கையில் எதிர்பாராத சில மாறுதல்கள் உண்டாகலாம்.

ஆற்றலை சரியான இலக்கை நோக்கி அனுப்ப

பிரபஞ்ச ஆற்றலை முறையாகவும், இலகுவாகவும் தன் இலக்கை நோக்கி அனுப்ப,ரெய்கியை அனுப்புபவரும் அதை பெறுபவரும் அமைதியாகவும், சாந்தமாகவும், மன ஓர்மையுடனும் இருத்தல் வேண்டும்.

ஆற்றல் பற்றிய கட்டுரையை வாசிக்கும் போது உங்களுக்கு புரிந்திருக்கும் இந்த உலகில் அனைத்துமே ஆற்றல் தான். மனிதர்கள் முதல் தாவரங்கள் வரையில் அனைத்துமே ஆற்றலின் மறு உருவங்கள்தான். அதனால் அனைத்து உயிர்களுக்கும், இயற்கையின் படைப்புகளுக்கும் ஆற்றல் தேவைப்படும்.

அதனால் ரெய்கியை அனுப்புபவரும் அதை பெறுபவரும் ஒரே மன நிலையில் இல்லாவிட்டால், அனுப்பிய ஆற்றல் போய் சேருவதற்குள் பாதி வழியில் கரைந்துவிட அல்லது முழுமையாக சென்று அடையாமல் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. மற்ற உயிர்களும், பொருட்களும் அந்த ஆற்றல்களை ஈர்த்துக் கொள்ளும் வாய்ப்புகளும் உள்ளன.

Energy - ஆற்றல் (சக்தி)

ஆற்றல் யாராலும் காணமுடியாத ஆனால் அனைவராலும் உணரக்கூடிய ஒன்று. அனைத்து படைப்புகளும் ஆற்றலில் இருந்து உருவானவை தான். நம் கண்களால் காணக்கூடிய அனைத்து உயிரினங்களும், அத்தனை படைப்புகளும், அத்தனை பொருட்களும், இயற்கையில் விளைந்திருக்கும் கடல், ஆறு, மலை, நீர், நிலம், ஆகாயம், காற்று, நெருப்பு, மற்றும் நம் கண்களால் காண முடியாத, உணர்வுகளாலும் உணர முடியாத, அத்தனை கோடி படைப்புகளும் ஆற்றலில் இருந்து உருவானவை தான்.

"அனைத்துமே ஆற்றல்தான், அதுவே அனைத்துமாக இருக்கிறது. அது நீங்கள் தேடுகின்றவற்றின் அலைகளை இணைக்கிறது. உங்களால் மாற்ற முடியாது .ஆனால் உண்மைகளை அடைய முடியும். வேறு வழிகள் கிடையாது. இது ஒரு தத்துவமில்லை, இது இயற்பியல் ஆகும்". -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

ஆற்றல் உலகம் முழுவதும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. பிராணன், ரெய்கி, கீ, சீ, பிரபஞ்ச சக்தி, வைட்டல் எனெர்ஜி, இறையாற்றல், குட்ரத், என ஒவ்வொரு மொழியிலும், சமுதாயத்திலும், நம்பிக்கையிலும், வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த ஆற்றலை குறிக்கும் பல்வேறு பெயர்களைக் கொண்டு அவை வெவ்வேறான ஆற்றல்கள் என்று நாம் கருதிக் கொண்டிருந்தாலும் அடிப்படையில் அவை அனைத்துமே ஒன்றுதான்.

இந்த ஆற்றலுக்கு அடிப்படையில் பல தன்மைகள் உள்ளன. உலகத்துக்கு அப்பால் வெளியில் இயங்கிக் கொண்டிருப்பது ஒரு வகையான ஆற்றல். இந்த உலகத்தை இயக்கிக் கொண்டிருப்பதும், பராமரித்துக் கொண்டிருப்பதும் ஒரு வகையான ஆற்றல். உயிரினங்களை இயக்கி கொண்டிருப்பது ஒரு வகையான ஆற்றல். இயற்கையை பராமரிப்பதும் பாதுகாப்பதும் ஒரு வகையான ஆற்றல். உயிரில்லாத ஜடப் பொருட்களில் இயங்கிக் கொண்டிருப்பது ஒரு வகையான ஆற்றல்.

வாகனங்களை இயக்குவது, மின்சார சாதனங்களை இயக்குவது என இந்த ஆற்றல், இந்த பிரபஞ்சத்தின் எல்லா நிலைகளிலும் செயல்புரிகிறது. இந்த பிரபஞ்சத்தின் தோற்றம் முதலாக, ஒரு சிறு புல்லின் வளர்ச்சி வரையில், மழை பொழிவது முதல் சுனாமியை உருவாக்குவது வரையில், இந்த ஆற்றல் பல பரிமாணங்களை எடுக்கிறது.

"இந்த பிரபஞ்சத்தின் இரகசியங்களை அறிய வேண்டுமென்றால், ஆற்றல், அலைகள், மற்றும் அதிர்வுகளை ஆராயுங்கள்" - நிகோலா டெஸ்லா

ஒரே தண்ணீர், கடல், ஆறு, குட்டை, மழை, சாக்கடை நீர், டீ, காபி, குளிர்பானம் என அதன் உபயோகத்துக்கும், தன்மைக்கும், ஏற்ப பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுவதை போன்று. இந்த ஆற்றலும் அதன் தன்மைக்கும், உபயோகத்துக்கும், ஆற்றலுக்கும், ஏற்ப பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஆனால் அடிப்படையில் அனைத்துமே ஒன்றுதான்.

(கிர்லியன் கேமராவைக் கொண்டு பதிவு செய்யப்பட்ட பொருட்களின் ஆற்றல்கள்) 

ரெய்கி ஆற்றல்

ரெய்கி ஆற்றல் என்பது ரெய்கி மாஸ்டரால் உருவாக்கப்படும் ஆற்றல் அல்ல. அது இயற்கையில் உருவான பிரபஞ்சத்தின் ஆற்றல் தான். இயற்கையின் ஆற்றல், ரெய்கி மாஸ்டருக்கும் அவரின் நோக்கத்துக்கும் ஏற்ப செயல்வடிவம் அடைகிறது. ரெய்கி மாஸ்டர்கள் அந்த இயற்கை ஆற்றலை இரவல் வாங்கி அதை குறிப்பிட்ட நபர் மீதோ, பொருள் மீதோ, இடத்தின் மீதோ செலுத்துகிறார்கள். உதாரணத்துக்கு கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றிலிருந்து ஒரு வாளி தண்ணீரை அள்ளி நம் தேவைக்கு பயன்படுத்துவதைப் போன்ற செயல்தான் இது.

“ஒரு மனிதருக்கும் இன்னொரு மனிதருக்கும் இருக்கின்ற வேற்றுமை என்பது திறமையினால் அல்ல. அது ஆற்றலினால் உருவானது”. - தோமஸ் அர்னால்டு

ஆற்றல்களின் வித்தியாசங்கள் 
இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவி இருப்பது ஒரே ஆற்றல்தான். ஆனால் அதன் முழு ஆற்றலையும் உபயோகத்தையும் சாதாரண மனிதனின் அறிவைக் கொண்டு புரிந்துக் கொள்ள முடியாது. இந்த ஆற்றல் நன்மையானதாகவும் தீமையானதாகவும் இரு வெவ்வேறு பிரிவுகளாக பிரிக்கலாம். இந்த பிரிவினை அதன் தன்மைகளை கொண்டு மட்டுமே பிரிக்கப்பட்டுள்ளது. அதன் இயல்புகளை கொண்டு அல்ல.


இந்த பிரிவினையானது ஒரு மனி
தனின் வலது கையையும் இடது கையையும் போன்றது. வேற்றுமைகள் இருந்தாலும் ஒரே உடலின் அங்கம்தான் அவை. ஒரே நெருப்பை சிலர் வீட்டில் சமைப்பதற்கும், சிலர் வீட்டையே கொளுத்துவதற்கும் பயன்படுத்துவதைப் போல. அது நெருப்பின் தவறல்ல, அதை தவறாக பயன்படுத்தும் மனிதர்களின் தவறு. இந்த ஆற்றல் இடத்துக்கும், சூழ்நிலைக்கும், தேவைக்கும், நோக்கத்துக்கும், ஏற்ப தனது தன்மையை மாற்றிக் கொள்ளக் கூடியது.

இந்த ஆற்றலை நல்ல நோக்கத்துடன் பயன்படுத்தும் போது நல்ல விளைவுகளையும், தீய நோக்கத்துடன் பயன்படுத்தும் போது தீய விளைவுகளையும் உண்டாக்குகிறது. மனிதர்களுக்கு வறுமை, நோய், துன்பம் போன்றவை உருவாக காரணமாக இருப்பதும். அவை நீங்கி செல்வ செழிப்பு, ஆரோக்கியம், மகிழ்ச்சி போன்றவை உருவாக காரணமாக இருப்பதும் இதே ஆற்றல்தான். மனிதர்களை பேயாக ஆட்டிப்படைப்பதும், அந்த பேயை விரட்டுவதும் ஒரே ஆற்றல் தான். அதனால்தான் பெரியவர்கள் நடப்பது நல்லதோ கெட்டதோ எல்லாம் அவன் செயல் என்று கூறுகிறார்கள்.

நல்ல ஆற்றல்களை கிரகித்துக்கொள்ளும் மேலும் அதை தக்கவைத்துக் கொள்ளும் மனிதருக்கு உடலில் ஆரோக்கியமும், சுறுசுறுப்பும், மன அமைதியும், மகிழ்ச்சியும், புத்திக் கூர்மையும், நல்ல உறவுகளும், நல்ல நட்பும், சிறப்பான திருப்திகரமான வாழ்க்கையும், வாழ்க்கையில் மேன்மையும், அமையும்.

தீய ஆற்றல்களை உடலில் கிரகித்தால் அல்லது அவை உடலில் தேங்கினால் உடலில் நோய்களும், வலிகளும், உடல் உபாதைகளும், குறைபாடுகளும், மனதில் கவலையும், பதட்டமும், புத்தி மந்தமும், வாழ்க்கையில் துன்பங்களும், வறுமையும், தவறான உறவுகளும் நட்பும் உருவாக வாய்ப்பிருக்கிறது.

ரெய்கி ஆற்றலுக்கு ஒரு அறிமுகம்

ரெய்கி என்பது மிகவும் புத்திக் கூர்மையுடைய ஆற்றலாகும் (சக்தியாகும்). ரெய்கிக்கு யாரும் எதையும் கற்றுத்தரத் தேவையில்லை. மின்சாரம் விளக்கில் கலந்தால் வெளிச்சத்தை உண்டாக்கும், மின்விசிறியில் கலந்தால் காற்றை உண்டாக்கும், வானொலியில் கலந்தால் ஓசையை உண்டாக்கும், தொலைக்காட்சியில் நுழைந்தால் காட்சிகளை உண்டாக்கும். மின்சாரம் எந்த பொருளில் நுழைகிறதோ, அந்த பொருளுக்கு ஏற்ப தனது தன்மைகளை மாற்றிக் கொள்ளும் ஆற்றலுடையது. அதைப் போலவே ரெய்கியும் சேரும் மனிதர்களுக்கு ஏற்பவும், பொருட்களுக்கு ஏற்பவும், தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மையுடையது.

ரெய்கி ஆற்றல் ஒரு மனிதரின் உடலுக்குள் நுழையும் போது அந்த மனிதரின் குறை நிறைகளை முதலில் சரிசெய்யத் தொடங்கும். ஒரு நோயாளியின் உடலில் நுழைந்தால் அந்த நோயாளியின் நோய்களுக்கான மூலக் காரணங்களை கண்டறிந்து, அவற்றை சரி செய்ய தொடங்கும். ரெய்கி ஒரு பொருளிலோ, இடத்திலோ, நுழைந்தால் அந்த பொருளின் அல்லது இடத்தின் குறைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யும். தீய சக்திகள் எங்கிருந்தாலும் அவற்றை ரெய்கி வெளியேற்றிவிடும். மனிதர்கள், விலங்குகள், பொருட்கள், மற்றும் கட்டடங்களின் சக்தியை நிலைநிறுத்தவும் மேம்படுத்தவும் செய்யும்.

ரெய்கி நமக்கு அந்நியமான ஒரு ஆற்றல் அல்ல. நம்மை அறியாமலேயே நமது தினசரி வாழ்க்கையில் அவப்போது ரெய்கியை பயன்படுத்தி தான் வருகிறோம். எடுத்துக்காட்டாக யாருக்காவது தலைவலி, வயிற்று வலி, கால் வலி, மூட்டு வலி, போன்றவை உருவானால் தன்னை அறியாமலேயே தன் கரங்களால் வலிக்கும் பகுதியை அவர் தேய்த்து கொடுப்பார். அவரின் வலிகளும் குறையத் தொடங்கும்.

ஒரு குழந்தை காரணமில்லாமல் அழுது கொண்டிருந்தால் அதன் தாய் அந்தக் குழந்தையை தன் கரங்களால் தேய்த்து கொடுப்பார், தடவி கொடுப்பார். சற்றுநேரத்தில் அந்த குழந்தையும் அழுகையை நிறுத்திவிடும். விலங்குகளுக்கு காயங்கள் உண்டானால் விலங்குகள் காயம் கண்ட பகுதியை தன் நாவினால் வருடும், அந்த காயங்கள் விரைவில் ஆறிவிடும்.

நம் அன்புக்குரிய ஒருவர் நோய்வாய்ப் பட்டாலோ, ஏதாவது பிரச்சனையில் சிக்கியிருந்தாலோ, அல்லது கவலையில் மூழ்கி இருந்தாலோ, நாம் அவரின் கைகளைப் பற்றி ஆறுதல் கூறுவோம். அல்லது அவர்களை கட்டியணைத்து ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் கூறுவோம்.

உண்மையில் மேலே குறிப்பிட்ட சூழ்நிலைகளில் நாம் என்ன செய்கிறோம் என்றால் தொடுவதன் மூலமாகவும், கட்டி அணைப்பதன் மூலமாகவும், வார்த்தைகளின் அல்லது ஓசைகளின் மூலமாகவும் நாம் நமது ஆற்றலை பாதிக்கப்பட்டவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். உடலில் பிரபஞ்ச ஆற்றல் குறைவாக இருப்பதனாலும் அதில் குறைபாடுகள் உண்டாவதனாலும் தான் பெரும்பாலான மனிதர்களுக்கு நோய்களும், வாழ்க்கையில் பல தொந்தரவுகளும் உருவாகின்றன. மற்றவர்களின் மூலமாக கிடைக்கும் ஆற்றலானது அவர்களுக்கு துன்பங்களில் இருந்து வெளிவர உதவியாக இருக்கும்.