ரெய்கி வகுப்பு
ரெய்கி வகுப்பு
சிகிச்சை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிகிச்சை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ரெய்கி சிகிச்சை- வழிமுறைகள்


ரெய்கி சிகிச்சை என்பது வெறும் ஆற்றலை மட்டுமே துணையாகக் கொண்டு செய்யப்படும் சிகிச்சையாகும். மனிதனின் முழு உடலும், மனமும் ஆற்றலில் இருந்து உருவானவையே. மனிதனுக்கு ஆற்றல் குறையும் போதும், ஆற்றல் சீர்கேடு அடையும் போதும் மட்டுமே நோய்களும், மனநல பாதிப்புகளும் உருவாகின்றன.

ஒரு மனிதனின் உடலுக்குள் இயற்கையின் உதவியைக் கொண்டு, ரெய்கி ஆற்றலை செலுத்தும் போது, அவர் உடலில் ஏற்பட்ட குறைபாடுகள் நிவர்த்தியாகி, ஆரோக்கியமும் மன நலமும் சீராகும்.

ரெய்கியைக்  கொண்டு சிகிச்சை அளிக்கும் வழிமுறைகள்: 

1. மனதினாலும் எண்ணத்தாலும் சிகிச்சை அளிப்பது.

2. வார்த்தைகளால் சிகிச்சை அளிப்பது.

3. பார்வையினால் சிகிச்சை அளிப்பது.

4. தொடாமல் சிகிச்சை அளிப்பது.

5. கைகளால் தொட்டு சிகிச்சை அளிப்பது.

6. நீர், உப்பு, மண், உணவு பொருட்கள் மற்றும் உலோகங்களைக் கொண்டு சிகிச்சை அளிப்பது.


ரெய்கி சிகிச்சை அளிக்கும் முறைகள்


ரெய்கியின் மூலமாக சிகிச்சை அளிக்க பின்பற்ற வேண்டிய முறைகள்:

1. ரெய்கி சிகிச்சையைப் பற்றி நோயாளிக்கு சிறிய விளக்கம் கொடுக்கவும்.

2. நோயாளியிடம் பேசி நோயின் மூலக் காரணத்தைக் கண்டறியவும்.

3. நோயாளியின் தொந்தரவுகள் பேய், பிசாசு, செய்வினை, மந்திரங்கள் போன்றவற்றால் உண்டாகியிருந்தால் level 1 தீட்சை பெற்றவர்கள் சிகிச்சை அளிக்கக் கூடாது.

4. நோயாளியைத் தொட வேண்டிய அவசியம் உண்டானால் முன் அனுமதிப் பெற்றுப் பின்னர் தொடவும்.

5. சிகிச்சையைத் தொடங்கும் முன் மனதாலே அவருக்கு பூரணமான ஆரோக்கியம் திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்யவும்.

6. தொட்டோ, தொடாமலோ, முத்திரைகள் மூலமாகவோ அவருக்கு ரெய்கி ஆற்றலை அனுப்பவும்.

7. நோய் குணமாகும் என்ற நம்பிக்கையை அவருக்கு  ஏற்படுத்தவும்.

8. நோய்களை குணப்படுத்தும் உண்மையான மருத்துவர் என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ள நோய்களை குணப்படுத்தும் 5 வழிமுறைகளை(உணவை உட்கொள்ளும் முறைகள், தண்ணீர் அருந்தும் முறை, உடலுக்கு போதிய ஓய்வு, இரவு உறக்கம், மன அமைதி )ஆகியவற்றை  பின்பற்ற அறிவுறுத்துங்கள்.

9. நோயாளியின் இரகசியங்களைப் பாதுகாத்திடுங்கள்.

10. சிகிச்சை அளிக்கும் முன்பாக இறைவன், இயற்கை மற்றும் ரெய்கியிடம் அனுமதியும், உதவியும் கோருங்கள்.

11. சிகிச்சைக்குப் பிறகும் இறைவனுக்கும், இயற்கைக்கும், ரெய்கிக்கும் நன்றி கூறுங்கள்.

Self Healing - சுய சிகிச்சை


(ரெய்கியின் மூலமாக சுயமாக சிகிச்சை செய்துகொள்ளும் வழிமுறைகள்) 

ரெய்கி கலை- ஒரு அறிமுகம்

(Reiki) ரெய்கி எனும் ஆன்மீகப் பயிற்சி ஜப்பானில் 1822ஆம் ஆண்டு டாக்டர் மிக்காவோ உசுயி  (Mikao Usui) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. “ரெய்” என்றால் "பிரபஞ்சம்" என்று பொருள். “கி” என்றால் "ஆற்றல்" அல்லது "சக்தி" என்று பொருள். ரெய்கி என்றால் "பிரபஞ்ச ஆற்றல்" அல்லது "பிரபஞ்ச சக்தி" என்று பொருள் கொள்ளலாம். பிரபஞ்ச ஆற்றலை பயன்படுத்தி மனிதர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதும், நோய்களை குணப்படுத்திக் கொள்வதும் தான் ரெய்கியின் நோக்கமாகும்.

மிக்காவோ உசுயி அவர்கள் ரெய்கி பயிற்சியின் மூலமாக மனிதர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும், நோய்களை குணப்படுத்திக் கொள்ளவும், தேவையான வழிமுறைகளை வகுத்துத் தந்தார்கள். அவருக்குப்பின் இந்தக் கலை ஜப்பானிலிருந்து அமெரிக்காவுக்குப் பரவி, அமெரிக்காவிலிருந்து உலகம் முழுவதும் பரவியது.

இந்த பிரபஞ்சமே மனிதர்களுக்காகத்தான் படைக்கப்பட்டிருக்கிறது. அதனால் மனிதர்களின் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் பிரபஞ்சத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்த உலகம் முழுவதும் பிரபஞ்சத்தின் ஆற்றல் பரவி இருப்பதால் அந்த ஆற்றலை முறையாகப் பயன்படுத்தும் போது மனிதர்கள் தங்களின் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்து கொள்ளலாம்.

மனிதர்களின் உடலையும், மனதையும் உருவாக்கியது இந்த பிரபஞ்ச ஆற்றல்தான். உருவாக்கியவருக்கு, உருவாகிய பொருள் பழுதானால் சரி செய்யத் தெரியாதா? ரெய்கியின் மூலமாக சிறிய நோய், பெரிய நோய் என்ற பாகுபாடின்றி மனிதர்களின் அனைத்து வகையான நோய்களையும் குணப்படுத்திக் கொள்ளலாம்.

ரெய்கியின் மூலமாக தனக்கும், தன் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள், மற்றும் சக மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும், கூட உதவி செய்யலாம். நோய் கண்டிருக்கும் மனிதர்களின் மீது ரெய்கியை செலுத்தும் பொழுது அவர்கள் தங்கள் நோய்களிலிருந்து விடுபட்டு ஆரோக்கியத்தை அடைவார்கள். நோய்க் கண்ட அல்லது விபத்துக்குள்ளான விலங்குகளின் மீது ரெய்கியை செலுத்தும்போது அந்த விலங்குகள் விரைவாக குணமடையும். வாடிக் கிடக்கும் தாவரங்களின் மீது அல்லது காய்க்காத மரங்களின் மீது ரெய்கியை செலுத்தும்போது அவை மீண்டும் செழிப்பாக வளர்ந்து, பூத்து, காய்த்து நிற்கும்.

ரெய்கி என்பது ஒரு புத்திசாலி சக்தியாகும். அதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்று கட்டளையிட்டால் போதும் எப்படி செய்யவேண்டும் என்று சொல்லித்தர தேவையில்லை. மின்சாரம் வானொலியில் சேர்ந்தால் ஒலியாக மாறும், தொலைக்காட்சி பெட்டியில் கலந்தால் ஒளியாக மாறும், பல்பில் கலந்தால் வெளிச்சத்தை உண்டாக்கும். மின்சாரத்திற்கு யாரும் எதுவும் சொல்லித்தர தேவையில்லை. இருக்கும் இடத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும். அதைப்போல் ரெய்கி எந்த இடத்தில் கலந்தாலும் அங்கு இருக்கும் அனைத்து வகையான குறைகளையும் சரிசெய்யக் கூடிய அறிவும் ஆற்றலும் ரெய்கிக்கு உண்டு.

ஒரு இல்லத்தில் அல்லது வியாபார தலத்தில் ரெய்கி சேரும் போது அந்த இடத்தில் இருக்கும் அனைத்து வகையான தீய சக்திகளையும் விரட்டி அங்கே நல்ல சக்திகள் சேர வழி வகுக்கும். ஒரு மனிதனின் உடலில் ரெய்கி சேரும் போது அவன் உடலில் இருக்கும் நோய்களையும் மனதில் இருக்கும் துன்ப துயரங்களையும், அவலங்களையும் குணப்படுத்தி அவனுக்கு வாழ்க்கையில் அனைத்தும் சுலபமாக கிடைக்க வழிவகுக்கும். ரெய்கியை கொண்டு வெகு தொலைவில் உள்ளவர்களுக்கும் நோய்களை குணப்படுத்தலாம், உதவி செய்யலாம்.

ரெய்கியில் நான்கு நிலைகள் உள்ளன. ரெய்கி என்பது ஒரு குருவிடமிருந்து தீட்சை வாங்கி செய்ய வேண்டிய பயிற்சியாகும். முறையாக பயிற்சி பெற்ற, ரெய்கியை தெளிவாக அறிந்த குருவிடம் இருந்து முறையாக தீட்சை வாங்கி பயிற்சியை தொடங்குவது சிறப்பாகும்.

ரெய்கியை பயிற்சி செய்பவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இயற்கையையும் பிரபஞ்சத்தையும் நம்ப வேண்டும். எல்லா உயிர்களிடமும் அன்பாக இருக்கவேண்டும். மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், இயற்கை என அனைத்துப் படைப்புகளின் மீதும் அன்பும் கருணையும் பொழிய வேண்டும். தனக்குள் இருக்கும் பிரபஞ்சத்தின் பேராற்றல் தான் நீக்கமற அனைத்து உயிர்களின் மீதும் அனைத்து பொருள்களின் மீதும் படர்ந்திருக்கிறது என்ற தெளிவான சிந்தனை இருக்க வேண்டும்.

ரெய்கியை பயிற்சி செய்பவர்கள் தினமும் தியானம் செய்ய வேண்டும். மனதை அமைதியாகவும் அன்பாகவும் வைத்திருக்க வேண்டும். பிரபஞ்சத்துடனும் இயற்கையுடனும் உறவாக தொடர்புடன் இருக்கும்போது அவர்களின் அத்தனை கட்டளைகளையும் ரெய்கி நிறைவேற்றும்.

ரெய்கி கற்றுக்கொள்ள விரும்புபவர்களும், சிகிச்சை, தீட்சை தேவைப்படுவோரும் என்னை தொடர்பு கொள்ளலாம்.

Contact me @WhatsApp:
https://wa.me/60103231755