ரெய்கி வகுப்பு
ரெய்கி வகுப்பு
தியானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தியானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தியானத்தின் போது செய்யக் கூடாதவை

1. ஆபரணங்களை அணியக் கூடாது.
2. வெறும் தரையில் அமரக் கூடாது.
3. சாயக்கூடாது.
4. படுக்கக் கூடாது.
5. தியானத்திற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு சாப்பிட கூடாது.
6. வற்புறுத்தக் கூடாது.
7. பயம், கவலை, துக்கம், குழப்பம் கூடாது.
8. வற்புறுத்தி மூச்சு விடக் கூடாது.
9. சிந்தனை செய்யக் கூடாது.
10. கற்பனை செய்யக் கூடாது.
11. எண்ணங்களை கட்டுப்படுத்தக் கூடாது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துமே வழிகாட்டுதல்கள் தான். உண்மையில் தியானம் என்பது சுயமாக நடக்கும் ஒரு பரிமாற்றம். அதில் நாம் செய்வதற்கு ஒன்றுமே கிடையாது. உடலின் உள்ளுறுப்புகளை போன்று தியானமும் சுயமாக இயங்கும் இயல்புடையது.

தியானத்தின் போது கடைபிடிக்க வேண்டியவை

தியானத்திற்கென்று எந்த கட்டுப்பாடுகளும், வழிமுறைகளும் கிடையாது. ஆனால் தியானம் எளிதாகவும் இயல்பாகவும் நடக்க வேண்டும் என்பதற்காக சில வழிகாட்டுதல்கள்.

1. காலியான வயிற்றில் தியானம் செய்ய வேண்டும்.
2. தரையில் ஆசனமிட்டு அதன் மீது அமர வேண்டும்.
3. மூச்சுப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
4. வசதியாகவும், தளர்வாகவும் அமர வேண்டும்.
5. அமைதியாக அமர வேண்டும்.
6. முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்.
7. மூச்சை கவனிக்க வேண்டும்.
8. சிந்தனையை கவனிக்க வேண்டும்.
9. பார்வையாளராக மட்டுமே இருக்க வேண்டும்.

தியானம் செய்யும் வழிமுறைகள்

1. விரிப்பு, பாய் அல்லது தடிப்பான துணியை விரித்து தரையில் வசதியாக அமரவும்.

2. தரையில் அமர்வது கடினமாக இருந்தால் நாற்காலி அல்லது சோஃபாவில் அமரவும்.

3. முதுகு தண்டை நேராக வைத்துக் கொள்ளவும்.

4. இறுக்கம் இல்லாமல், அமைதியாகவும், தளர்வாகவும் அமரவும்.

5. பயிற்சியை வற்புறுத்தி செய்யக் கூடாது.

6. மூச்சுப்பயிற்சி செய்யவும்.

7. மூச்சுப் பயிற்சி முடிந்ததும் தளர்வாகவும், அமைதியாகவும் அமரவும்.

8. இரு கைகளையும் தொடைகளின் மீது உள்ளங்கைகள் மேலே பார்ப்பதை போன்று வைத்துக் கொள்ளவும். அல்லது உங்களுக்கு பிடித்த முத்திரையில் வைத்துக் கொள்ளவும்.

9. கண்களை மூடிக் கொள்ளவும்.

10. உங்களின் சுவாசத்தை மட்டும் கவனிக்கவும்.

11. மூச்சுக் காற்று எவ்வாறு உடலுக்குள்ளே செல்கிறது? உடலில் எங்கெல்லாம் செல்கிறது? அது மீண்டும் எவ்வாறு வெளியேறுகிறது? என்பதை மட்டும் எண்ணத்தால் கவனிக்கவும்.

12. நல்லதோ, கெட்டதோ, எந்த எண்ணம் தோன்றினாலும் அதை கட்டுப்படுத்தக் கூடாது.

13. ஒரு பார்வையாளராக மட்டுமே இருந்து உங்கள் உடலிலும், மனதிலும் நடப்பனவற்றை கவனிக்கவும்.

குறிப்புகள்

1. தொடக்கத்தில் 5 நிமிடங்கள் தியானத்தில் இருந்தால் போதுமானது.

2. உங்களுக்கு தியானம் பயிற்சியான பிறகு, 5-5 நிமிடங்களாக பயிற்சி நேரத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.

3. தொடக்க காலத்தில் தியானம் செய்ய இசையை பயன்படுத்தலாம். பயிற்சியான பிறகு இசையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

4. எவ்வளவு நேரம் அமைதியாக அமர்ந்து மூச்சுக் காற்றை கவனிக்கிறார்களோ அவ்வளவு நன்மைகளை அடைவீர்கள்.


தியான நிலை என்பது என்ன?

தியானத்தில் இருக்கும் போது, பல வகையான உணர்வுகளை தியானம் செய்பவர்கள் அனுபவிப்பார்கள். அந்த அனுபவங்களைத்தான் தியான நிலை என்று பலர் எண்ணுகிறார்கள். நானும் தியானத்தின் போது பலவகையான அனுபவங்களை அனுபவித்திருக்கிறேன். அந்த அனுபவங்களை கொண்டு நான் எதையோ சாதித்து விட்டேன், நான் எதையோ அடைந்து விட்டேன் என்று நினைத்து மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். பின்புதான் உணர்ந்து கொண்டேன் என் அனுபவங்கள் அனைத்தும் என் மனதினால் உருவாக்கப்பட்ட கற்பனைகள் என்று.

தியானத்தை பற்றி பேசுபவர்களுக்கு கூட உண்மையான தியான நிலை என்பது எப்படி இருக்கும் என்று தெரியுமா என்பது சந்தேகமே. தியான நிலையை விளக்கும் அளவுக்கு எனக்கு தெளிவு கிடையாது ஆனாலும் நான் உணர்ந்ததை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.

தியானத்தின் போது தியானம் செய்பவர்கள் அனுபவிக்கும், எண்ணங்கள், உணர்வுகள், அவர்கள் செவிமடுக்கும் ஓசைகள், காணும் காட்சிகள் அனைத்தும் அவர்களின் கற்பனைகள் மட்டுமே. அவை எதுவும் உண்மை கிடையாது. அதனால் தியானத்தில் கிடைக்கும் உணர்வுகள், எண்ணங்கள், மற்றும் காட்சிகளை கண்டு மகிழ்ச்சி அடையவும் தேவையில்லை, பயப்படவும் தேவையில்லை. தியானத்தின் போது தெய்வத்தைக் கண்டாலும், பேயைக் கண்டாலும் இரண்டுமே கற்பனைதான். அதனால் மகிழ்ச்சியோ பயமோ இரண்டுமே தேவையில்லை.

தியானம் என்பதே எண்ணங்கள் அற்ற நிலைக்கு செல்லும் ஒரு வழிமுறைதான். எண்ணங்களின் குவியலான மனமானது செயல்படாமல், புதிய எண்ணங்கள் உருவாகாமல், நாம் நம்மோடு தனித்திருக்கும் நிலைதான் தியானம். அந்த தியான நிலையில் நாம் மட்டுமே இருக்க வேண்டும். நம்மை தவிர நம்முடன் எது இருந்தாலும் அது நமது கற்பனைகள் மட்டுமே.

சரி உண்மையான தியான நிலை எப்படி இருக்கும்? சில எடுத்துக்காட்டுகள் சொல்கிறேன். இரயில் தண்டவாளத்தின் அருகில் இருக்கும் போது ஒரு இரயில் நம்மை கடந்து சென்றால், இரயில் செல்லும் ஓசை ஒரே இரைச்சலாக இருக்கும். அந்த இரயில் கடந்து சென்ற பிறகு ஒரு அமைதி உருவாகுமே அதுதான் தியானத்தின் நிலை. சினிமாவிலோ, கூட்டத்திலோ, சாலைகளிலோ இருக்கும் போது, ஒரு இரைச்சலான சத்தம் உருவாகி, பின்னர் அந்த சத்தங்கள் ஓயும்போது ஒரு அமைதி நிலவுமே அதுதான் தியான நிலை.

அந்த அமைதிதான், அந்த சூழ்நிலைதான் மனிதனின் உண்மையான சுயநிலை. அந்த அமைதியை அடைவதுதான் தியானத்தின் நோக்கம். அந்த அமைதியை அடைவதுதான் தியான நிலை. அந்த அமைதியில் நிலைத்திருப்பதுதான் சமாதி நிலை. சம + ஆதி, அதாவது ஆதி பரம்பொருளுடன் நிலைத்திருக்கும் நிலை.

தியானம் செய்பவர்கள் தொடக்கத்தில் மணி கணக்காக தியானம் செய்யத் தேவையில்லை. ஒரு நாளைக்கு ஒரு நிமிடம் இந்த நிலையை அடைந்து விடுங்கள் அது போதும். தியானம் செய்ய தொடங்கிய உடனே இந்த அமைதி நிலையை அடைந்து விட முடியாது. பல வருடங்கள் ஆகலாம். ஆனால் இந்த அமைதி நிலையை, தியான நிலையை அடைய எந்த முயற்சியும் செய்யாதீர்கள், செய்யவும் தேவையில்லை. அமைதியாக அமர்ந்து மூச்சை கவனிக்க தொடங்குங்கள். மற்றவை அனைத்தும் சுயமாகவே நடக்கும்.

மூச்சுப்பயிற்சி செய்யும் வழிமுறைகள்

1. விரிப்பு, பாய் அல்லது தடிப்பான துணியை விரித்து தரையில் வசதியாக அமரவும்.

2. தரையில் அமர்வது கடினமாக இருந்தால் நாற்காலி அல்லது சோஃபாவில் அமரவும்.

3. முதுகு தண்டை நேராக வைத்துக் கொள்ளவும்.

4. இறுக்கம் இல்லாமல், அமைதியாகவும், தளர்வாகவும் அமரவும்.

5. பயிற்சியை வற்புறுத்தி செய்யக் கூடாது.

பயிற்சி முறைகள் 
1. ஆழமாக மூச்சை இழுத்து, மெதுவாகவும் மென்மையாகவும் வெளியில் விடவும். 3 முறைகள்

2. மூக்கின் வலது துவாரத்தை விரலால் அடைத்துக் கொண்டு இடது துவாரம் வழியாக மூச்சை உள்ளே இழுக்கவும். பின்பு வெளியில் விடவும். 3 முறைகள்

3. மூக்கின் இடது துவாரத்தை விரலால் அடைத்துக் கொண்டு வலது துவாரம் வழியாக மூச்சை உள்ளே இழுக்கவும். பின்பு வெளியில் விடவும். 3 முறைகள்

4. மூக்கின் வலது துவாரத்தை அடைத்துக் கொண்டு, இடது துவாரம் வழியாக மூச்சை உள்ளே இழுக்கவும். பின்பு இடது துவாரத்தை அடைத்துக் கொண்டு, வலது துவாரம் வழியாக மூச்சை விடவும். 3 முறைகள்.

5. மூக்கின் இடது துவாரத்தை அடைத்துக் கொண்டு, வலது துவாரம் வழியாக மூச்சை உள்ளே இழுக்கவும். பின்பு வலது துவாரத்தை அடைத்துக் கொண்டு, இடது துவாரம் வழியாக மூச்சை விடவும். 3 முறைகள்.

6. மூச்சு ஆழமாக உள்ளே இழுத்து, இயன்ற வரை மூச்சை உள்ளே அடக்கவும். பின்பு மெதுவாக வெளியில் விடவும். 3 முறைகள்

7. இப்போது தியானத்தை தொடங்கவும்.


தியானத்திற்கு ஒரு அறிமுகம்

தியானம்
தியானம் என்பது உடல், மனம் மற்றும் ஆற்றலை கட்டுப்படுத்த மற்றும் சீராக வைத்திருக்க ஒரு பயிற்சியாகும். தியானம் ஆன்மீக வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும். தியானம் என்பது எந்த மதத்துக்கும், நம்பிக்கைக்கும் தொடர்பு இல்லாதது. சற்று உன்னிப்பாக கவனித்தால் தியானம் எல்லா மதத்திலும் நம்பிக்கையிலும் வெவ்வேறான வடிவில் இருப்பது புரியும்.

தியானம் பல வழிமுறைகளில் பயிற்சி செய்யப்படுகிறது. சிலர் தியானத்தை மட்டுமே தனியாகவும், சிலர் மற்ற சில பயிற்சிகளுடன் சேர்த்தும் செய்கிறார்கள். பல்வேறு வழிமுறைகளில் பயிற்சி செய்தாலும் தியானத்தின் நோக்கம் என்பது உடல், மனம் மற்றும் ஆற்றலை கட்டுப்படுத்துவதும் மற்றும் சீராக வைத்திருப்பதும் மட்டுமே.

மூச்சு பயிற்சி 
மூச்சு பயிற்சி உடலையும், மனதையும், ஆற்றலையும் கட்டுப்படுத்த மிகவும் முக்கியமானது. மூச்சு பயிற்சி என்பது மூச்சுக் காற்றை கட்டுப்படுத்தும் பயிற்சியல்ல மாறாக மூச்சுக் காற்றை சீர்படுத்தும் பயிற்சி மட்டுமே. சுவாசத்தின் போது உள்ளே செல்லும் மூச்சையும் வெளியேறும் மூச்சையும் கவனிப்பது, மனதையும் உடலின் ஆற்றலையும் சமப்படுத்தும். உடலும் மனமும் இணைந்து செயல்பட உதவும். சம நிலையில் இருக்கும் மனமும் ஆற்றலும் சுலபமாகவும் முழுமையாகவும் தியானம் செய்ய உதவும்.

தியான நிலை என்பது என்ன?

தியானத்தில் இருக்கும் போது, பல வகையான உணர்வுகளை தியானம் செய்பவர்கள் அனுபவிப்பார்கள். அந்த அனுபவங்களைத்தான் தியான நிலை என்று பலர் எண்ணுகிறார்கள். நானும் தியானத்தின் போது பலவகையான அனுபவங்களை அனுபவித்திருக்கிறேன். அந்த அனுபவங்களை கொண்டு நான் எதையோ சாதித்து விட்டேன், நான் எதையோ அடைந்து விட்டேன் என்று நினைத்து மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். பின்புதான் உணர்ந்து கொண்டேன் என் அனுபவங்கள் அனைத்தும் என் மனதால் உருவாக்கப்பட்ட கற்பனைகள் என்று.

தியானத்தை பற்றி பேசுபவர்களுக்கு கூட உண்மையான தியான நிலை என்பது எப்படி இருக்கும் என்று தெரியுமா என்பது சந்தேகமே. தியான நிலையை விளக்கும் அளவுக்கு எனக்கு தெளிவு கிடையாது ஆனாலும் நான் உணர்ந்ததை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.

தியானத்தின் போது தியானம் செய்பவர்கள் அனுபவிக்கும், எண்ணங்கள், உணர்வுகள், அவர்கள் செவிமடுக்கும் ஓசைகள், காணும் காட்சிகள் அனைத்தும் அவர்களின் கற்பனைகள் மட்டுமே. அவை எதுவும் உண்மை கிடையாது. அதனால் தியானத்தில் கிடைக்கும் உணர்வுகள், எண்ணங்கள், மற்றும் காட்சிகளை கண்டு மகிழ்ச்சி அடையவும் தேவையில்லை, பயப்படவும் தேவையில்லை. தியானத்தின் போது கடவுளை கண்டாலும் பேயை கண்டாலும் இரண்டுமே கற்பனைதான்.

தியானம் என்பதே எண்ணங்கள் அற்ற நிலைக்கு செல்லும் ஒரு வழிமுறைதான். எண்ணங்களின் குவியலான மனமானது செயல்படாமல், புதிய எண்ணங்கள் உருவாகாமல், நாம் நம்மோடு தனித்திருக்கும் நிலைதான் தியானம். அந்த தியான நிலையில் நாம் மட்டுமே இருக்க வேண்டும், நம்மை தவிர நம்முடன் எது இருந்தாலும் அது நமது கற்பனைகள் மட்டுமே.

சரி உண்மையான தியான நிலை எப்படி இருக்கும்?. சில எடுத்துக்காட்டுகள் சொல்கிறேன். இரயில் தண்டவாளத்தின் அருகில் இருக்கும் போது ஒரு இரயில் நம்மை கடந்து சென்றால், இரயில் கடந்து சென்ற பின்பாக ஒரு அமைதி உருவாகுமே அதுதான் தியானத்தின் நிலை. சினிமாவிலோ, கூட்டத்திலோ, சாலைகளிலோ இருக்கும் போது, ஒரு இரைச்சலான சத்தம் உருவாகி, பின் அந்த சத்தம் ஓயும்போது ஒரு அமைதி நிலவுமே அதுதான் தியான நிலை.

அந்த அமைதிதான், அந்த சூழ்நிலைதான் மனிதனின் உண்மையான சுயநிலை.  அந்த அமைதியை அடைவதுதான் தியானத்தின் நோக்கம். அந்த அமைதியை அடைவதுதான் தியான நிலை. அந்த அமைதியில் நிலைத்திருப்பதுதான் சமாதி நிலை. சம + ஆதி, அதாவது ஆதி பரம்பொருளுடன் நிலைத்திருக்கும் நிலை.

மணி கணக்காக தியானம் செய்ய தேவையில்லை, ஒரு நாளைக்கு ஒரு நிமிடம் இந்த நிலையை அடைந்து விடுங்கள் அது போதும். தியானம் செய்ய தொடங்கிய உடனே இந்த அமைதி நிலையை அடைந்து விட முடியாது, பல வருடங்கள் ஆகலாம். ஆனால் இந்த அமைதி நிலையை, தியான நிலையை அடைய எந்த முயற்சியும் செய்யாதீர்கள், செய்யவும் தேவையில்லை. அமைதியாக அமர்ந்து எண்ணங்கள் கவனிக்க தொடங்குங்கள். மற்றவை அனைத்துமே சுயமாக நடக்கும்.