ரெய்கி வகுப்பு
ரெய்கி வகுப்பு
நோய்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நோய்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உண்மையான நோய்களும், நோய்க்கான காரணங்களும்

உடலில் ஏதாவது தொந்தரவுகள் தோன்றினால். அந்த தொந்தரவை மட்டுமே பார்த்து பயந்து கொண்டிருப்பார்கள் பலர். அந்த தொந்தரவு ஏன் உருவானது என்று சிந்திக்காமல், எப்படி சரி செய்வது என்பதில் மட்டுமே சிந்தனை இருக்கும். ஒரு நோய் உருவாக காரணமாக இருப்பனவற்றை சரி செய்யாமல் நோயை எவ்வாறு குணப்படுத்துவது?.

1. கண் நோய்கள், பார்வைக் கோளாறுகள், கண் கட்டிகளுக்கும், கண்கள் காரணம் இல்லை.

2. சலி, மூக்கடைப்பு, சைனஸ், இளைப்புக்கும் மூக்கு காரணம் இல்லை.

3. காது வலி, காது அடைப்பு, காதுகளில் அரிப்பு, கேட்கும் திறன் குறைவுக்கும் காது காரணம் இல்லை.

4. வாய், நாக்கு, உதடு புண்ணுக்கும், வாய் துர்நாற்றத்துக்கும், காரணம் வாயோ, நாக்கோ அல்ல.

5. தோல் நோய், புண், வெண் குஷ்டம், அலர்ஜி, அரிப்புகளுக்கு, முடி கொட்டுதல், மற்றும் பொடுகுக்கு காரணம் தோல் அல்ல.

தொந்தரவுகள் தோன்றும் இடத்தில் தான் உண்மையான நோய் இருக்கவேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது. இதனால் தான் என்ன வைத்தியம் செய்தாலும், இந்த நோய்கள் குணமாவதில்லை. இந்த நோய்களுக்கான உண்மைக் காரணத்தை அறிந்து மருத்துவம் செய்தால் தவிர, இவை தீராது. நோயின் மூலக் காரணங்கள் கூட அறியாதவர்கள், இவற்றை சரிசெய்ய நிச்சயமாக முடியாது.

நோய்கள் பலவாக இருந்தாலும், அவற்றை குணப்படுத்த, சில எளிய வழிமுறைகள் உள்ளன. அவைதான். தனித்திரு, விழித்திரு, பசித்திரு.

தனித்திரு - கவலை, துக்கம், கர்வம், பயம், எரிச்சல், போன்ற எந்த கெட்ட குணங்களும் மனதை அண்டாமல். நீங்கள் தனி உயிர் எந்த சூழ்நிலைக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை, என்பதை உணர்ந்து தனித்திருங்கள்.

விழித்திரு - உடலில் என்ன நடக்கிறது? ஏன், எதனால், நடக்கிறது என்று விழிப்பாக பாருங்கள், புரிந்துகொள்ளுங்கள்.

பசித்திரு - பசி எனும் உணர்வை உணருங்கள். நன்றாக பசி உருவாகும் வரையில் காத்திருங்கள். பசி இல்லாமல் அமிர்தமாக இருந்தாலும் உண்ணாதீர்கள். பசி அடங்கியவுடன்,  உடனே உண்பதை நிறுத்துங்கள்.

இவை மூன்றையும் பின்பற்றினால். உலகில் உள்ள அனைத்து நோய்களும் சுயமாக குணமாகும்.


ADR எனும் எமன் - மருந்துகளின் பக்க விளைவுகள்

ஆங்கிலத்தில் ADR என்று அழைக்கப்படும் இந்தத் தொந்தரவு, இந்த காலகட்டத்தில் பல நோயாளிகளை வாட்டி வதைக்கும் தொந்தரவாக உருவெடுத்துள்ளது. உண்மையில் இப்படி ஒரு நோய் உருவானதும், இந்த நோயினால்தான் நாம் பல உடல் உபாதைகளை அனுபவிக்கின்றோம் என்பதும் பல நோயாளிகளுக்கு தெரிவதில்லை. மற்றும் தெரியாமல் மறைக்கப்படுகிறது.

பல நோயாளிகள் இன்று அனுபவிக்கும் பெரும்பாலான உடல் உபாதைகள் நோய்களினால் உருவானவை அல்ல மாறாக ஏ.டி.ஆரினால் உருவாக்கப்பட்டவை.

ADR என்றால் என்ன?
ஏ.டி.ஆரின் முழு விளக்கம் ADR "Adverse drug reaction" அதாவது எதிர் எதிர் மருந்துகளின் பக்கவிளைவுகள். ஆங்கில மருத்துவர்கள் கொடுக்கும் அனைத்து மருந்துகளும் முழுக்க முழுக்க உடலுக்கு ஒவ்வாத இரசாயனங்களினால் ஆனவை. இது மருந்து கொடுக்கும் மருத்துவர் உட்பட அதனை உட்கொள்ளும் நோயாளி வரையில் அனைவருக்கும் தெரியும். தெரிந்தே நோயாளிகளும் உட்கொள்கிறார்கள் அவர்களின் குழந்தைகளுக்கும் கொடுக்கிறார்கள்.

ஆங்கில மருத்துவத்தின் கேடுகளை பற்றிய விழிப்புணர்வு இல்லாத இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், மலேசியா போன்ற ஏழை மற்றும் வளரும் நாடுகளில்தான் ஆங்கில மருத்துவர்கள் கொடுப்பதை (medicine) மருந்து என்று அழைக்கிறார்கள் ஆனால் மேற்கத்திய மற்றும் வளர்ந்த நாடுகளில் இவற்றை (drugs) போதைப் பொருள் என்றே அழைக்கிறார்கள். ஆங்கில மருத்துவர்கள் கொடுப்பது மருந்து அல்ல, நோயாளிகள் தன் நோயை உணராமல் இருக்க கொடுக்கப்படும் போதைப் பொருட்கள் மட்டுமே.

ADR உருவாக்கும் உடல் தொந்தரவுகள்
ADR "Adverse drug reaction" அதாவது எதிர் எதிர் மருந்துகளின் பக்கவிளைவுகள் என்பது, இரண்டு வெவ்வேறு இரசாயன மருந்துகளை ஒரே நேரத்தில் உட்கொள்ளும் போது உண்டாகும் பக்க விளைவாகும். ஆங்கில மருத்துவம் மட்டுமல்ல, சித்த, யுனானி, ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற மருந்துகளுக்கும் இது பொருந்தும்.

உதாரணத்துக்கு ஒரு நீரிழிவு (இனிப்பு நீர்) நோயாளியை எடுத்துக்கொள்வோம். அவருக்கு இரத்த அழுத்தமும், அசதியும் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஆங்கில மருத்துவர் அவரின் நீரிழிவுக்கு ஒரு மருத்து கொடுக்கிறார். இரத்த அழுத்தத்துக்கு ஒரு மருந்து கொடுக்கிறார். உடல் தெம்புக்கும் ஒரு மருந்து கொடுக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.

மேலே கூறப்பட்ட எல்லா தொந்தரவுகளுக்கும் மருந்துகள் இரசாயனங்களில் இருந்துதான் உருவாக்கப்படுகின்றன. எல்லா மருந்துகளும் தனி தனியே சோதிக்கப்படுகின்றன. உயிருக்கு ஆபத்து இல்லை என்று நிரூபிக்கப்பட்டு மனிதர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

ஏ .டி.ஆரின் - பக்கவிளைவுகள் எங்கு தொடங்குகின்றன?
மேலே உள்ள தொந்தரவுகளுக்கு மருத்துவர் குறைந்தது மூன்று முதல் ஐந்து மருந்துகள் வரையில் கொடுப்பார். அவர் கொடுக்கும் மருந்துகள் அனைத்துமே தனி தனியாக சோதிக்கப் பட்டவை. தனி தனியே சாப்பிடும் போது உயிருக்கு ஆபத்து இல்லை ஆனால் இரண்டு மருந்துகள் என்பது வெவ்வேறு இரசாயன கலவைகளாகும். இரண்டு வெவ்வேறு இரசாயன கலவைகள் ஒன்றாக வயிற்றுக்குள் சென்றால் என்ன நடக்கும்?

இது யாருக்கும் தெரியாது. மருந்து கொடுக்கும் மருத்துவருக்கும் தெரியாது. மருந்து தயாரிக்கும் மருந்து கம்பெனிகளுக்கும் தெரியாது.

இரண்டு வெவ்வேறு இரசாயன கட்டமைப்பு கூறுகள் ஒன்றாகச் சேரும்போது அது மூன்றாவதாக ஒரு விளைவை உண்டாக்குகிறது. மூன்று, நான்கு, ஐந்து என மாத்திரைகள் அதிகரிக்கும் போது அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து உருவாக்கும் விளைவுகளை யாராலும் கணிக்க முடியாது.

ஏ .டி.ஆரின் - நடைமுறை உதாரணம்
தேநீரை தனியாக சாப்பிடும்போது நன்றாக இருக்கும் காப்பியும் தனியாக சாப்பிடும்போது நன்றாக இருக்கும். ஆனால் இரண்டையும் ஒன்று கலந்தால் என்ன ஆகும்? தேநீர், காப்பியுடன், ஹார்லிக்ஸ் கலந்தால் என்ன ஆகும்? அதன் சுவை எப்படி இருக்கும்?அதனுடன் பூஸ்ட் கலந்தால்? அதில் பெப்சி கலந்தால்? இந்த ஐந்து பானங்களின் கலவையை சிறிது கற்பனை செய்துபாருங்கள்.

ஐந்து மாத்திரைகளை ஒன்றாக சாப்பிடும் போது இதுதான் உடலின் உள்ளே நடக்கிறது.

ஏ .டி.ஆர் - உருவாக்கும் பக்கவிளைவுகள் எப்படி இருக்கும்?
இந்தக் கேள்விக்கு இந்த உலகத்தில் யாராலும் பதில் சொல்ல முடியாது. அப்படியே சொன்னாலும் அது சரியானதாக இருக்கவும் முடியாது. ஐந்து வகையான மாத்திரை கலவையை பத்து நபர்களுக்கு கொடுத்தால் அதன் விளைவு ஒரே மாதிரியாக இருக்காது, அதற்குக்  காரணம், மருந்துகளின் விளைவு என்பது நோயாளியின் நோயின் தன்மை, உடல் வாகு, வாழ்க்கை முறைகள், உணவு முறைகள், மனபக்குவம் இப்படி பல விசயங்களை சார்ந்து மாறுபடும்.

இதனால்தான் சிலருக்கு இரசாயன மருந்துகள் ஒத்து போகின்றன சிலருக்கு கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றன. இன்று உலகில் வினோதமான சில நோய்கள் தோன்றுவதற்கும் எ.டி.ஆர் தான் காரணம்.

ஏ .டி.ஆர் - எச்சரிக்கை
சிலருக்கு ஆங்கில மருந்துகளை உட்கொண்ட பின்பு ஏதாவது தொந்தரவுகள் புதிதாக உருவானால் அல்லது இருக்கின்ற தொந்தரவு அதிகரித்தால், அது நோயின் தாக்கம் அல்லது அலர்ஜி என்று நம்மை நாமே சமாதானபடுத்திக் கொள்கிறோம் அல்லது மருத்துவர்கள் நம்மை சமாதானப்படுத்துவார்கள். ஆனால் ஏன் அந்த மாத்திரைகளை உட்கொண்ட பின்பு இந்த புதிய தொந்தரவுகள் உண்டானது என்று சிந்திக்கும் வரையில் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்காது.

நோய்களை குணப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு தீராத நோய்களிலும், தீவிர நோய்களிலும் சென்று சிக்கிக்கொள்ளாதீர்கள். பல ஆங்கில மருந்துகளை ஒன்றாக உட்கொள்ளும் போது மட்டுமின்றி, புட்டியில் அடைக்கப்பட்ட சித்த, யுனானி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், போன்ற மருந்துகளை ஒன்றாக உட்கொள்ளும் போதும் இது போன்ற விளைவுகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன.

மருந்து மாத்திரைகள் மட்டுமின்றி, நாம் அனுதினமும் பயன்படுத்தும் உணவுகளில் கலக்கப்படும் இரசாயனங்களும், அழகு சாதன பொருட்களில் கலக்கப்படும் இரசாயனங்களும், மற்றும் நாம் பயன்படுத்தும் மற்ற பொருட்களில் கலக்கப்படும் இரசாயனங்களும் ஏ .டி.ஆரை உருவாக்க வாய்புகள் உள்ளன. அதனால் இரசாயனங்களின் பயன்பாட்டைத்  தவிர்த்துவிடுங்கள்.

“இயற்கைக்குத் திரும்புங்கள், ஆரோக்கியமாக வாழுங்கள்"


அனைத்து நோய்களையும் குணமாக்கும் வழிமுறைகள்

இக்கட்டுரையை நோய் கண்டவர்களுக்காகவும், நோய்களுக்கு மருத்துவம் செய்பவர்களுக்காகவும் எழுதுகிறேன். பல வருடங்களாக மருத்துவம் செய்தும் நோய்கள் ஏன் குணமாகவில்லை என்று குழம்புவோருக்கும் இந்த கட்டுரையில் பதில் உள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ விருப்பப்படுபவர்களும் இந்த கட்டுரையை வாசியுங்கள். கட்டுரையை வாசிக்கும் முன்பாக ஒன்றை முதலில் விளங்கிக் கொள்ளுங்கள்.

அனைத்து வகையான நோய்களுக்கும், தொந்தரவுகளுக்கும், உபாதைகளுக்கும், இயலாமைக்கும் நிச்சயமாக ஒரு மருத்துவமோ, தீர்வோ இருக்கும். மருத்துவமோ, தீர்வோ இல்லாத தொந்தரவுகள் யாருக்கும் உருவாவதில்லை.

தலைவலி முதலாக எயிட்ஸ் வரையில் அனைத்து நோய்களுக்கும் ஏதாவது ஒரு தீர்வு நிச்சயமாக இருக்கும். மருத்துவம் தெரியாதவர்களிடமும், மனித உடல் அமைப்பை முழுமையாக அறியாதவர்களிடமும் சிக்கிக்கொண்டு, குணபடுத்த முடியாத நோய்கள் உண்டு என்ற தப்பான எண்ணத்தை வளர்த்துக் கொள்ளாதீர்கள். குறிப்பாக அனைத்து நோய்களுக்கும் ஆங்கில மருத்துவமே தீர்வு என்ற தவறான முடிவுக்கு வராதீர்கள். இன்று பெரும்பாலானோர் தங்கள் நோய்கள் குணமாகாமல் நிரந்தர நோயாளிகளாகவே வாழ்வதற்கு முக்கிய காரணமாக இருப்பது, ஆங்கில மருத்துவமே அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு என்று நம்புவதுதான்.

எந்த ஒரு நோய்க்கும் நிரந்தர தீர்வை தேட வேண்டுமே ஒழிய தற்காலிகமான தீர்வை நாடக்கூடாது. ஒரு நோயை முழுமையாக குணப்படுத்த வேண்டுமென்றால் முதலில் அந்த நோயின் தொடக்கத்தையும், அதன் மூலகாரணத்தையும் அறிந்துக் கொள்ள வேண்டும். நோயின் மூல காரணத்தை அறியாமல் யாராலும் எந்த நோயையும் குணப்படுத்த இயலாது.

நோய்களை பற்றிய சில முக்கிய குறிப்புகள்
1. வலியோ தொந்தரவோ இருக்கும் இடத்தில் தான் நோய் இருக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது.

2. தொந்தரவுகள் உண்டான உடன் தான் நோய் தோன்றியது என்று அர்த்தம் கிடையாது. சிறுவயது முதலாக சிறிது சிறிதாக சேர்ந்த கழிவுகளே பின்னாளில் உடலில் தொந்தரவாக வெளிப்படுகின்றன.

3. உடலில் சேரும் கழிவுகளே உடல் உறுப்புகளின் இயக்கத்தை தடுக்கின்றன, கட்டுப்படுத்துகின்றன.

4. உடலில் சேரும் கழிவுகளே அனைத்து வலிகள், இயலாமை, தொந்தரவுகள் மற்றும் நோய்களுக்கு மூல காரணமாக இருக்கின்றது.

5. உடலில் சேரும் கழிவுகளே அனைத்து உபாதைகளுக்கும் மூல காரணமாக இருப்பதனால், அந்த கழிவுகளை வெளியேற்றுவதும், புது கழிவுகள் உடலில் சேராமல் தடுப்பதுமே மருத்துவமாக இருக்க வேண்டும்.

6. எப்போதும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ ஆசைப்படுவோர், உடலில் சேர்ந்துள்ள கழிவுகளை முதலில் வெளியேற்ற வேண்டும். மேலும் புது கழிவுகள் உடலில் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

7. நீங்கள் எந்த வைத்தியம் செய்தாலும், ஆங்கில மருத்துவமோ, சித்த மருத்துவமோ, யுனானியோ, ஹோமியோபதியோ, அக்குபஞ்சரோ, எந்த மருத்துவமாக இருந்தாலும், அவர்கள் செய்யும் ஒரே மருத்துவம் உடலில் சேர்ந்த கழிவுகளை வெளியேற்றுவதாக மட்டுமே இருக்க வேண்டும்.

8. உடலின் நோய்களை குணப்படுத்த உடலால் மட்டுமே முடியும். எந்த மனிதனாலும் நிச்சயமாக முடியாது.

9. மருத்துவர்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை, கழிவுகளை வெளியேற்ற உடலுக்கு உறுதுணை புரிவது மட்டுமே.

10. கழிவுகளை மட்டும் வெளியேற்றிவிட்டால் போதும் உடல் தன்னை தானே குணப்படுத்திக் கொள்ளும்.

11. கழிவுகள் உடலில் சேர முக்கிய காரணமாக இருப்பது இரண்டு. ஒன்று செரிமானம் கோளாறு மற்றொன்று மலச்சிக்கல். இவை இரண்டையும் ஒழுங்குப்படுத்த வேண்டும்.

12. உடலில் கழிவு சேரும் மற்ற காரணங்களை முந்தைய கட்டுரைகளில் வாசிக்கலாம்.

நோய்களை குணப்படுத்தும் வழிமுறை உதாரணம்
ஒருவர் மூச்சுவிட சிரமப்படுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருடைய இந்த தொந்தரவுக்கு ஆங்கில மருத்துவர்கள், பல பெயர்கள் சூட்டுவார்கள், ஆனால் உண்மையில் அவருடைய தொந்தரவு என்ன? மூச்சு விட சிரமமாக உள்ளது அவ்வளவு தானே. இதை எவ்வாறு குணப்படுத்துவது?.

உண்மையில் இந்த நோயாளியை குணப்படுத்துவது மிகச் சுலபம் ஆனால் சில மருத்துவர்கள் அதை செய்யமாட்டார்கள். அந்த நோயாளியை வைத்து பணம் பண்ணுவதற்காக அவரின் நோய் குணமாகாமல் பார்த்துக் கொள்வார்கள், அல்லது அந்த நோயின் தீவிரத்தை அதிகமாக்குவார்கள்.

இந்த நோயாளியை குணபடுத்த என்ன செய்ய வேண்டும்? முதலில் மூச்சுவிட உடலுக்கு எந்த உறுப்பு துணைப் புரிகிறது? நுரையீரல். மூச்சுவிட சிரமமாக இருந்தால் அல்லது மூச்சு தொடர்பான தொந்தரவுகள் இருந்தால் நுரையீரலுக்கு மருத்துவம் செய்ய வேண்டுமே ஒழிய, மூச்சுவிட உதவி செய்கிறேன் என்று மூக்குக்கு மருத்துவம் செய்யக் கூடாது.

அவர் நோய் முழுமையாக குணமாக
1. நுரையீரலில் சேர்ந்திருக்கும் கழிவுகளை முதலில் வெளியேற்ற வேண்டும்.

2. எவ்வாறு கழிவுகள் சேர்ந்தன என்பதைக் கண்டறிந்து; புதுக் கழிவுகள் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

3. நுரையீரலுக்கு சக்தி அளிக்க வேண்டும்.

4. ஒழுங்கான வாழ்க்கை முறைகளையும், உணவு முறைகளையும் கற்றுத்தர வேண்டும்.

5. இவற்றைச் செய்தால், உடலே அவரின் நோய்களை சுயமாக குணப்படுத்திவிடும். தொந்தரவுகள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும்.

6. அந்த ஆரோக்கியம் நிரந்தரமாக நிலைத்தும் இருக்கும்.

நோய்களைக் குணப்படுத்துவது எவ்வளவு சுலபம் பார்த்தீர்களா?எந்த மருத்துவர் இவற்றைச் செய்கிறாரோ அவர் மட்டுமே உண்மையான மருத்துவர். மூச்சுத்  திணறல் என்றதும் மூக்கில் கேஸ் வைப்பதும், வாயில் ஸ்பிரே அடிப்பதும்  எந்த காலத்திலும் நிரந்தரமான தீர்வாக அமையாது. அந்த நபர் இறுதிவரையில் நோயாளியாகவே வாழ நேரிடும்.

மருந்துகளை உட்கொள்ளும் வரையில் மூச்சு சுலபமாக விடலாம், இந்த ஸ்பிரே அடிக்கும் போது மூச்சு சுலபமாக விடலாம் என்றும், மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதை நிறுத்தினால் உங்கள் உயிருக்கு நாங்கள் உத்தரவாதம் இல்லை என்றும் மிரட்டி மக்கள் பணத்தைப்  பறிக்கும் கொள்ளை கூட்டத்திடம் சிக்கிக்கொள்ளாதீர்கள்.

மருத்துவம் செய்யும் வழிமுறைகள்
இந்த மருத்துவம் செய்யுங்கள், அந்த மருத்துவம் செய்யாதீர்கள் என்று நான் பரிந்துரைக்க மாட்டேன். உங்கள் உடல், உங்கள் நோய், உங்கள் பணம், உங்கள் விருப்பம். ஆனால் மருத்துவம் செய்யும் வழிமுறைகளை மட்டும் விளக்குகிறேன். மருத்துவரை காண சென்றால்..

1. உங்களுக்கு உருவாகியிருக்கும் தொந்தரவுகளின் மூல காரணத்தைக்  கேளுங்கள். குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதைப் போன்று, தொந்தரவுகளுக்கு பெயர்களை மட்டுமே சூட்டி உங்களை ஏமாற்றப் பார்ப்பார்கள். ஏமாறாதீர்கள். நோயைப்பற்றிய தெளிவாக விளக்கம் கேளுங்கள்.மூல காரணம் கேளுங்கள், கூறவில்லை என்றால் அவரிடம் மருத்துவம் செய்யாதீர்கள், கிளம்பிவிடுங்கள்.

2. உங்கள் தொந்தரவுகளை தவிர்க்கும் வழிமுறைகளை கேளுங்கள். இனிமேல் அந்த தொந்தரவு உண்டாகாமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்று கேளுங்கள்.

3. அவர்கள் கொடுக்கும் மருந்து / சிகிச்சை என்ன செய்யும், எவ்வாறு நோய்களைக்  குணபடுத்த உதவும் என்று கேளுங்கள்.

4. அவர்கள் கொடுக்கும் மருந்துகளின் / சிகிச்சையின் பக்கவிளைவுகளை தெளிவாக கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.

5. அனைத்துக்கும் மேலாக அந்த மருத்துவர் எவ்வாறு நடந்துகொள்கிறார், எவ்வாறு பேசுகிறார் என்பதை கவனியுங்கள். உங்களை பயமுறுத்தும் நோக்கத்துடனோ, மரண பயம், நோயின் பயம் உருவாக்கும் பாணியிலோ பேசினால், பேச்சை நிறுத்திவிட்டு கிளம்பி விடுங்கள்.

6. நோயாளிகளுக்கு நம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுப்பவர் மட்டுமே உண்மையான மருத்துவர். பயத்தை உருவாக்குபவன் ஏமாற்றுக்காரன்.

7. அந்த மருத்துவர் மன தைரியத்தை கொடுத்தால், அவர்கள் கொடுக்கும் மருந்து உடலின் கழிவுகளை வெளியேற்றும் என்றால், உடலுக்குத் தெம்பை கொடுக்கும் என்றால், அவர் கொடுக்கும் மருந்து உடலுக்குத் தீங்கு விளைவிக்காது என்றால், தொடர்ந்து வைத்தியம் செய்யுங்கள். இல்லையேல், வேறு நல்ல மருத்துவரை / மருத்துவத்தை நாடுங்கள்.மனிதர்களுக்கு உண்டாகும் நோய்கள்

மனிதர்களுக்கு நோய்கள் உண்டாவது ஒரு நல்ல அறிகுறியாகும். காரணம்,  நோய்கள் என்று நாம் கூறுபவை பெரும்பாலும் உடலில் உண்டாகும் தொந்தரவுகளைத் தான்.  உண்மையைச் சொல்வதானால் நோய்கள் எப்போதுமே தன்னை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. உதாரணத்திற்கு ஒருவருக்கு வலி உண்டாகும் வரையில் அவர் உடலில் இருக்கும் கேன்சர் வெளியில் தெரிவதில்லை. அதற்காக அவருக்கு உடலில் கேன்சர் இல்லை என்றும் அர்த்தமில்லை. கேன்சர் என்ற நோய் உண்டாகி அது வலியாக தன்னை வெளிக்காட்டிக்கொள்ள ஐந்து வருடங்கள் கூட ஆகலாம்.

அந்த ஐந்து வருடங்களாக உடலில் கேன்சர் இருந்த பொழுதும் எந்த தொந்தரவும் இருக்காது.  அதனால் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் உடலின் தொந்தரவுகள் என்பவை நோயின் அறிகுறிகள் அல்ல நோய்கள் குணமாகின்றன என்பதின் அறிகுறிகள்.  அதனால்தான் நான் கூறுகிறேன் நோய்கள் என்பவை நாம் மகிழ்ச்சி அடைய வேண்டிய விஷயம்.

நோய்கள் உருவானால் உடலின் கட்டளைகளைப் புரிந்து கொண்டு, உணவைக் குறைத்து, ஓய்வில் இருக்க வேண்டும். உடலும், மனமும், புத்தியும், இணைந்து ஒரே பாதையில் பயணித்தால் மிகவும் விரைவாகவும் எளிதாகவும் நோய்கள் குணமாகி ஆரோக்கியம் திரும்பிவிடும்.மனதினால் உருவாகும் நோய்கள்

ஏழையை செல்வந்தனாகவும், செல்வந்தனை ஏழையாகவும், முட்டாளை அறிவாளியாகவும், அறிவாளியை முட்டாளாகவும், நல்லவனைக் கெட்டவனாகவும், கெட்டவனை நல்லவனாகவும் மனம் முயன்றால் மாற்ற முடியும். அதைப் போலவே ஆரோக்கியமான மனிதனை நோயாளியாகவும், நோயாளியை ஆரோக்கியமாகவும் மனம் முயன்றால் மாற்றமுடியும்.

அதை சாப்பிட்டால் அந்த நோய் உருவாகும், இதை சாப்பிட்டால் இந்த நோய் உருவாகும், இந்த உணவுகளை சாப்பிட்டால் வாயு பிடிப்பு உருவாகும், ஆட்டிறைச்சி சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு உண்டாகும், கடல் உணவுகளை சாப்பிட்டால் அரிப்புகள் உண்டாகும், இனிப்பு சாப்பிட்டால் நோய்கள் உண்டாகும், பழங்களை சாப்பிட்டால் சளி உண்டாகும், போன்ற செய்திகளை வாசித்து, அதனை மனமும் நம்பிக்கை கொண்டுவிட்டால்,அந்த குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடும் போதெல்லாம் உடலில் அந்த குறிப்பிட்ட நோய்களை உருவாக்க வாய்ப்புகள் உள்ளன.

இந்த பருவத்தில் இந்த நோய்கள் உருவாகும், அந்த வயதில் அந்த நோய்கள் உருவாகும் என்ற தகவல்களை வாசித்தாலோ அல்லது யாராவது கூறினாலோ அவற்றை நம்பாதீர்கள். வயது அதிகரிக்கும் போது நோய்கள் உண்டாகும் என்பதும், உடல் உறுப்புகளின் செயல் திறன் குறையும் என்பதும், உடல் உறுப்புகள் செயல் இழக்கும் என்பதும் வெறும் கற்பனைகள் மட்டுமே. ஆனால் இது போன்ற செய்திகளை நம்புவோருக்கு, ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை பின்பற்றினாலும் நோய்கள் உருவாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

மழையில் நனைந்தால் நோய்கள் உருவாகும், குளத்தில், ஆற்றில், கடலில் குளித்தால் நோய்கள் உருவாகும் போன்ற வதந்திகளை நம்பிக்கைக் கொண்டோருக்கும், ஒரு நோய் உண்டானால், அதை தொடர்ந்து மற்ற புதிய நோய்களும் உருவாகும் என்று நம்புவோருக்கும், பல நோய்கள் எளிதாக உருவாக வாய்ப்புகள் உள்ளன.

இவ்வாறான நோய்கள் உருவாவதற்கு மனம்தான் காரணம். மனம் ஒன்றை நம்பிக்கை கொண்டுவிட்டால், உடல் அதனை ஏற்றுக் கொண்டு செயல்படுத்திவிடும். அதனால் மருத்துவ குறிப்புகள் என்ற பெயரில் Facebook, Whatsappகளில் உலாவரும் தேவையற்ற தகவல்களை வாசிக்காதீர்கள், நம்பாதீர்கள், பரப்பாதீர்கள். நீங்கள் ஒரு தவறான செய்தியை வாசித்து, அதை உங்கள் மனமும் நம்பிக்கை கொண்டுவிட்டால், அதன் விளைவுகள் மோசமானதாக இருக்கும்.

எந்த விசயம் எதில் வந்தாலும், யார் சொன்னாலும், அப்படியே நம்பிவிடாதீர்கள். சிந்தித்து ஆராய்ந்து பின்புதான் நம்பிக்கை கொள்ள வேண்டும்.