ரெய்கி வகுப்பு
ரெய்கி வகுப்பு
பயிற்சிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயிற்சிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அன்றாட வாழ்க்கையில் ரெய்கி ஆற்றலை எவ்வாறு உணர்ந்துக் கொள்வது? எவ்வாறு அதிகரிப்பது?

பிரபஞ்ச ஆற்றலை உணரும் வழிமுறைகள்

பிரபஞ்ச ஆற்றலை நம்புகிறோமோ இல்லையோ, அது எல்லா இடங்களிலும் நிறைந்திருந்து தன் வேலைகளை மிக சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது. நம் உடலின் பிரபஞ்ச ஆற்றலை உணர சில எளிய வழிமுறைகள்.

வழிமுறை1
1. இரு உள்ளங்கைகளையும் தேய்த்து கொள்ளுங்கள்.
2. பின், இரு உள்ளங்கைகளையும் நேர் எதிரே பார்த்தால் போல் வைத்துக்கொள்ளுங்கள். தொட வேண்டாம்.
3. சற்று நேரத்தில் உள்ளங்கைகளில் ஆற்றல் உருவாவதை உணரலாம்.
4. ஆற்றலை உணர முடியாவிட்டால், கைகளை சற்று அசைத்து கொடுங்கள்.

வழிமுறை 2
1. கை தட்டுவதைப் போன்று, இரு கைகளையும் தட்டி.
2. பின், இரு உள்ளங்கைகளையும் அருகில் வைத்துக்கொள்ளுங்கள். தொட வேண்டாம்.
3. சற்று நேரத்தில் உள்ளங்கைகளில் ஆற்றல் உருவாவதை உணரலாம்.
4. ஆற்றலை உணர முடியாவிட்டால், கைகளை சற்று அசைத்து கொடுங்கள்.

வழிமுறை 3
1. உள்ளங்கைகளை உரசி.
2. பின், இரு கைகளையும் தொடைகளின் மீது, உள்ளங்கைகள் மேலே பார்ப்பதைப் போன்று வைத்துக்கொள்ளுங்கள்.
3. சற்று நேரத்தில் உள்ளங்கைகளில் ஆற்றல் உருவாவதை உணரலாம்.

வழிமுறை 4
1. கைகளை தேய்த்து.
2. வலது கையை ஏதாவது ஒரு பொருளின் மேல் காட்டுங்கள். தொட வேண்டாம்.
3. சற்று நேரத்தில் உள்ளங்கையில் அந்த பொருளின் ஆற்றலை உணரலாம்.
4. ஆற்றலை உணர முடியாவிட்டால், கைகளை சற்று அசைத்து கொடுங்கள், அல்லது அருகிலோ தூரமோ கொண்டு செல்லுங்கள்.

வழிமுறை 5
1. சிறிது நேரம் அமைதியாக மூச்சை கவனித்து விட்டு.
2. வலது கையை ஏதாவது ஒரு பொருளின் மேல் காட்டுங்கள். தொட வேண்டாம்.
3. சற்று நேரத்தில் உள்ளங்கையில் அந்த பொருளின் ஆற்றலை உணரலாம்.
4. ஆற்றலை உணர முடியாவிட்டால், கைகளை சற்று அசைத்து கொடுங்கள், அல்லது அருகிலோ தூரமாகவோ கொண்டு செல்லுங்கள்.

வழிமுறை 6
1. சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு
2. உங்கள் உள்ளங்கையை சூரியன், நில, கடல், நெருப்பு, விலங்குகள், மனிதர்கள் போன்ற ஏதாவது ஒரு படத்தின் மீது காட்டுங்கள்.
3. சற்று நேரத்தில் உள்ளங்கையில் அந்த படத்தின் ஆற்றலை உணரலாம்.

ஆற்றலை உஷ்ணமாகவோ, குளிர்ச்சியாகவோ, அரிப்பாகவோ, அதிர்வாகவோ, துடிப்பாகவோ, மற்ற வழிகளிலும் உணரலாம். ஆற்றலின் உணர்வுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடலாம். எந்த வகையிலும் உங்களால் ஆற்றலை உணர முடியவில்லை என்றால் சற்று நேரம் அமைதியாக அமர்ந்து மூச்சை கவனியுங்கள். அல்லது தியானம் செய்யுங்கள். முதல் முயற்சியில் ஆற்றலை உணர முடியாவிட்டால் கவலை கொள்ள வேண்டாம். பல முயற்சிகளுக்கு பிறகு நிச்சயமாக உங்களால் ஆற்றலை உணர முடியும்.


ரெய்கி ஆற்றலை அனுப்பும் பயிற்சிகள்

ரெய்கி ஆற்றலை ஒரு மனிதருக்கோ, விலங்குக்கோ, தாவரத்துக்கோ, இடத்துக்கோ எளிதாக அனுப்பலாம். மன அமைதியுடனும், மன ஓர்மையுடனும், உங்கள் கரங்களை அந்த மனிதர், விலங்கு, பொருள் அல்லது இடத்தின் மீது காட்டி மனதுக்குள் ரெய்கி ஆற்றல் அவர் மீது பரவட்டும் என்று நினைத்தாலே போதும். நீங்கள் நினைத்த மாத்திரமே ரெய்கி ஆற்றல் உங்கள் உள்ளங்கைகளின் மூலமாக பரவ தொடங்கிவிடும். அதை நீங்கள் உணரவும் முடியும்.

ஒரு குறிப்பிட்ட நோயோ, தொந்தரவோ, நோக்கமோ, தேவையோ இருந்தால், அந்த நோக்கத்தை சரிசெய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனும், ரெய்கி ஆற்றலை அனுப்பலாம். உங்கள் உள்ளங்கைகளைக் காட்டி கொண்டு நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது நடக்கும். அவ்வளவு எளிமையானது ரெய்கி. இரண்டு கரங்களையும் பயன்படுத்தலாம் அல்லது வலது கரத்தை மட்டுமே பயன்படுத்தலாம்.  ரெய்கி முத்திரைகளையும் (Reiki symbols) பயன்படுத்தலாம்.

1. அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி ரெய்கி ஆற்றலை பயன்படுத்த வேண்டும்.

2. நம் வீட்டை சுற்றி இருக்கும் செடி, கொடி, மற்றும் மரங்களுக்கு ரெய்கி ஆற்றலை அனுப்ப வேண்டும்.

3. நோய்வாய்ப்பட்டிருக்கும் வீட்டு அல்லது சாலையோர விலங்குகளுக்கு ரெய்கி ஆற்றலை அனுப்ப வேண்டும்.

4. கர்ப்பம் தரித்திருக்கும் விலங்குகளுடன் ஆற்றலை பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.

5. விபத்துகளில் பாதிப்படைந்த அல்லது ஊனமுற்ற விலங்குகளுடன் உங்கள் ஆற்றலை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

6. ஆபத்தில், அவசரத்தில், அல்லது ஆம்புலன்சில் இருக்கும் மனிதர்களுடன் உங்கள் ஆற்றலை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

7. முதுமையுற்ற, ஏழ்மையில் இருக்கும் அல்லது இயலாமையில் இருக்கும் மனிதர்களுடன் உங்கள் ஆற்றல்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

8. கர்ப்பம் தரித்த தாய்மார்களுடன் ரெய்கி ஆற்றலை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

9. வீட்டுக்காக நீங்கள் வாங்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் மற்ற உணவு பண்டங்களுக்கு ரெய்கி ஆற்றலை அனுப்புங்கள்.

காய்கறிகளோ, பழங்களோ, தானியங்களோ வாங்கினால், வீடு திரும்பியதும் அவற்றின் மீது ரெய்கி ஆற்றலை அனுப்பினால் அவை அதிக நாட்கள் கெட்டு போகாமல் இருக்கும். இதை முயற்சி செய்துபாருங்கள்.

 (கைகளில் ஆற்றல் பந்தை உருவாக்கும் உதாரணம்) 

(கைகளில் ஆற்றலை உணர்தல் உதாரணங்கள்) 

ஆற்றலின் வீரியத்தை அதிகரிக்கும் பயிற்சிகள்

ரெய்கி ஆற்றல் பயிற்சிகள் 
உடலில் ஆற்றலின் உற்பத்தியை அதிகரிக்கவும், தக்கவைத்துக் கொள்ளவும், உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் சில பயிற்சிகள்.

1. ஆற்றலை அடிக்கடி கைகளில் குவித்து, ஆற்றல் பந்தை (Energy Ball) உருவாக்க வேண்டும்.

2. உள்ளங்கையில் உருவாகும் ஆற்றலை எப்போதும் கூர்மையாக கவனிக்க வேண்டும்.

3. உடலில் உருவாகும் மற்றும் இயங்கி கொண்டிருக்கும் ஆற்றலை எப்போதும் கூர்மையாக உணரவும், கவனிக்கவும் வேண்டும்.

4. இயற்கையிலும் நம்மை சுற்றியும் உருவாகும் மற்றும் இயங்கி கொண்டிருக்கும் ஆற்றல்களை எப்போதும் கூர்மையாக உணரவும், கவனிக்கவும் வேண்டும்.

5. எப்போதுமே இயற்கையுடன் இணைந்திருக்க வேண்டும்.


ரெய்கி பயிற்சிகள் செய்யும் வழிமுறைகள்

1. தீட்சை பெறுதல் 
ரெய்கி பயிற்சிகளை செய்பவர்கள், ஒரு ரெய்கி மாஸ்டரிடம் இருந்து முறையாகவும் முழுமையாகவும் தீட்சை பெற வேண்டும்.

2. தியானம் 
தினமும் தியானம் செய்தல் வேண்டும். குறைந்தது தினம் ஒரு முறை முடிந்தால் காலை, மாலை என இரண்டு வேளைகளில் தியானம் செய்வது நல்லது.

3. அறிந்துக் கொள்ளுதல் 
ரெய்கி பயிற்சி செய்பவர், இந்த உலகம், அதன் படைப்புகள், அதன் உயிர்கள் எல்லாம் எவ்வாறு படைக்கப் பட்டுள்ளன என்பதை கவனிக்க வேண்டும். மற்றும் மனித வாழ்க்கை என்றால் என்ன? அது எவ்வாறு அமையப் பட்டிருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

4. தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். 
ரெய்கி பயிற்சி செய்பவர் தன்னை உடல், மனம், சிந்தனை, ஆற்றல் என எல்லா வகையிலும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். நேற்றை விட இன்றும், இன்றைவிட நாளையும் வாழ்க்கை மேன்மை அடைய வேண்டும்.

5. சுயத்தை அறிந்துக் கொள்ள வேண்டும் 
ரெய்கி பயிற்சி செய்பவர் தன்னை உணர்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். தன்னை அறிதல் மட்டுமே இந்த உலகில் மிக உயரிய அறிவாகும்.

6. அனைவர் மீதும் அன்பு செலுத்துதல்
ரெய்கி பயிற்சி செய்பவர் அனைவர் மீதும் எந்த வேறுபாடும் பார்க்காமல் அன்பு செலுத்த வேண்டும். எதிரிகளை மன்னித்து விட வேண்டும்.

7. உதவி செய்யுங்கள் 
ரெய்கி பயிற்சி செய்பவர் எந்தக் கைமாறும் எதிர்பார்க்காமல் அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும்.

ரெய்கியில் முழுமையான பயன்களைப் பெற

ரெய்கியில் முழுமையான பயன்களைப் பெற மாணவர்களும் மாஸ்டர்களும் சில பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தினமும் தியானம் செய்ய வேண்டும். மூச்சு பயிற்சிகளை செய்ய வேண்டும். இயற்கையோடு இணைந்து உறவாட வேண்டும். தெரிந்த ஆன்மீக பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தொழுகை, வழிபாடுகள், பிரார்த்தனைகள் போன்றவற்றில் ஈடுபட வேண்டும். மனதில் தோன்றும் எண்ணங்களை கவனிக்க வேண்டும். உடல், மனம், ஆரா, சக்ரா மற்றும் மனதில் உண்டாகும் மாற்றங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

தியானம், மூச்சு பயிற்சிகள், தொழுகை, வழிபாடுகள், பிரார்த்தனைகள், உச்சாடனைகள் போன்றவை மனதை ஒருநிலைப் படுத்தவும், உடலின் ஆற்றல், ஆரா, சக்ரா, மற்றும் குண்டலினி சீராக செயல்படவும் உதவும்.