ரெய்கி வகுப்பு
ரெய்கி வகுப்பு
பிரபஞ்ச ஆற்றல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரபஞ்ச ஆற்றல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பிரபஞ்ச ஆற்றலை உணரும் வழிமுறைகள்

பிரபஞ்ச ஆற்றலை நம்புகிறோமோ இல்லையோ, அது எல்லா இடங்களிலும் நிறைந்திருந்து தன் வேலைகளை மிக சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது. நம் உடலின் பிரபஞ்ச ஆற்றலை உணர சில எளிய வழிமுறைகள்.

வழிமுறை1
1. இரு உள்ளங்கைகளையும் தேய்த்து கொள்ளுங்கள்.
2. பின், இரு உள்ளங்கைகளையும் நேர் எதிரே பார்த்தால் போல் வைத்துக்கொள்ளுங்கள். தொட வேண்டாம்.
3. சற்று நேரத்தில் உள்ளங்கைகளில் ஆற்றல் உருவாவதை உணரலாம்.
4. ஆற்றலை உணர முடியாவிட்டால், கைகளை சற்று அசைத்து கொடுங்கள்.

வழிமுறை 2
1. கை தட்டுவதைப் போன்று, இரு கைகளையும் தட்டி.
2. பின், இரு உள்ளங்கைகளையும் அருகில் வைத்துக்கொள்ளுங்கள். தொட வேண்டாம்.
3. சற்று நேரத்தில் உள்ளங்கைகளில் ஆற்றல் உருவாவதை உணரலாம்.
4. ஆற்றலை உணர முடியாவிட்டால், கைகளை சற்று அசைத்து கொடுங்கள்.

வழிமுறை 3
1. உள்ளங்கைகளை உரசி.
2. பின், இரு கைகளையும் தொடைகளின் மீது, உள்ளங்கைகள் மேலே பார்ப்பதைப் போன்று வைத்துக்கொள்ளுங்கள்.
3. சற்று நேரத்தில் உள்ளங்கைகளில் ஆற்றல் உருவாவதை உணரலாம்.

வழிமுறை 4
1. கைகளை தேய்த்து.
2. வலது கையை ஏதாவது ஒரு பொருளின் மேல் காட்டுங்கள். தொட வேண்டாம்.
3. சற்று நேரத்தில் உள்ளங்கையில் அந்த பொருளின் ஆற்றலை உணரலாம்.
4. ஆற்றலை உணர முடியாவிட்டால், கைகளை சற்று அசைத்து கொடுங்கள், அல்லது அருகிலோ தூரமோ கொண்டு செல்லுங்கள்.

வழிமுறை 5
1. சிறிது நேரம் அமைதியாக மூச்சை கவனித்து விட்டு.
2. வலது கையை ஏதாவது ஒரு பொருளின் மேல் காட்டுங்கள். தொட வேண்டாம்.
3. சற்று நேரத்தில் உள்ளங்கையில் அந்த பொருளின் ஆற்றலை உணரலாம்.
4. ஆற்றலை உணர முடியாவிட்டால், கைகளை சற்று அசைத்து கொடுங்கள், அல்லது அருகிலோ தூரமாகவோ கொண்டு செல்லுங்கள்.

வழிமுறை 6
1. சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு
2. உங்கள் உள்ளங்கையை சூரியன், நில, கடல், நெருப்பு, விலங்குகள், மனிதர்கள் போன்ற ஏதாவது ஒரு படத்தின் மீது காட்டுங்கள்.
3. சற்று நேரத்தில் உள்ளங்கையில் அந்த படத்தின் ஆற்றலை உணரலாம்.

ஆற்றலை உஷ்ணமாகவோ, குளிர்ச்சியாகவோ, அரிப்பாகவோ, அதிர்வாகவோ, துடிப்பாகவோ, மற்ற வழிகளிலும் உணரலாம். ஆற்றலின் உணர்வுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடலாம். எந்த வகையிலும் உங்களால் ஆற்றலை உணர முடியவில்லை என்றால் சற்று நேரம் அமைதியாக அமர்ந்து மூச்சை கவனியுங்கள். அல்லது தியானம் செய்யுங்கள். முதல் முயற்சியில் ஆற்றலை உணர முடியாவிட்டால் கவலை கொள்ள வேண்டாம். பல முயற்சிகளுக்கு பிறகு நிச்சயமாக உங்களால் ஆற்றலை உணர முடியும்.


பிரபஞ்ச ஆற்றலுக்கு அறிமுகம்

பிரபஞ்ச ஆற்றல் என்பது ஏதோ ஒரு அதிசயமான சக்தியோ, ஆச்சரியமான சக்தியோ, நமக்குத் தொடர்பில்லாத ஆற்றலோ அல்ல. நீங்களும், நானும், மற்ற உயிர்களும், நம் கண்ணில் காணும் அனைத்து விசயங்களும், பிரபஞ்ச ஆற்றலிலிருந்து உருவானவைதான். அனைத்து படைப்புகளும், உயிரினங்களும், பிரபஞ்ச ஆற்றலின் பரிமாணமாகவும் வடிவமாகவும் இருக்கின்றன. பிரபஞ்ச ஆற்றலானது, தான் இயங்கும் இடத்துக்கும் தன்மைக்கும் ஏற்ப உருவமும், செயலும், சக்தியும் அமையப்பெறுகிறது.

இந்தக் கட்டுரையை எழுதும் நானும், இதை வாசிக்கும் நீங்களும், நீங்கள் வாசிக்கப் பயன்படுத்தும் கணினியும், கையடக்க தொலைப்பேசியும், பிரபஞ்ச ஆற்றலின் மாறுபட்ட உருவங்கள் தான். எளிமையாகச் சொல்வதானால் கண்ணுக்குத் தெரியாத ஆற்றல் கண்களால் காணக்கூடிய மனிதனாகவும், விலங்குகளாகவும், தாவரங்களாகவும், கருவிகளாகவும் பரிமாணம் அடைந்திருக்கிறது. அந்த பரிமாணங்களைத் தான் நாம் நம் கண்களால் காண்கிறோம்.

பரஞ்சோதி மகான் அழகான ஒரு தத்துவத்தைக் குறிப்பிடுவார். “இந்தப் பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்பாக இறைவனையன்றி எதுவுமே இல்லாததால், ஏதோ ஒன்றை எடுத்து இறைவன் அனைத்தையும் படைத்திருக்கிறான் என்பதல்ல. இறைவன் தன் சுயத்திலிருந்து அனைத்தையும் படைத்திருக்கிறான். நாம் காணும் அனைத்தும் இறைவனின் மறு உருவமாகவே இருக்கின்றன” என்பார்.

அதைப் போலவே இந்த பூமியில் எந்தப் படைப்பு உருவானாலும், அந்த படைப்பின் அடிப்படை, பிரபஞ்ச ஆற்றலாக இருப்பதினால் நாம் காணும் அனைத்தும் பிரபஞ்ச ஆற்றலின் மறு உருவமாகவே இருக்கின்றன. மனிதர்களின் கைகளில் டார்ச் லைட் அடித்தால் அதன் வெளிச்சம் கையின் மறுபக்கம் தெரியும். இதற்குக் காரணம் மனிதன் திடமான அமைப்பைக் கொண்ட உருவமல்ல. பல கோடி நுண்ணிய செல்களின் தொகுப்புதான் மனிதன். அந்த செல்கள் உருவாக அடிப்படை ஆதாரமாக இருந்தவை பிரபஞ்ச ஆற்றல் தான். அந்த ஆற்றலைப் பற்றியும், அதைப் பயன்படுத்தும் வழிமுறைகளைப் பற்றியும், அதனால் அடையக்கூடிய நன்மைகளைப் பற்றியும் புரிந்து மற்றும் உணர்ந்துக் கொள்வதுதான் நான் வழங்கும் ஹோலிஸ்டிக் ரெய்கி பயிற்சியாகும்.

ராஜா முகமது காசிம்