ரெய்கி வகுப்பு
ரெய்கி வகுப்பு
மனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மனம் ஒரு அற்புத ஆற்றல்

மனம் என்பது என்ன?
மனம் என்பது உடலில் உள்ள ஒரு உறுப்பல்ல மாறாக, மனம் என்பது ஒரு உணர்வு. மனமானது சூட்சம நிலைகளில் செயல்படுகிறது. மனதை உணர முடியுமே ஒழிய வெளிப்படையாக யாராலும் பார்க்கவோ, அதனுடன் தொடர்பு கொள்ளவோ முடியாது.

பார்த்தல், கேட்டல், சுவைத்தல், நுகர்தல், உணர்தல் எனும் ஐந்து அறிவுகளுக்கு அடுத்ததாக, மனம் என்பது ஆறாவது அறிவாகும். முதல் ஐந்து அறிவுகளும், மற்ற உயிரினங்களுக்கு ஒன்று முதல் ஐந்து வரையில், சில விகிதாச்சாரங்களில் வழங்கப் பட்டிருக்கின்றன. அவை ஒவ்வொரு உயிரினத்திற்கும் மாறுபடும்.

மனிதர்களுக்கு மட்டுமே ஆறாவது அறிவான மனம் வழங்கப்பட்டிருக்கிறது. சில விலங்குகளுக்கும் மனம் இருந்தாலும் அவற்றின் மனம் மனிதர்களை போன்று முழு ஆற்றலுடன் செயல்படுவது கிடையாது. அதே நேரத்தில் மனிதர்களை போன்று அனைத்து விஷயங்களையும் பதிவு செய்வதும் கிடையாது. மனிதர்களுக்கு மட்டுமே மனம் முழுமையாக செயல்படுகிறது.

மனம் எவ்வாறு செயல் புரிகிறது? 
மனமானது மனிதன் பார்க்கும், கேட்கும், நுகரும், சுவைக்கும், உணரும் அனைத்து விஷயங்களையும் பதிவு செய்கிறது. மனிதன் உறக்கத்தில் இருந்தாலும், உணர்ச்சிகளற்று இருந்தாலும், அவ்வளவு ஏன் கோமா நிலையில் இருந்தாலும் கூட மனம் வேலை செய்யும். மனம் பதிவுகள் செய்வது மட்டுமின்றி, பதிவு செய்தவை தொடர்பான மற்ற விஷயங்களையும் ஆராயும். அதே நேரத்தில் மனதின் பதிவுகள் தொடர்புடைய மனிதர்களையும், நிகழ்வுகளையும், விஷயங்களையும், தொடர்பு படுத்தவும் செய்யும்.

இன்றும் நாம் பெரியவர்களான பிறகும் கூட, சில விஷயங்களை அல்லது சில பொருட்களை பார்க்கும் போதும். சிறு வயதில் இதற்காக ஆசைப்பட்டேன் கிடைக்கவில்லை என்று கூறுவதுண்டு. சில விஷயங்களை செவிமடுக்கும் போது எங்கேயோ கேட்ட ஞாபகம் என்று கூறுவதுண்டு. சில மனிதர்களை பார்க்கும் போதும், சில இடங்களுக்கு செல்லும் போதும், எப்போது சந்தித்த உணர்வுகள் வருவதுண்டு. இவை அனைத்து நம் மனதில் பதிந்த உணர்வுகள் தான்.

மனதின் திறன் 
மனதின் திறனை விளக்க பல கட்டுரைகள் எழுத வேண்டும். அவற்றை பின் நாட்களில் எழுத முயற்சிக்கிறேன். இப்போது நீங்கள் புரிந்துக் கொள்வதற்காக ஒரு உதாரணத்தை சொல்கிறேன்.

சில வருடங்களுக்கு முன்பாக ஒரு பொருளுக்கு ஆசைப்பட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அந்த பொருள் எங்கே தேடியும் கிடைக்கவில்லை, கால போக்கில் மறந்து போனீர்கள். பல வருடங்கள் கழித்து அந்த பொருள் பரிசாகவோ, இனாமாகவோ, கீழே கிடந்தோ, நண்பர்கள், உறவினர்கள் மூலமாக உங்களுக்கு கிடைக்கலாம். அல்லது எதாவது ஒரு கடையிலோ, இடத்திலோ அந்த பொருளை நீங்கள் பார்க்கலாம். இப்போது அந்த பொருளை அடையும் வாய்ப்பும், வசதியும் உங்களிடம் இருக்கலாம்.

பல வருடங்களுக்கு முன்பாக நீங்கள் ஆசைப்பட்டு, கிடைக்காமல் நீங்களே மறந்துப் போன ஒரு விஷயத்தை கூட உங்கள் மனமானது நினைவில் வைத்திருக்கும். அந்த பொருளை தேடிக்கொண்டிருக்கும். வாய்ப்புகள் அமையும் போது உங்களுக்கும் அந்த பொருளுக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தும். இதைப் போன்ற அனுபவங்கள் பலருக்கு பல சந்தர்ப்பங்களில் வெவ்வேறு விதமாக நடந்திருக்கலாம்.

பொருட்கள் மட்டுமின்றி, போக விரும்பும் இடங்கள், சந்திக்க விரும்பும் மனிதர்கள், அடைய துடிக்கும் வெற்றிகள், என அனைத்து விசயங்களையும் மனம் பதிவு செய்து, அதற்கான முயற்சியில் தொடர்ந்து செயல் புரிந்துக் கொண்டே இருக்கும். மனிதர்கள் விழிப்பு நிலையில் இருக்கும் போது, மனதுடன் தொடர்பு கொள்ள முடியாது. அதனால் மனதில் இருக்கும் பதிவுகளும், எண்ணங்களும், சிந்தனைகளும், மனிதர்களுக்கு விளங்குவதில்லை.

மனிதர்களின் மனம் 
மனதை வெறும் பதிவு செய்யும் இயந்திரமாக கடந்து செல்ல முடியாது. அதையும் தண்டி மனம் பல ஆற்றல்களை கொண்டது. மனம் என்பது இறைவன் நமக்களித்த ஒரு அற்புதமான ஆற்றலாகும். மனமானது எல்லா வல்லமைகளையும் பெற்றது. மனதின் உதவியுடன் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். அமைதியான மனம், நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிப்பதுப் போல் அமைதியற்ற மனமானது நிம்மதியை அளித்து மகிழ்ச்சியை சீரழிக்க கூடியது.

மனமானது உடல் ஆரோக்கியம் முதல், உடலின் பலம், கல்வி, அறிவு, ஒழுக்கம், செல்வம், நிம்மதி, மகிழ்ச்சி வரையில் அனைத்தையும் நிர்னைக்கக் கூடியது. சீர் கெட்ட மனம் ஒரு யானையையும் பூனையாகிவிடும். ஆரோக்கியமான மனம் ஒரு பூனையைக் கூட யானை பலம் கொண்டதாக மாற்றிவிடும். ஒரு மனிதனுக்கு கல்வி, அறிவு, செல்வம், பெயர், புகழ், மக்கள் என அனைத்தும் இருந்தாலும், அவன் மனம் மட்டும் சீர்கெட்டுவிட்டால், அவனை செல்லாக் காசாக்கிவிடும். இவை அனைத்தும் இல்லாதவனாக இருந்தால் கூட மனம் மட்டும் செம்மையானால், இவை அனைத்தையும் தக்க நேரத்தில் அவனுக்கு கிடைக்க செய்துவிடும்.

மனதை தீய எண்ணங்களின்றி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கை அழகானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் இருக்கும்.

எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது எப்படி?


ரெய்கியின் மூலமாக மன அழுத்தங்களை சரி செய்ய முடியுமா?

மனதின் உதவியுடன் நோய்களை குணமாக்கும் வழிமுறைகள்

மனமானது மனிதனின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கும், மனிதன் இடும் கட்டளைகளை நிறைவேற்றும் என்று நாம்  கேள்விப்பட்டிருப்போம். நாம் இடும் கட்டளைகளை மனமானது நிறைவேற்றும் போது மனதின் ஆற்றலை ஏன் நோய்களைக்  குணப்படுத்த பயன்படுத்தக் கூடாது? மனதை முறையாக பயன்படுத்தும் போது மனதின் உதவியைக் கொண்டு உடலில் உண்டாகும் அனைத்து வகையான  உபாதைகளையும், தொந்தரவுகளையும், வலிகளையும் நோய்களையும் நிச்சயமாக குணப்படுத்தலாம்.

இரவு உறங்குவதற்கு முன்பாக  அமைதியாக படுத்துக் கொண்டு உங்களுடனே நீங்கள் பேசுங்கள். உங்கள் பெயரை சொல்லி நீங்களே அழைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலில் ஏற்படும் உபாதைகளை உங்களிடமே கூறுங்கள். காலை எழுந்திருக்கும் நேரத்தை உடலிடம் கூறி அதற்குள் நோய்களை குணப்படுத்திவிடு என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

உதாரணத்திற்கு
ராஜா இப்போது முதல் காலை 7 மணி வரையில்  நான் உறங்குவேன். நான் எழுந்திருப்பதற்கு முன்பாக, என் கழுத்தில் ஏற்பட்டிருக்கும் சுளுக்கையும் உடல் வலிகளையும் குணப்படுத்திவிடு என்று கூறிவிட்டு உடனே உறங்கச் செல்லுங்கள்.

காலையில் எழுந்திருக்கும் போது உங்கள் உடலில் பெரிய மாற்றத்தை உங்களால் உணர முடியும். உடலின் வலிகள் குறைவதையும் , நோய்கள் குணமாகத்  தொடங்குவதையும், தொந்தரவுகள் மறைவதையும் காண்பீர்கள்.

உடலில் பல தொந்தரவுகள் உடையவர்கள், ஒவ்வொரு தொந்தரவாக குணப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். உடலில் 10 தொந்தரவுகள் இருந்தாலும் அனைத்தையும் நிச்சயமாக குணப்படுத்தலாம். ஆனால் அனைத்தும் ஒரே நாளில் குணப்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்யக்கூடாது.

எது நெடுநாட்களாக இருக்கும் தொந்தரவோ அதை முதலில் சரி செய்யுங்கள். அல்லது எந்த உபாதை உங்களை மிகவும் தொந்தரவு செய்கிறதோ அதை முதலில் குணப்படுத்துங்கள்.

மருந்து, மாத்திரைகள், தைலங்கள், எதுவுமே இல்லாமல் மனதும், உடலும் இணைந்து செயல்படும் போது முறையாக கட்டளையிட்டால் அனைத்து நோய்களும் படிப்படியாக குணமாகிவிடும். மனதின் ஆற்றலை நம்புங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.


மனதை அடக்குவது எப்படி?

மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கு காரணம்
தவறு என்று தெரிந்தும் சிலர் தவறுகள் செய்வார்கள். தவறு என்று தெரியாமல் சிலர் தவறுகள் செய்வார்கள். தவறு செய்வதும், பின்பு அதை நினைத்து வருந்துவதும். மீண்டும் தவறு செய்யக் கூடாது என்று நினைப்பதும், மறுபடியும் அதே தவற்றை செய்வதும், பலருக்கு தொடர்கதையாகவே இருக்கிறது. தவறு செய்யாத மனிதர்களே கிடையாது என்று சொல்லும் அளவுக்கு, ஒவ்வொரு மனிதரும் ஏதாவது ஒரு வகையான தவற்றை தெரிந்தோ தெரியாமலோ செய்துகொண்டிருப்பார்கள்.

சிலர் தீய பழக்கம் என்று தெரிந்தும் அந்தப் பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்று ஆசைப்பட்டும், அதை விட முடியாமல் அவதிப்படுவார்கள். சிலர் இன்றோடு இந்தப் பழக்கத்தை விட்டுவிட வேண்டும், மறந்துவிட வேண்டும் என்று பலமுறை முயன்றும் தோற்றுப்போயிருப்பார்கள்.


  • இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் என்ன காரணம்?
  • மனிதர்கள் ஏன் தவறுகள் செய்கிறார்கள்?
  • அதுவும் தவறு என்று தெரிந்தும் ஏன் மீண்டும் மீண்டும் செய்கிறார்கள்?
  • தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது என்று முடிவு செய்தும் அவர்களை மீறி தவறுகளை செய்வது ஏன்?
  • மனிதர்களை தன்னையும் மீறி தவறுகள் செய்ய தூண்டுவது எது?
மேலே உள்ள அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரே பதில்தான்! மனம். மனிதன் செய்யும் அனைத்து தவறுகளுக்கும் அவனது மனம்தான் காரணமாக இருக்கிறது. மனிதன் தனது ஐம்பொறிகளான காண்பது, கேட்பது, சுவைப்பது, நுகர்வது, மற்றும் உணர்வதன் மூலமாக அவனது மனதில் உண்டாகும்  பதிவுகளே, அவனை தவறுகள் செய்ய தூண்டுகின்றன.

மனதுக்கு சரி தவறு என்ற பேதங்கள் தெரியாது. அவனது ஐம்பொறிகள் அனுபவிக்கும் அனைத்தையும் மனதில் பதிவு செய்துகொள்கிறது. அந்த பதிவுகளினால் தோன்றும் எண்ணங்களுக்கும், ஆசைகளுக்கும் ஏற்ப மனம் வேலை செய்கிறது. இந்த பதிவுகள் அதற்கான சந்தர்ப்பமும் சூழ்நிலையும் ஏற்படும் வேளைகளில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்றன.

மனதின் தன்மை
இன்று ஒரு மனிதன் செய்யும் தவறுகளுக்கு இன்றோ நேற்றோதான் மன பதிவுகள் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று இல்லை. என்றோ சிறுவயதில் அவன் மனதில் பதிந்த பதிவுகள் கூட அவன் 40 வயதில் தவறுகள் செய்யக் காரணமாக இருக்கலாம்.

மனதைக் கட்டுப்படுத்த முடியாதா? மனதை அடக்க முடியாத? இந்த கேள்வி அனைவராலும் பல காலங்களாக கேட்கப்பட்டு வருகிறது. மனதை அடக்கவும் அதைக் கட்டுப்படுத்தவும் பலர் பயிற்சிகளும் கொடுக்கிறார்கள். உண்மை என்னவென்றால், மனதை அடக்கவோ கட்டுப்படுத்தவோ யாராலும் முடியாது.

நாம் பல இதிகாசங்களிலும் புராணங்களிலும் படித்திருப்போம், பெரிய முனிவர்கள் கூட மன இச்சைக்குக் கட்டுப்பட்டு தவறுகள் செய்ததை. இன்றும் நாளிதழ்களிலும் இணையத்திலும் பார்க்கிறோம். உயர்ந்த இடத்தில் இருக்கும் பலர் தங்களின் தகுதிக்கு சம்பந்தமில்லாத ஈன செயல்களை செய்வதை. இவை அனைத்துக்கும் காரணம் அவர்களின் ஐம்பொறிகளின் உதவியுடன் அவர்கள் மனதில் உருவான பதிவுகள் தான்.

மனதை கட்டுக்குள் வைக்கும் ஒரே வழிமுறை
அப்படியானால் மனதை கட்டுப்படுத்த வழியே இல்லையா என்று கேட்டால்? ஒரேயொரு வழி இருக்கிறது. அதுதான் மனதினுள் பதிவுகள் உருவாகாமல் பார்த்துக்கொள்வது. மனதில் உருவாகும் பதிவுகள்தான் மனிதர்கள் தவறுகள் செய்யக் காரணமாக இருக்கின்றன. தவறுகளை செய்ய தூண்டக்கூடிய பதிவுகள் உண்டாகாமல் பார்த்துக்கொண்டாலே போதும் மனதினுள் தீய எண்ணங்கள் உண்டாகாது.

உதாரணத்துக்கு விருப்பமான உணவு எது என்று யாரையாவது கேட்டால் அவர் மனபதிவில் எந்த உணவின் அனுபவம் இருக்கிறதோ, அவற்றில் எது மிகவும் அவரை கவர்ந்ததோ அதை கூறுவார். ஒருவர்கூட, அவர் சுவைத்து கண்டிராத உணவை கூறமாட்டார்கள். அதைப்போல் ஒருவரிடம் உலகிலேயே உனக்கு பிடித்த நபர் யார் என்று கேட்டால், அந்த நபரின் வாழ்கையில் குறுக்கிட்ட அவர் அனுபவத்தில் இருக்கும் யாராவது ஒரு நபரைக் கூறுவார். யாருமே தனக்கு சம்பந்தமில்லாத தான் அறிந்தில்லாத ஒரு நபரைப் பற்றி கூறமாட்டார்கள்.

ஒரு மனிதனின் விருப்பு வெறுப்புகளுக்குக் காரணம் அவர் மனதில் இருக்கும் பதிவுகள் மட்டுமே. மன பதிவுகளே அனைத்துக்கும் காரணமாக இருப்பதால், நிரந்தரமான விருப்பு வெறுப்பு என்று யாருக்கும் இருக்காது. மன பதிவுகள் மாற மாற அவர்களின் உணர்வுகளும், ஆசைகளும் மாறிக்கொண்டே இருக்கும். அவர்களின் உணர்வுகளுக்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கை முறையும் இருக்கும்.

தற்போது இருக்கும் தவறான பதிவுகள்
இதுவரையில் சேர்ந்த மனப் பதிவுகளை அழிக்கவோ மாற்றவோ எவராலும் முடியாது. ஆனால் அந்த தேவையற்ற பதிவுகளை தவிர்க்க முடியும். சிறுவயது முதல் சேர்த்த மனப்பதிவுகள் அனைத்தும் மனதினுள் அப்படியேதான் இருக்கும். தற்போது அந்த தவறான பதிவுகள் சம்பந்தமாக புதிய பதிவுகள் எதுவும் உருவாகவில்லை என்றால், பழைய பதிவுகள் மெல்ல மெல்ல செயல் இழந்துவிடும்.

உதாரணத்துக்கு, வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்றவர்கள் சில வருடங்கள் கழித்து மீண்டும் தாய்நாடு திரும்பியதும், பழைய நபர்களின், உறவுகளின் பெயர்களை நினைவுகூர சிரமப்படுவார்கள். தான் பிறந்து வளர்ந்த ஊருக்குள்ளேயே  பாதை தடுமாறுவார்கள். பணத்தைக்கூட தான் பணிப்புரிந்த நாட்டின் நாணயத்தின் பெயரால் அழைப்பார்கள். இந்த தடுமாற்றங்களுக்கு காரணம் அந்த நபரின் பழைய பதிவுகள், பல வருடங்கள் பயன்படுத்தாததால் செயல் இழந்துவிட்டன.

அதைப்போல் நாம் இனிமேல் பதியும் புதிய பதிவுகளை முறையானதாகவும், சரியானதாகவும் வைத்துக்கொண்டால், மனதின் நிலையும், பழக்க வழக்கங்களும் முறையானதாக மாறிவிடும். இதுவரையில் இருந்த தவறான பழக்க வழக்கங்கள் மெல்ல மெல்ல நம்மை விட்டு நீங்கிவிடும்.


மனம் என்பது என்ன?

உணர்தல், சுவைத்தல், நுகர்தல், பார்த்தல், கேட்டல், எனும் ஐந்து அறிவுகளுக்கு அடுத்ததாக, மனம் என்பது மனிதனின் ஆறாவது அறிவாகும். முதல் ஐந்து அறிவுகளும், மற்ற உயிரினங்களுக்கு ஒன்று முதல் ஐந்து வரையில், சில விகிதாச்சாரங்களில் வழங்கப் பட்டிருக்கின்றன. அவை ஒவ்வொரு உயிரினத்திற்கும் மாறுபடும்.

மனிதர்களுக்கு மட்டுமே ஆறாவது அறிவான மனம் வழங்கப்பட்டிருக்கிறது. சில விலங்குகளுக்கும் சிறு மனம் இருந்தாலும் விலங்குகளின் மனம் மனிதர்களின் மனதைப் போன்று முழு ஆற்றலுடன் செயல்படுவது கிடையாது. அதே நேரத்தில் மனிதர்களின் மனதைப் போன்று அனைத்து விசயங்களையும் பதிவு செய்வதும் கிடையாது. மனிதர்களுக்கு மட்டுமே மனம் முழுமையாக செயல்படுகிறது.

குழந்தைகள் இந்த மண்ணில் பிறக்கும்போது அவர்களுக்கு மனம் இருப்பதில்லை. மனம் உருவாவதற்கு முன்பாகவே குழந்தைகளுக்கு புத்தி இருக்கும். புத்தி என்பதும் மனம் தொடர்பான விஷயம் அல்ல. அதாவது யார் தாய் என்ற அறிவு, பால் குடிக்கும் அறிவு, மூச்சுவிட, மலம் கழிக்க, தன் உறுப்புகளை பயன்படுத்த, போன்ற அடிப்படை அறிவுகள் குழந்தைகள் பிறக்கும்போதே உடன் பிறந்துவிடும்.

மனம் என்பது உடலில் ஒரு உறுப்பல்ல, மாறாக மனம் என்பது ஒரு உணர்வு. மனமானது உயிரைப் போன்று சூட்சம நிலைகளில் செயல்படுகிறது. மனதை உணர முடியுமே ஒழிய வெளிப்படையாக யாராலும் பார்க்கவோ, தொடவோ, அதனுடன் தொடர்பு கொள்ளவோ முடியாது.

"மனம் என்பது மூளையில் இருக்கிறதா?" என்று கேட்டால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆங்கிலத்தில் மனதை "மைண்ட்" (Mind) என்று அழைப்பார்கள், மூளையையும், மைண்ட் (Mind) என்றுதான் அழைப்பார்கள். இதற்குக் காரணம் இவை இரண்டுக்குமே சிந்திக்கும் ஆற்றல் உள்ளது. மனம் என்பது மூளையில் இல்லை. ஆனால் மனதில் தோன்றும் எண்ணங்களையும், மனம் இடும் கட்டளைகளையும், நிறைவேற்றும் வேலையை மூளை செய்வதனால் மூளையையும் "மைண்ட்" என்றே அழைக்கிறார்கள்.

இருதயத்தை மனம் என்று சிலர் அழைப்பார்கள். அதற்குக் காரணம் இருதயம் மனதின் தொடர்புகளை இணைக்கும் ஒரு பாலமாக செயல்படுகிறது. மனதில் உருவாகும் உணர்ச்சிகளின் பிரதிபலிப்பு இருதயத்தில் தெரிகிறது. இருதயத்தின் துடிப்பு மாறுவது, இருதயம் படபடப்பது, இருதயம் கனப்பது, இருதயம் வெறுமையாக உணர்வது, போன்ற உணர்வுகள் மனதினில் உருவாகும் மாற்றங்களைப் பிரதிபலிக்கிறது.

மனதில் ஒரு எண்ணமோ கட்டளையோ தோன்றும்போது, அது நேரடியாக செயல்படாமல் மூளையிடம் கட்டளைகளை அறிவிக்கிறது. மூளை தான் அந்தக் கட்டளைகளை நிறைவேற்றுகிறது. மனம் எங்கு இருக்கிறது என்று கேட்டால், மனம் மனிதனின் உடலை சுற்றிலும் ஒரு போர்வையைப் போன்று அமைந்திருக்கிறது. மனிதனுக்கு சிந்தனைகள் தோன்றும் போது மனமானது, உடலிலிருந்து பரவி சிந்தனை செய்யப்படும் நபரை, இடத்தை, பொருளை அல்லது சிந்தனை தொடர்பானவற்றை சென்றடையும்.


மனிதனும் மனமும்

மனதை வெறும் பதிவு செய்யும் இயந்திரமாக நினைத்து கடந்து செல்ல முடியாது. அதையும் தண்டி, அது பல ஆற்றல்களை கொண்டது. மனம் என்பது இறைவன் நமக்களித்த ஒரு அற்புதமான ஆற்றலாகும். மனமானது எல்லா வல்லமைகளையும் பெற்றது. மனதின் உதவியுடன் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். அமைதியான மனம், நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிப்பதுப் போல் அமைதியற்ற மனமானது நிம்மதியை அழித்து மகிழ்ச்சியை சீரழிக்க கூடியது.

மனமானது உடல் ஆரோக்கியம் முதல், உடல் பலம், கல்வி, அறிவு, ஒழுக்கம், செல்வம், நிம்மதி, மகிழ்ச்சி வரையில் அனைத்தையும் நிர்ணயிக்க கூடியதாக இருக்கிறது. சீர் கெட்ட மனம் ஒரு யானையையும் பூனையாக்கிவிடும். ஆரோக்கியமான மனம் ஒரு பூனையைக் கூட யானை பலம் கொண்டதாக மாற்றிவிடும். ஒரு மனிதனுக்கு கல்வி, அறிவு, செல்வம், பெயர், புகழ், மக்கள் என அனைத்தும் இருந்தாலும், அவன் மனம் மட்டும் சீர்கெட்டுவிட்டால், அவனை செல்லாக் காசாக்கிவிடும். இவை ஒன்றும் இல்லாதவனாக இருந்தால் கூட மனம் மட்டும் செம்மையானால், இவை அனைத்தையும் தக்க நேரத்தில் அவனுக்கு கிடைக்கச் செய்யும்.

மனம் மட்டும் முழு இயல்புடனும், ஆற்றலுடனும் செயல் புரிந்தால், மனிதன் அனைத்து ஆற்றல்களையும் இயல்பாகவே பெற்றுவிடுவான். வாழ்வதற்குத் தேவையான அறிவு, ஆற்றல் முதல் அஷ்டமாசித்திகள் வரையில் அனைத்தையும் அடையும் ஆற்றல் மனதிடம் உண்டு. மனதை தீய எண்ணங்களின்றி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கை அழகானதாக இருக்கும்.

மனிதன் என்பவன் உடல், உயிர், மனம் மற்றும் சக்தியின் கலவையே. ஆதலால் மனம் வேறு மனிதன் வேறு என்பதும், மனதை அழிக்கிறேன் ஒழிக்கிறேன் என்பதெல்லாம் தவறான புரிதலைக் கொண்டவர்கள் கூறும் செய்திகளாகும். மனதை நாம் செய்ய வேண்டிய ஒரே விசயம், புரிந்து கொள்வது மட்டுமே.

மனதினால் உருவாகும் நோய்கள்

ஏழையை செல்வந்தனாகவும், செல்வந்தனை ஏழையாகவும், முட்டாளை அறிவாளியாகவும், அறிவாளியை முட்டாளாகவும், நல்லவனைக் கெட்டவனாகவும், கெட்டவனை நல்லவனாகவும் மனம் முயன்றால் மாற்ற முடியும். அதைப் போலவே ஆரோக்கியமான மனிதனை நோயாளியாகவும், நோயாளியை ஆரோக்கியமாகவும் மனம் முயன்றால் மாற்றமுடியும்.

அதை சாப்பிட்டால் அந்த நோய் உருவாகும், இதை சாப்பிட்டால் இந்த நோய் உருவாகும், இந்த உணவுகளை சாப்பிட்டால் வாயு பிடிப்பு உருவாகும், ஆட்டிறைச்சி சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு உண்டாகும், கடல் உணவுகளை சாப்பிட்டால் அரிப்புகள் உண்டாகும், இனிப்பு சாப்பிட்டால் நோய்கள் உண்டாகும், பழங்களை சாப்பிட்டால் சளி உண்டாகும், போன்ற செய்திகளை வாசித்து, அதனை மனமும் நம்பிக்கை கொண்டுவிட்டால்,அந்த குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடும் போதெல்லாம் உடலில் அந்த குறிப்பிட்ட நோய்களை உருவாக்க வாய்ப்புகள் உள்ளன.

இந்த பருவத்தில் இந்த நோய்கள் உருவாகும், அந்த வயதில் அந்த நோய்கள் உருவாகும் என்ற தகவல்களை வாசித்தாலோ அல்லது யாராவது கூறினாலோ அவற்றை நம்பாதீர்கள். வயது அதிகரிக்கும் போது நோய்கள் உண்டாகும் என்பதும், உடல் உறுப்புகளின் செயல் திறன் குறையும் என்பதும், உடல் உறுப்புகள் செயல் இழக்கும் என்பதும் வெறும் கற்பனைகள் மட்டுமே. ஆனால் இது போன்ற செய்திகளை நம்புவோருக்கு, ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை பின்பற்றினாலும் நோய்கள் உருவாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

மழையில் நனைந்தால் நோய்கள் உருவாகும், குளத்தில், ஆற்றில், கடலில் குளித்தால் நோய்கள் உருவாகும் போன்ற வதந்திகளை நம்பிக்கைக் கொண்டோருக்கும், ஒரு நோய் உண்டானால், அதை தொடர்ந்து மற்ற புதிய நோய்களும் உருவாகும் என்று நம்புவோருக்கும், பல நோய்கள் எளிதாக உருவாக வாய்ப்புகள் உள்ளன.

இவ்வாறான நோய்கள் உருவாவதற்கு மனம்தான் காரணம். மனம் ஒன்றை நம்பிக்கை கொண்டுவிட்டால், உடல் அதனை ஏற்றுக் கொண்டு செயல்படுத்திவிடும். அதனால் மருத்துவ குறிப்புகள் என்ற பெயரில் Facebook, Whatsappகளில் உலாவரும் தேவையற்ற தகவல்களை வாசிக்காதீர்கள், நம்பாதீர்கள், பரப்பாதீர்கள். நீங்கள் ஒரு தவறான செய்தியை வாசித்து, அதை உங்கள் மனமும் நம்பிக்கை கொண்டுவிட்டால், அதன் விளைவுகள் மோசமானதாக இருக்கும்.

எந்த விசயம் எதில் வந்தாலும், யார் சொன்னாலும், அப்படியே நம்பிவிடாதீர்கள். சிந்தித்து ஆராய்ந்து பின்புதான் நம்பிக்கை கொள்ள வேண்டும்.


கேட்டதை கொடுக்கும் மனதின் சக்தி

கேட்டதை கொடுக்கும் மனதின் சக்தி 
நமது பாரம்பரியத்தில் மனதுக்கு மிகவும் முக்கியமான இடத்தை கொடுத்திருக்கிறார்கள். அனைத்து சுபகாரியங்களையும் மனதையே பிரதானமாக கொண்டே நடத்தினார்கள். ஒரு ஆணையும், பெண்ணையும் தாம்பத்திய பந்தத்தில் இணைக்கும் நிகழ்வுக்குக் கூட, திரு “மனம்” (திருமணம்) என்றுதான் பெயர் வைத்தார்கள். இன்றும் நாம் துன்பத்தில், துயரத்தில், கவலையில் இருப்பவர்களை சந்திக்கும் போது கூறும் வார்த்தை “மனதை தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள்”. “மனதை தளரவிடாதீர்கள்” என்பதாகத்தான் இருக்கிறது.

நோயாளிகளை சந்திக்கும் போது கூட உடலை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஆறுதல்கள் கூறும் போது, மனதை தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள் என்றும் சேர்த்துதான் ஆறுதல் கூறுகிறோம். அந்த அளவுக்கு மனதின் திறனும் முக்கியத்துவமும் நம்மவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

மனம் மட்டும் நம்பிக்கை கொண்டால் அனைத்தும் நலமாகும் 
ஒருவருக்கு என்ன நோய் இருந்தாலும், அது எவ்வளவு கொடுமையானதாக இருந்தாலும், அவரின் மனம் மட்டும் என் நோய்கள் நிச்சயமாக குணமாகும் என்ற தைரியத்துடன் இருந்தால். நிச்சயமாக அனைத்து நோய்களும் குணமாகும். ஒருவர் எந்த வகையான துன்பத்தில், துயரத்தில், சிக்கி இருந்தாலும் இந்த நிலை நிச்சயமாக மாறும், என் வாழ்க்கை சீர் பெறும் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும். அவரின் வாழ்க்கை நிச்சயமாக மாறும்.

ஆனால் மனதை நம்ப வைப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை
நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன், நான் தைரியமாக இருக்கிறேன், எனக்கு நம்பிக்கை உள்ளது என்று கூறும் பலரும் உண்மையில் மனதளவில் பலவீனமாகவே இருக்கிறார்கள். அவர்கள் கூறும் நம்பிக்கை, தைரியம் அனைத்தும் புத்தியின் அளவில் மட்டுமே பதிந்திருக்கிறது. அவர்களின் மனமோ அதனை நம்ப மறுக்கிறது. மனதுடன் மனிதர்களுக்கு தொடர்பு இல்லாததால் மனதின் பதிவுகளைப் பற்றி மனிதர்களுக்கு புரிவதில்லை.

இவர்களின் சிந்தனையிலும், புத்தியிலும், இருக்கும் விஷயங்களை வைத்து, மனதிலும் அப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு விஷயத்தை ஒரு தடவை கூறும்போது அல்லது ஒரு தடவை படிக்கும் போது அதனை மனம் நம்பாது. ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் பலமுறை சிந்திக்கும் போதும், வாசிக்கும் போதும் மட்டுமே மனம் அதனை நம்பத் தொடங்கும்.

மனதை நம்ப வைக்கும் வழிமுறைகள்
மனம் ஒரு விஷயத்தை நம்ப வேண்டுமென்றால், அந்த விஷயத்தை மீண்டும் மீண்டும் சிந்திக்க வேண்டும். அந்த விஷயத்தை கற்பனையில் நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த விஷயம் உங்களுக்கு கிடைத்துவிட்டது போலவும், அதை நீங்கள் அடைந்து விட்டது போலவும் ஒரு உணர்வு உங்களுக்குள் தோன்ற வேண்டும்.

ஒரு உதாரணம் சொல்கிறேன், நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்களை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களின் நடை, உடை, பாவனை, ஸ்டைல், அனைத்துமே நடிகர் ரஜினிகாந்தைப் போலவே அமைந்திருக்கும். காரணம் அவர்கள் ரஜினிகாந்தின் படங்களைத் திரும்பத் திரும்ப பார்த்தார்கள், அவரைப் பற்றியே சிந்தித்தார்கள், அந்த படத்தில் வரும் கதாபாத்திரங்களாகவே மாறுகிறார்கள். மனம் இவ்வாறுதான் செயல்படுகிறது.

எவரொருவர் ஒரு விசயத்தை மீண்டும் மீண்டும் நினைக்கிறாரோ, மீண்டும் மீண்டும் சிந்திக்கிறாரோ, மீண்டும் மீண்டும் படிக்கிறாரோ, அவர் அந்த விசயமாகவே மாறுகிறார். அந்த விசயத்துக்கும் அவருக்கும் சூட்சம நிலையில் ஒரு உறவும் பந்தமும் உருவாகிறது. அந்த விசயம் இருக்கும் இடத்தை நோக்கி இவர் பயணிக்கிறார் அல்லது ஏதாவது ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையை பயன்படுத்தி அந்த விசயம் இவரை வந்தடையும்.

ஆசைப்பட்டவற்றை அடையும் வழிமுறைகள்
உங்கள் வாழ்க்கையில் எதை அடைய வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அது பணமோ, செல்வமோ, பொருளோ, பெயரோ, புகழோ, ஞானமோ, மனிதர்களோ, அது எதுவாக இருந்தாலும் அதை அடைய.

1. அது ஏன் உங்களுக்கு வேண்டும்? எதற்காக அதன் மீது ஆசைப்படுகிறீர்கள்? என்ற தெளிவான புரிதல் உங்களுக்கு இருக்க வேண்டும்.

2. நீங்கள் ஆசைப்பட்டது கிடைத்தால், என்ன செய்வீர்கள்? அதனால் உங்களுக்கு என்னென்ன நன்மைகள்? என்பது புரிய வேண்டும்.

3. அதை அடைவதற்கான வழியை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

4. அதன் தொடர்பாக தீவிரமாக சிந்திக்க வேண்டும்.

5. அதன் தொடர்பான புத்தகங்கள், இணைய பக்கங்களை, வாசிக்க வேண்டும்.

6. அதற்கு தொடர்புடைய மனிதர்களை சந்திக்க வேண்டும். அவர்களுடன் கலந்துரையாட வேண்டும்.

7. மனதளவில் கற்பனையில், அதை நீங்கள் அடைந்து விட்டது போலவும், அதை பயன்படுத்துவது போலவும், ஒரு உணர்வு ஏற்பட வேண்டும்.

8. இறுதியாக அது உங்களுக்கு கிடைத்து விட்டது போலவும், அதை பயன்படுத்துவது போலவும், அதை அனுபவிப்பது போலவும், அடிக்கடி நினைத்துப் பார்க்க வேண்டும்.

அனைவரும் கூறுவது போல் நான் கற்பனை செய்து பாருங்கள் என்று சொல்லவில்லை. அது உண்மையில் அடைந்த பிறகு ஏற்படும் உணர்வு, இப்போதே ஏற்பட வேண்டும். அதுதான் நான் கூறுவது.

இறுதியாக ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். ஒருவர் ஆசைப்படுவதால் மட்டும் ஒரு விசயம் அவருக்கு கிடைத்து விடாது. அதற்குரிய காலமும், நேரமும், பயிற்சியும், முயற்சியும், உழைப்பும், சேர்ந்தால் மட்டுமே ஒருவருடைய ஆசை நிறைவேற்றப்படும்.