ரெய்கி வகுப்பு
ரெய்கி வகுப்பு
ஹீலிங் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹீலிங் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நெடுந்தூர சிகிச்சை அளிக்கும் வழிமுறைகள்


1. சிகிச்சையை தொடங்கும் முன் மாஸ்டர் 20 நிமிடங்கள் தியானம் செய்ய வேண்டும்.

2. சிகிச்சைக்கு முன்பு இறைவன், இயற்கை மற்றும் பிரபஞ்ச ஆற்றலின் உதவியை கோர வேண்டும்.

3. நோயாளியை அவர் வீட்டிலேயே சாயாமல் நாற்காலியில் அமர சொல்ல வேண்டும். முடியாதவர்களை கட்டிலில் படுத்துக்கொள்ள சொல்ல வேண்டும்.

4. தனக்கு பாதுகாப்பு கவசம் போட்டுக்கொள்ள வேண்டும்.

5. நோயாளியை நினைத்து அல்லது அவரது புகைப்படத்தை பயன்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும்.

6. நோயாளியின் பெயரையும் அவரது தாயின் பெயரையும் கூறி ஆற்றலை அனுப்ப வேண்டும். உதாரணத்துக்கு இன்னாரின் மகனான இன்னாருக்கு இன்ன உபாதைகளில் இருந்து விடுபட ரெய்கி சிகிச்சை அளிக்கிறேன்.

7. சிகிச்சைக்கு முன்பாக அவர் உடலில் இருக்கும் தீய ஆற்றல்களை முதலில் சுத்தம் செய்து விட வேண்டும்.

8. இந்த தொலை தூர சிகிச்சையை 15 முதல் 40 நிமிடங்கள் வரையில் செய்ய வேண்டும்.
9. சிகிச்சையின் போது சிகிச்சை அளிப்பவரின் உடலில் இருந்து ஆற்றல் வெளியாகும் அளவை வைத்து எவ்வளவு நேரம் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும்.

10. சிகிச்சைக்கு பிறகு நோயாளிக்கு மன தைரியத்தை உருவாக்க வேண்டும்.

11. சிகிச்சைக்கு பிறகு இறைவனுக்கும், இயற்கைக்கும், ரெய்கிக்கும் நன்றி கூற வேண்டும்.

தொலைதூர சிகிச்சைஇந்த உலகில் மனிதர்கள், விலங்குகள், பறவைகள், மீன்கள், பூச்சிகள், தாவரங்கள் என எல்லா உயிர்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்தே செயல்படுகின்றன, வாழ்கின்றன. காற்று, ஆற்றல், அதிர்வு மற்றும் அலைகளின் மூலமாக எல்லா உயிர்களும் இணைக்கப் பட்டிருக்கின்றன. காற்று, ஆற்றல், அதிர்வு, மற்றும் அலைகளை முறையாக பயன்படுத்தும் போது உலகின் ஒரு மூலையில் இருக்கும் மனிதர், உலகின் இன்னொரு மூலையில் இருக்கும் மனிதருக்கு உதவி செய்யலாம், நோய்களை குணப்படுத்தலாம்.

தூரத்தில் வாழும் மனிதரின் தொந்தரவுகளை குணப்படுத்த வேண்டும் எனும் போது கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

1. முதலில் நோயாளியின் தொந்தரவுகளை அறிந்துகொள்ள வேண்டும்.

2. நோயாளியின் பெயரையும் அவரின் தாயின் பெயரையும் அறிந்துகொள்ள வேண்டும்.

3. நோயாளியின் புகைப்படம் இருந்தால் பயன்படுத்தலாம்.

4. நோயாளி பயன்படுத்திய பொருட்களையும் பயன்படுத்தலாம்.

5. தொலைப்பேசி மூலமாக சிகிச்சை அளிக்கலாம்.

6. நோயாளி நம் முன் இருப்பதைப் போன்று கற்பனை செய்தும் சிகிச்சை அளிக்கலாம்.

ரெய்கி சுய சிகிச்சை


1. 20 நிமிடங்கள் தியானம் செய்ய வேண்டும்.

2. சிகிச்சைக்கு முன்பு இறைவன், இயற்கை மற்றும் பிரபஞ்ச ஆற்றலின் உதவியைக் கோர வேண்டும்.

3. தரையில் ஆசனமிட்டு அல்லது நாற்காலியில் அமர்ந்து, அல்லது கட்டிலில் படுத்துக் கொள்ள வேண்டும்.

4. சிகிச்சைக்கு முன்பாக சில நிமிடங்கள் அமைதியாக இருக்க வேண்டும்.

5. தலையில் தொடங்கி கால்கள் வரையில் ஆற்றலையும், ஆராவையும் சுத்தம் செய்ய வேண்டும் (Cleansing).

6. உச்சந்தலை, உள்ளங்கைகள்  அல்லது மனம் மூலமாக ரெய்கி ஆற்றலை உடலுக்குள் கிரகிக்க வேண்டும்.

7. உடலுக்குள் நுழையும் ஆற்றலைக் கவனிக்க வேண்டும்.

9. உடலில் அதிக ஆற்றல் தேவைப்படும் உறுப்புக்கு ஆற்றலைத் திருப்பி விட வேண்டும்.

10. உட்புகும் ஆற்றல் குறையும் போது சிகிச்சை முடிந்துவிட்டது என்று அர்த்தம்.

11. சிகிச்சைக்குப் பிறகு இறைவனுக்கும், இயற்கைக்கும், ரெய்கிக்கும் நன்றி கூற வேண்டும்.

ரெய்கி சிகிச்சையின் மூலமாக அனைத்து வகையான நோய்களையும் குணப்படுத்தலாம். உடல், மனம், ஆற்றல், ஆரா, அமானுஷ்யம் என அனைத்து வகையான தொந்தரவுகளையும் குணப்படுத்தலாம். தினம் தியானம் செய்யும் போது அனைத்து வகையான குறைகளும் நீங்கி எல்லா நலங்களும் உங்களை வந்தடையும்.

ரெய்கி சிகிச்சை அளிக்கும் வழிமுறைகள்


1. சிகிச்சையைத் தொடங்கும் முன் மாஸ்டர் 20 நிமிடங்கள் தியானம் செய்ய வேண்டும்.

2. சிகிச்சைக்கு முன்பு இறைவன், இயற்கை மற்றும் பிரபஞ்ச ஆற்றலின் உதவியை கோர வேண்டும்.

3. நோயாளியை சாயாமல் நாற்காலியில் அமரச் சொல்ல வேண்டும். அல்லது கட்டிலில் படுக்கச் சொல்ல வேண்டும்.

4. சுருக்கமாக ரெய்கி சிகிச்சைப் பற்றிய விளக்கத்தைக் கொடுக்க வேண்டும்.

5. சிகிச்சையை தொடங்கும் முன் நோயாளியை 10 நிமிடங்கள் அமைதியாக இருக்க சொல்ல வேண்டும்.

6. நோயாளி குணமாக வேண்டும் என்ற நோக்கத்துடன் சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.

7. சிகிச்சை அளிப்பவர் தன்னை பாதுகாக்கும் கவசம் செய்ய வேண்டும்.

8. நோயாளிக்கு தலையில் தொடங்கி கால்கள் வரையில் ஆற்றலையும், ஆராவையும் சுத்தம் செய்ய வேண்டும் (Cleansing).

9. தொட்டோ, தொடாமலோ, முத்திரைகள் மூலமாகவோ அவருக்கு ரெய்கி ஆற்றலை அனுப்ப வேண்டும்.

10. தொந்தரவு உண்டான உடல் பகுதிக்கு ரெய்கியை அனுப்ப வேண்டும்.

11. ரெய்கி ஆற்றல் மாஸ்டரின் உடலில் புகுவதையும், பின் நோயாளியின் உடலில் புகுவதையும் கவனிக்க வேண்டும்.

12. நோயாளியின் உடலுக்குள் செல்லும் ஆற்றல் தடைப்படும் போது அல்லது குறையும் போது, குணப்படுத்தும் வேலை முடிந்துவிட்டது என்று அர்த்தம்.

13. நோய் குணமாகும் என்ற நம்பிக்கையை நோயாளிக்கு ஏற்படுத்த வேண்டும்.

14. சிகிச்சைக்குப் பிறகு இறைவனுக்கும், இயற்கைக்கும், ரெய்கிக்கும் நன்றி கூற வேண்டும்.

சிகிச்சை அளிக்கும் உதாரணங்கள்

(தொடாமல் சிகிச்சை அளிக்கும் உதாரணம்) 

(தொட்டு சிகிச்சை அளிக்கும் உதாரணம்) 

ரெய்கி சிகிச்சை- வழிமுறைகள்


ரெய்கி சிகிச்சை என்பது வெறும் ஆற்றலை மட்டுமே துணையாகக் கொண்டு செய்யப்படும் சிகிச்சையாகும். மனிதனின் முழு உடலும், மனமும் ஆற்றலில் இருந்து உருவானவையே. மனிதனுக்கு ஆற்றல் குறையும் போதும், ஆற்றல் சீர்கேடு அடையும் போதும் மட்டுமே நோய்களும், மனநல பாதிப்புகளும் உருவாகின்றன.

ஒரு மனிதனின் உடலுக்குள் இயற்கையின் உதவியைக் கொண்டு, ரெய்கி ஆற்றலை செலுத்தும் போது, அவர் உடலில் ஏற்பட்ட குறைபாடுகள் நிவர்த்தியாகி, ஆரோக்கியமும் மன நலமும் சீராகும்.

ரெய்கியைக்  கொண்டு சிகிச்சை அளிக்கும் வழிமுறைகள்: 

1. மனதினாலும் எண்ணத்தாலும் சிகிச்சை அளிப்பது.

2. வார்த்தைகளால் சிகிச்சை அளிப்பது.

3. பார்வையினால் சிகிச்சை அளிப்பது.

4. தொடாமல் சிகிச்சை அளிப்பது.

5. கைகளால் தொட்டு சிகிச்சை அளிப்பது.

6. நீர், உப்பு, மண், உணவு பொருட்கள் மற்றும் உலோகங்களைக் கொண்டு சிகிச்சை அளிப்பது.


ரெய்கி சிகிச்சை அளிக்கும் முறைகள்


ரெய்கியின் மூலமாக சிகிச்சை அளிக்க பின்பற்ற வேண்டிய முறைகள்:

1. ரெய்கி சிகிச்சையைப் பற்றி நோயாளிக்கு சிறிய விளக்கம் கொடுக்கவும்.

2. நோயாளியிடம் பேசி நோயின் மூலக் காரணத்தைக் கண்டறியவும்.

3. நோயாளியின் தொந்தரவுகள் பேய், பிசாசு, செய்வினை, மந்திரங்கள் போன்றவற்றால் உண்டாகியிருந்தால் level 1 தீட்சை பெற்றவர்கள் சிகிச்சை அளிக்கக் கூடாது.

4. நோயாளியைத் தொட வேண்டிய அவசியம் உண்டானால் முன் அனுமதிப் பெற்றுப் பின்னர் தொடவும்.

5. சிகிச்சையைத் தொடங்கும் முன் மனதாலே அவருக்கு பூரணமான ஆரோக்கியம் திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்யவும்.

6. தொட்டோ, தொடாமலோ, முத்திரைகள் மூலமாகவோ அவருக்கு ரெய்கி ஆற்றலை அனுப்பவும்.

7. நோய் குணமாகும் என்ற நம்பிக்கையை அவருக்கு  ஏற்படுத்தவும்.

8. நோய்களை குணப்படுத்தும் உண்மையான மருத்துவர் என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ள நோய்களை குணப்படுத்தும் 5 வழிமுறைகளை(உணவை உட்கொள்ளும் முறைகள், தண்ணீர் அருந்தும் முறை, உடலுக்கு போதிய ஓய்வு, இரவு உறக்கம், மன அமைதி )ஆகியவற்றை  பின்பற்ற அறிவுறுத்துங்கள்.

9. நோயாளியின் இரகசியங்களைப் பாதுகாத்திடுங்கள்.

10. சிகிச்சை அளிக்கும் முன்பாக இறைவன், இயற்கை மற்றும் ரெய்கியிடம் அனுமதியும், உதவியும் கோருங்கள்.

11. சிகிச்சைக்குப் பிறகும் இறைவனுக்கும், இயற்கைக்கும், ரெய்கிக்கும் நன்றி கூறுங்கள்.

Self Healing - சுய சிகிச்சை


(ரெய்கியின் மூலமாக சுயமாக சிகிச்சை செய்துகொள்ளும் வழிமுறைகள்)