ரெய்கி வகுப்பு
ரெய்கி வகுப்பு
ஹோலிஸ்டிக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹோலிஸ்டிக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஹோலிஸ்டிக் ரெய்கி


ஹோலிஸ்டிக் என்ற வார்த்தைக்கு முழுமை அல்லது முழுமையானது என்று பொருளாகும். ஹோலிஸ்டிக் ரெய்கி, பாரம்பரிய ரெய்கியின் எளிமையாக்கப்பட்ட வடிவமாகும். மனித வாழ்க்கையின் அனைத்து தேவைகளையும் சூழ்நிலைகளையும் உள்ளடக்கியிருப்பதனால் இதற்கு ஹோலிஸ்டிக் ரெய்கி என்று பெயர்.

ஹோலிஸ்டிக் ரெய்கி மனிதர்களின் வாழ்க்கைக்கும், ஆரோக்கியத்துக்கும், அமைதிக்கும், மகிழ்ச்சிக்கும், முழுமையான வழிகாட்டியாகவும் உறுதுணையாகவும் இருக்கும். ஹோலிஸ்டிக் ரெய்கி, ஆற்றல், சக்தி, உடல், மனம், புத்தி, அலைகள், அதிர்வுகள், ஆன்மா, ஆன்மீகம் என பலவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். மனித வாழ்க்கைக்கான முழுமையான விளக்கத்தையும் கொடுக்கும்.

ஹோலிஸ்டிக் ரெய்கியின் வாழ்க்கை நெறிகள் 
ஹோலிஸ்டிக் ரெய்கிக்காக மிக்காவோ உசுயி  அவர்கள் வகுத்த வாழ்க்கை நெறிகளை சற்று திருத்தம் செய்திருக்கிறேன். காரணம் ஜப்பானிய மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்யும் பொழுது மிக்காவோ உசுயி அவர்கள் கூறிய கருத்துக்கள் சற்று மாற்றம் அடைந்திருக்கலாம். ஜப்பானிய மொழியில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்யும் பொழுது தவறான அர்த்தங்களையும் கொடுக்கலாம். அதனால் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு சிறிய மாற்றம் செய்துள்ளேன்.

ஆங்கிலத்தில்
    From today,
  1. Do not anger 
  2. Do not worry 
  3. Be filled with gratitude 
  4. Devote yourself to your duty  
  5. Be kind to all life 

தமிழில் 
   இன்று முதல்,
  1. கோபம் கொள்ளாதே 
  2. கவலைக் கொள்ளாதே, 
  3. நன்றி உணர்வோடு இரு 
  4. உன் கடமையை முழுமையாக செய் 
  5. எல்லா உயிர்களுக்கும் இரக்கம் காட்டு